
டிரைடென்ட் ஆர்ட்ஸ் – ஆர்.ரவீந்திரன் தயாரித்திருக்கும் ஹார்ட்டின் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் கிஷோர் குமார்.
இதில் சிவனாக சனந்த், சாஹித்யாவாக மடோனா செபாஸ்டியன், சாதனாவாக இமயா டி, மணியாக வாட்ஸ்அப் மணி, அங்கிதாவாக டெப்னிதா ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:-இசை: ராஜேஷ் முருகேசன், ஒளிப்பதிவாளர்: முகேஸ்வரன் வி, எடிட்டர்: பரத் விக்ரமன், கலை இயக்குனர்: ஜி. துரைராஜ், பாடல் வரிகள்: விவேக், மோகன் ராஜன், சாரதி, சண்டைக்காட்சி: ரக்கர் ராம்குமார், பிஆர்ஒ : நிகில் முருகன்.
படத்தை பார்ப்போம்;
வட இந்தியாவில் ஜெய்ப்பூரில் நண்பரின் உணவகத்தில் வேலை செய்யும் சனத், ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் இமயா நண்பர்களுடன் சனத் உணவத்திற்க்கு சாப்பிட வருகிறார் இருவரும் நட்பாக பழகுகிறார். அந்த நட்பு பிறகு காதலாக மாறுகிறது மாறினாலும், முதல் காதல் என தன் கல்லூரி காதல் பற்றி சொல்கிறார்,காதல் மறக்க முடியாத வலியால் சனத் அதை ஏற்க மறுக்கிறார் ஒரு கட்டத்தில் இமயாவின் அன்பால் மனம் மாறி காதலிக்க தொடங்கும் சனத், அந்த காதல் திருமணம் வரை செல்ல ஒரு விபத்தில் சிக்கி கடந்த கால நினைவுகளை இழக்கிறார்.அதனால் இமயாவையே மறந்துவிட்டு, தனது முதல் காதலியான மடோனா செபாஸ்டியனை தேடி செல்கிறார் உடன் இமயா செல்கிறார் இறுதியில் சனத் யாருடன் இணைந்தார்? மடோனா செபாஸ்டியன் ஏன் சனத்தை விட்டு பிரிந்தார் ? என்பதே பல திருபங்களுடன் படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
சனத் சிவாவாக காதல் தோல்வி இறுகிய முகம், சாதனாவுடன் பிடிகொடுக்கு பேசாமல் பிறகு காதலை சொல்லுமிடம் ,நினைவுகளை இழந்த பிறகு வேறு மனநிலையிலும் இயல்பாக நடித்திருக்கிறார். .
சாதனாவாக நடித்துள்ள இமாயா, சாஹித்யாவாக மடோனா செபாஸ்டியன், சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார், மணியாக வாட்ஸ்அப் மணி, அங்கிதாவாக டெப்னிதா ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் அளவான நடிப்பை கொடுத்துள்ளார்..
இயக்குனர்
காதல், நினைவிழப்பு ஆகியவற்றை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் கிஷோர் குமார். அனைவருக்கும் பிடிக்கும் விதமாக ரசிக்கும் படியாக படத்தை கொடுத்து இருக்கிறார் பாராட்டு
ஒளிபதிவு & இசை
ஒளிப்பதிவாளர் முகேஷ்வரன்.வி, ஜெய்ப்பூர் சுற்றுலா தளம் மற்றும் தமிழ்நாடு ஊட்டி பசுமை தேயிலை தோட்டம் அழகாக காட்டியிருக்கிறார். ராஜேஷ் முருகேசனின் பாடல்களும் பின்னணி இசையும் கேட்கும் ரகம் படத்திற்கு பலம் சேர்க்கிறது. எடிட்டர்: பரத் விக்ரமன், படத்திற்க்கு தேவையான காட்சிகள் மட்டும் சேர்த்து படத்தின் விறு விறு கூட்டியுள்ளது.
இப்படம் அனைவரும் பார்க்கலாம்
