Sunday, May 31

“பாம்பாட்டம்” திரைப்பட விமர்சனம்.

நான் அவன் இல்லை படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருப்பவர் ஜீவன். நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது ஜீவன் நடிப்பில் இயக்குனர் வி.சி.வடிவுடையான், கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘பாம்பாட்டம்’.

படத்தில் இரட்டை வேடங்களில் அப்பா ஜீவன் (மாணிக்கவேல்) மகன் ஜீவன் (சரவணன்), மல்லிகா ஷெராவத் (மங்கம்மா தேவி), ரித்திகா சென் ( ராதிகா ), யாஷிகா ஆனந்த், சாய் ப்ரியா ( நாகமணி ), வடிவுடையான் (காளி) சுமன், கிரிக்கெட் விளையாட்டு வீரர் சலீல் அங்கோலா, பருத்திவீரன் சரவணன், ரமேஷ் கண்ணா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள் :
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – வடிவுடையான், ஒளிப்பதிவு – இனியன் ஹாரிஸ், இசை – அம்ரிஷ், எடிட்டிங் – சுரேஷ் அர்ஸ், கலை – சண்முகம், ஸ்டண்ட் – சூப்பர் சுப்பராயன், நடனம் – அசோக்ராஜா, புவன், இணை தயாரிப்பு  – பண்ணை ஏ.இளங்கோவன், தயாரிப்பு – ஏ.பழனிவேல். மக்கள் தொடர்பு – மணவை புவன்.

படத்தில் சுதந்திரத்திற்கு முன்னாள் நடக்கும் கதையை காண்பிக்கிறார்கள் மங்கம்மா தேவி முப்படைகளையும் கொண்டு தனது ராஜ்யத்தை உலகறியச் செய்த ராணி மங்கம்மா தேவி (மல்லிகா ஷெராவத்) தனது சமஸ்தானத்தை சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். அந்த சமயத்தில் மகாராஜாவின் ஆஸ்தான  ஜோதிடர் ராணி மங்கம்மா தேவியிடம் நீங்கள் பாம்பு கடித்து இறந்து விடுவீர்கள் என்று கூறுகிறார். இதனால் கோபம் அடைந்து ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லாத ராணி மங்கம்மா தேவி ஜோதிடரை சிறை வைத்து, அந்த சமஸ்தானத்தில் உள்ள அனைத்து பாம்புகளையும் கொள்ளுமாறு உத்தரவிடுகிறார் அனைத்து பாம்புகளையும் கொள்ளப்படுகிறது இதிலிருந்து ஒரு பாம்பு தப்பித்து வந்து ராணி மகாதேவியை கொன்றுவிடுகிறது.

அதற்கு பிறகு ராணி மகா தேவியின் மகளுக்கும் இதே ஆபத்து இருக்கிறது என்று ஜோசியர் கூறுகிறார். இதனால் பாம்புகள் இல்லாத வெளிநாட்டை தேடி செல்கிறார்கள் வெளிநாட்டில் அங்கே வாழ்கிறார்கள்இளவரசி நாகமணி (சாய் பிரியா)நாக தோஷம் முடிந்து சொந்த நாடிற்க்கு திரும்பி வருகிறார்கள்   மக்களுக்கு நல்ஆட்சி செய்ய முற்படும் போது இளவரசி நாகமணியும் அவரது தந்தையும் பாம்பு கடித்து இறந்து விட்டதாக அறிவிக்கப்படுகிறார்கள். அதன் பின்பு ராணியின் ஆவி அந்த அரண்மனையை சுற்றுவதாக ஊர் முழுக்க பேசப்படுகிறது காவல்துறை அதிகாரி அரண்மனையைச் சுற்றி உள்ள மர்மங்களை விசாரிக்க நேர்மையான திறமையான போலீஸ் அதிகாரி மாணிக்கவேல் (ஜீவன்) நியமிக்கப்படுகிறார் மேலும் ராட்சத பாம்பை கொல்லவும் முயற்சி செய்கிறார். இறுதியில் ஜீவன் அந்த அரண்மனைக்குள் வாழும் 60 அடி நீளமுள்ள பாம்பிலிருந்து ராட்சத பாம்பை கொன்றாரா ? இல்லையா? ஜீவன் அந்த அரண்மனைக்கு வர காரணம் என்ன? ராணி மல்லிகா ஷெராவத்தின் ஆவி உண்மையில் இருக்கிறதா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகனாக நடித்திருக்கும் ஜீவன், தன்னால் முடிந்த அளவிற்கு நடிப்பு திறனை வெளிப்படுத்தி இருக்கிறார். அப்பா மாணிக்கவேல் காவல் துறை அதிகாரி  நடிப்பு சிறப்பாக இருந்தது மகன் சரவணம் கொஞ்சம் கவனம் செலுத்திருக்கலாம் !
ராணியாக வருகிற மல்லிகா செராவத் கம்பீரத் தோற்றத்துடன் வந்து ஆங்காங்கே நடிப்பில் மிரட்டி விட்டு சென்றிருக்கிறார்.இளவரசியாக வருகிற ரித்திகா சென் பயமும் பதட்டமும் கொண்ட நடிப்பை கொடுத்து இருக்கிறார். சுமன், ரமேஷ் கண்ணா, லிவிங்ஸ்டன், கராத்தே ராஜா, சரவண சக்தி, பருத்திவீரன் சரவணன் ஆகியோர் தன் பங்களிப்பை சரியாக  செய்து இருக்கிறார்கள்

இயக்குனர் :ராஜ வம்சத்தை சுற்றி நடக்கும் மர்மத்தை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் வடிவுடையான். அரண்மனை, ராட்சத 60 – அடி பாம்பு என பிரம்மாண்டமாக கொடுத்து  மிரட்டி இருக்கிறார். ஆனால், பெரியதாக எடுபடவில்லை. கிராபிக்ஸ் காட்சிகள் அதிகம் இருந்தாலும் சில இடங்களில் மோசமாக இருக்கிறது. பிரம்மாண்டமாக தெரியவில்லை முதல் பாதி மெதுவாக சென்றாலும் இரண்டாம் பாதியில் நிறைய திருப்பங்களை இயக்குனர் கொடுத்து இருக்கிறார் ஆனால், சில காட்சிகளின் நீளத்தை குறைத்து இருந்தால்  இன்னும் நன்றாக இருந்திருக்கும்

அம்ரீஷ் பின்னணி இசை மிரட்டி இருக்கிறார் சில இடங்களில் அதிக இரச்சலையும் கொடுத்து இருக்கிறார்.
இனியன் ஜெ ஹாரிஸின் ஒளிப்பதிவை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது. இன்னும் கவனம் செலுத்தி இருந்தால் கூடுதலாக ரசித்து இருக்கலாம். பெரிய (சிறிய) பட்ஜெட் படமாக இருந்தாலும் இயக்குனர் கதைகளத்தை நன்றாக கொண்டு சென்றிருக்கிறார். ஆனால், சிஜி காட்சியில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தால் படம் சூப்பராக இருந்திருக்கும். மொத்தத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜீவனுக்கு இந்த பாம்பாட்டம் படம் கை  கொடுக்கும் என்று கூறப்படுகிறது.

இப்படம் அனைவரும் பயமின்றி பார்க்கலாம் ..

Rating 3/5