Thursday, April 16

“சாத்தான் தி டார்க்” திரை விமர்சனம்.

இ.பி.எஸ் பிக்சர்ஸ் சார்பில் எட்வர்ட் தயாரிப்பில், பாப்பின்ஸ் ஸ்டூடியோஸ் வழங்கும் இயக்குனர் மணிகண்டன் ராமலிங்கம் எழுதி இயக்கியுள்ள படம்; “சாத்தான் – தி டார்க்” இதில் எஃப்.ஜே (பிரடெரிக் ஜான்), ஆய்ரா, சாந்தினி தமிழரசன், மோனா பெத்ரே, ஸ்ரீஜா ரவி, தயாரிப்பாளர் எட்வர்ட் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள் : ஒளிப்பதிவு – பாலா ஜி.ராமசாமி, இசை – அஷ்வின் கிருஷ்ணா,எடிட்டர்  – ராஜ்குமார், மக்கள் தொடர்பு- ஸ்ரீ வெங்கடேஷ்.

படத்தை பார்ப்போம்:

1980 கால கட்டம், தமிழ்நாட்டில் அஸ்தினாபுரம் என்ற மலை கிராமம். அந்த மலை கிராமத்தில் உள்ள மக்கள் பலவேறு மூட நம்பிக்கை கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் இறைவன் இல்லை சாத்தானை மட்டும் வழிபடுகிறார்கள்  அந்த ஊரில் சாத்தானுக்கு தான் பலி கொடுக்கிறார்கள்.

ஒரு அழகான பசுமை நிறைந்த மலை கிராமம் அந்த கிராமத்தில் ஒரு அம்மா இரண்டு மகள்கள் வாழ்ந்து வருகிறார்கள். இரண்டு மகள்களும் பக்கத்து ஊரில் உள்ள ஒரு கான்வென்டில் படிக்கிறார்கள். ஒரு நாள் அம்மாவின் உடலிலும், மனதிலும் பல்வேறு மாற்றங்கள் நிகழ்கிறது. மூத்த மகள் கவனிக்கிறார் எனக்கு ஒன்றும் இல்லை  அம்மா கூறுகிறார் அந்த ஊரில் பல்வேறு மர்மமான மரணங்கள் நிகழ்கிறது. காவல் துறைக்கு எந்த துப்பும் கிடைக்கவில்லை. இரண்டு மகள்களில் மூத்த மகளை ஒரு தலையாக காதலிக்கும் தன் வகுப்பில் படிக்கும்  பையன் தான் காதலிக்கும் பெண்ணின் வீட்டிற்கு வந்து பார்த்ததில் இந்த வீட்டில் சில மர்மங்கள் இருப்பதாக தெரிய வருகிறது அதே நேரத்தில் இந்த ஊரில் இருப்பவர்களுக்கும், நடக்கும் மரணங்களுக்கும் தொடர்பு இருப்பதை கண்டுபிடிக்கிறான். இந்த கண்டுபிடிப்பின் விளைவாக பல்வேறு மோசமான விளைவுகளை  சந்திக்கிறான். இந்த விளைவுகளை எப்படி சமாளித்தான் என்று  திகில், மர்மங்கள்  நிறைந்த பல திருபபங்களுடன் படத்தின் மீதிகதை.

சினிமாக்களிலும், சீரியல்களிலும் அமைதியான கேரக்டரில் நடித்து வரும் மோனாபத்ரே இவரை சுற்றி தான் கதை நகர்கிறது இந்த படத்தில் ஒரு சைக்கோவாக, அன்பான அம்மாவாக நடித்து கதைக்கு மிக பெரிய வலு சேர்த்திருக்கிறார்.

ஹீரோ பேட்ரிக் ஜான், அயரா நடிப்பு அனைவரை கவனிக்க வைக்கிறது  மற்றும்.குழந்தை நட்சத்திரம் கதாபாத்திரத்தை உள்வாங்கி சிறப்பாக நடித்துள்ளார்கள்.

படத்தின் ஒளிப்பதிவு, சிறப்பாக ஒளிவீச்சு பதிவு செய்துள்ளார்  எடிட்டிங் .. படத்தின் நீளத்தை கொஞ்சம் குறைத்திருக்கலாம் லொகேஷன், கதாபாத்திர வடிவமைப்பு, நடிகர், நடிகைகள் தேர்வு, நடிப்பு என அனைத்து அம்சங்களும் சிறப்பாக இருக்கிறது. பின்னனி இசை மற்றும் சப்தம் ஒவ்வொரு காட்சியிலும் பயத்தை நம் மனதில் ஏற்படுத்துவதில் சப்தத்தின் பங்களிப்பு முக்கியமானது.

கடவுள் – சாத்தான் கதைகளை மைய்யப்படுத்தி பல படங்கள் ஹாலிவுட்டில் வந்து விட்டன. இது போன்ற இன்னொரு படம் தான் இது என்று பார்க்க தொடங்கினால் கதை பழையது தான் என்றாலும் சொல்லப்பட்ட விதம் மிக சிறப்பாக உள்ளது. படம் ஆரம்பித்து சில காட்சிகளுக்கு பிறகு  வரும் திகில் உணர்வு படம் முடியும் வரை அடுத்தது என்ன என்ற எதிர்ப்பார்ப்பு  இருக்கிறது. துண்டாக கிடக்கும் விரல்கள், கண் என பல பயமுறுத்தும் இடங்கள் உள்ளன. இந்த காட்சிகள் வரும் போது ரசிகர்கள் சிலர் தன்னை அறியாமல் கத்துவதை கேட்க முடிந்தது. ஆனால் ஏதாவது ஒன்று வந்து விடும் என்ற பய உணர்வு மட்டும் வருகிறது.

படத்தின் தொடக்கத்தில் வாய்ஸ் ஓவரில் சில கடந்த கால சம்பவங்களை சொல்கிறார்கள். இது தேவையற்ற ஒன்றாக இருக்கிறது . படம் முடியும் போது அடுத்த பாகத்துக்கு லீட் தருகிறார்கள். அடுத்த பாகத்தில் இது போன்ற வாய்ஸ் ஓவர் இல்லாமல் இருப்பது நல்லது

சாத்தான்: தி டார்க் – நேர்த்தியான,  கதை  சரியான ஹாரர், த்ரில்லர் ரசிகர்களுக்கு செமவிருந்து

குறிப்பாக குழந்தை , சிறியவர்கள் பார்க்க கூடாது

வயது வந்த ஆண் /பெண் பார்க்கலாம் .