“சாத்தான் தி டார்க்” திரை விமர்சனம்.
இ.பி.எஸ் பிக்சர்ஸ் சார்பில் எட்வர்ட் தயாரிப்பில், பாப்பின்ஸ் ஸ்டூடியோஸ் வழங்கும் இயக்குனர் மணிகண்டன் ராமலிங்கம் எழுதி இயக்கியுள்ள படம்; "சாத்தான் – தி டார்க்" இதில் எஃப்.ஜே (பிரடெரிக் ஜான்), ஆய்ரா, சாந்தினி தமிழரசன், மோனா பெத்ரே, ஸ்ரீஜா ரவி, தயாரிப்பாளர் எட்வர்ட் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள் : ஒளிப்பதிவு – பாலா ஜி.ராமசாமி, இசை – அஷ்வின் கிருஷ்ணா,எடிட்டர் – ராஜ்குமார், மக்கள் தொடர்பு- ஸ்ரீ வெங்கடேஷ்.
படத்தை பார்ப்போம்:
1980 கால கட்டம், தமிழ்நாட்டில் அஸ்தினாபுரம் என்ற மலை கிராமம். அந்த மலை கிராமத்தில் உள்ள மக்கள் பலவேறு மூட நம்பிக்கை கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் இறைவன் இல்லை சாத்தானை மட்டும் வழிபடுகிறார்கள் அந்த ஊரில் சாத்தானுக்கு தான் பலி கொடுக்கிறார்கள்.
ஒரு அழகான பசுமை நிறைந்த மலை கிராமம் அந்த கிராமத்தில் ஒரு அம்மா இரண்டு மகள்கள் வாழ்ந்து வருகிற...
