
18 கிரியேட்டர்ஸ் சார்பில் சசிகலா பிரபாகரன் தயாரிக்க, பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள கிரைம் லீகல் டிராமா தொடர் ‘சட்டமும் நீதியும் 2’. ஆறு எபிசோடுகள் ஜீ5 ஒரிஜினல்; ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
நடிகர்கள் :பருத்தி வீரன் சரவணன், வரலட்சுமி சரத்குமார், லாவண்யா, பிரேம்குமார், கல்லூரி வினோத், கவிதா பாரதி, ஆறு பாலா, பீட்டர் ஜே. சந்திரன், ஷிவின், பருல் சம்பரியா, பவன், அக்ஷயா வி, பிரியங்கா ரோபோசங்கர், அபர்ணா சுந்தர்ராமன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப குழுவினர்கள்:-இசை-விபின் பாஸ்கர், ஒளிப்பதிவாளர் எஸ்.கோகுலகிருஷ்ணன், படத்தொகுப்பு – ஆதிஸ்வரன்.ஆர், திரைக்கதை- பாலாஜி செல்வராஜ் மற்றும் பிரதீப் மரியான், பிஆர்ஒ – ஏய்ம் சதீஷ்.
கதை கரு
நீதியின் போராட்டம் :போலீஸ் இன்ஸ்பெக்டர் சுட்டு கொல்லப்பட்டார் ஐந்து போலீஸ் கைது கணவவரை கொன்றவர்களுக்கு தண்டனை கொடுக்க போராடும் மனைவி..
படத்தை பார்ப்போம்;
பார் கவுன்சில் தலைவராக இருக்கும் பிரபல பெண் வழக்கறிஞரின் (வரலக்ஷ்மி சரத்குமார்) கணவர், உயர் போலீஸ் அதிகாரி (பிரேம்) துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்படுகிறார். இந்தக் கொலை வழக்கில் அவருடன் பணியாற்றிய போலீஸ் அதிகாரிகளான கவிதா பாரதி, ஆசைபாலா, கல்லூரி வினோத் உள்ளிட்ட கைதுசெய்யப்பட்டு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு ஆதரவாக ஆஜராக வக்கீல் சங்கம் தடை ! பார் கவுன்சில் முடிவு ! இதனால் எந்த வக்கீலும் ஆஜராக முன் வரவில்லை இந்த சமயத்தில் குற்றவாளிக்கு ஆதரவாக பருத்தி வீரன் சரவணன் வாதிட்ட வருகிறார். இன்னொரு பக்கம் கணவரின் கொலைக்குக் காரணமானவர்களுக்குக் கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் பிரேமின் மனைவியும் வழக்கறிஞருமான வரலட்சுமி சரத்குமார். மறுபுறம், கைது செய்யப்பட்ட போலீஸ்காரர்கள் குற்றவாளிகள் அல்ல; நிரபராதிகள் என்று வாதாடுகிறார் வழக்கறிஞர் பருத்திவீரன் சரவணன். ஒருபுறம் கணவனை இழந்த மனைவியின் நீதிக்காக போராட்டம்; பல திருபங்களுடன் வெப் தொடர்
நேர்மையான நோட்டரி வழக்கறிஞரான சரவணனின் இயல்பான நடிப்பு தொடருக்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறார். அவருக்கு ஏதிர் வழக்கறிஞராக வரலட்சுமி சரத்குமாரின் நடிப்பும் பொருத்தமான கதாபாத்திரத்தில் அசத்தியிருக்கிறார் இங்கிலீஷ் வார்த்தைகளில் அதிகம் பயன்படுத்தி வாதியிடுவது ரசிக்கும் படியாக இருந்தது வக்கீலுக்கு உதவியாளரா லாவண்யா,போலீஸாக கல்லூரி வினோத், ஆசைபாலா, பிரேம், போலீஸ் சப்இன்ஸ்பெக்டராக கவிதா பாரதி என இதில் நடித்திருக்கும் அனைவரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்துள்ளனர்.
கோகுலகிருஷ்ணனின் ஒளிப்பதிவும், விபின் பாஸ்கரின் இசை பிண்ணனி இசையும் அதற்கு மோகன்ராஜ் எழுதி இருக்கும் பாடல்கள் தொடருக்கு பெரிய பலம்.
முதல் சீசனைப் போலவே, இரண்டாம் சீசனும் ஒவ்வொரு எபிசோடிலும் திருப்பங்களுடன் விறுவிறுப்பாக காட்சிகளின் ஓட்டம் நேர்த்தியான திரைக்கதையும் அடுத்தது என்ன என்ற எதிர்பார்ப்பு கூட்டுகிறது இத்தொடரில் கத்தியின்றி இரத்தம்யின்றி பெண்களின் ஆபாச காட்சிகள் இல்லை தரமான வெப்தொடர் எல்லோரும் ரசிக்கும்படி சொல்லியிருக்கிறார் இயக்குநர் பாலாஜி செல்வராஜ். பாராட்டுக்கள்.வாழ்த்துக்கள்
ரேட்டிங் 4:5










