
கனா புரொடக்சன்ஸ் சார்பில் விபி கம்பைன்ஸ் உடன் இணைந்து இயக்குநர் விக்கி தயாரித்திருக்கும் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் நிதின் வேமுபதி.
இதில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், ஒய்.ஜி.மகேந்திரன், சரவண சுப்பையா, சத்யன், பாலாஜி சக்திவேல், ஜார்ஜ் மரியான், கவிதா பாரதி, இந்திரஜா, இயக்குனர் நிதின் வேமுபதி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:-திரைக்கதை வசனம் எஸ். ஏ. சந்திரசேகர், மார்டின் தன்ராஜ் ஒளிப்பதிவு, சித்தார்த் விபின் இசை, கலை இயக்கம் வனராஜ். பீ. லெனின் மேற்பார்வையில் மாருதி எடிட்டிங் செய்துள்ளார். மக்கள் தொடர்பு : சக்தி சரவணன்.
கொடைக்கானல் பகுதியில் வாழ்ந்து வரும் பிரபலமான வழக்கறிஞர் எஸ்.ஏ.சந்திரசேகர், கடந்த பத்து ஆண்டுகளாக எந்த வழக்கையும் எடுக்காமல் இருக்கிறார்.
இந்நிலையில் ஜான்சி என்கிற நாய் தனது குட்டியுடன் சாலையில் சென்று கொண்டிருந்தபோது தன் கண்ணெதிரேயே ஒருவன் காரை விட்டு ஏற்றிக்கொன்று விட்டு செல்கிறான். அந்தத் தாய் நாய் குரைத்துக் கொண்டே காரைத் துரத்திச் செல்கிறது. கார் நிற்காமால் வேகமாக சென்றுவிட்டது நாய் போலீஸ் ஸ்டேஷன் செல்கிறது, அங்கேயும் அது விரட்டியடிக்கப்டுகிறது அங்கிருந்து வழக்கறிஞர் எஸ்.ஏ.சந்திரசேகர் வீட்டுக்குச் செல்கிறது. அங்கே காவலாளி அங்கேயும் அதை துரத்தியடிக்கப்படு , மறுபடியும் எஸ்.ஏ சந்திரசேகர் வீட்டுக்கு வருகிறது. தொடர்ந்து நாய் வருவதை பார்த்த . எஸ்.ஏ.சந்திரசேகர், அது ஏதோ சொல்ல விரும்புகிறது என்று நாய் உணர்வுகளை புரிந்து கொண்ட எஸ்.ஏ.சந்திரசேகர், கோர்ட்டில் வாதாட முடிவு செய்கிறார்.இறுதியில் எஸ்.ஏ.சந்திரசேகர், நாய்க்காக வாதாடி ஜெய்த்தாரா? குட்டி நாயை வண்டியில் ஏற்றி கொன்றது யார்? எதனால் கொன்றான் நாய்க்கு அவனுக்கு என்ன சம்பந்தம் ? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
கதையின் முதன்மை கதாபாத்திரத்தில் வழக்கறிஞராக நடித்திருக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர் நீதிமன்றத்தில் பாதிக்கப்பட் நாய்க்காகவும் நீதிக்காவும் நிதானமாக வாத திறைமையாால் சட்ட நாயகனாக இந்த வயதிலும் வேகமாக சுறுசுறுப் பாக இருக்கிறார் இவருக்கு ஏற்ற கதாபாத்திரம் பொருத்தமாக இருந்தது .
ஜான்சியாக நாய் முக்கியமான கதாபாத்திரமாக நடித்துள்ளது நாய் நல்ல பயிற்ச்சி கொடுக்கப்பட்டுள்ளது.
நீதிபதியாக நடித்திருக்கும் ஒய்.ஜி.மகேந்திரன், போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் சரவண சுப்பையா, நாய்க்கு எதிராக வதாடும் வழக்கறிஞராக நடித்திருக்கும் பாலாஜி சக்திவேல், மற்றும்சத்யன், ஜார்ஜ் மரியான், இந்திரஜா ரோபோ சங்கர் என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.
கார் ஏற்றி கொல்லப்பட்ட குட்டி நாய்க்கா அதன் தாய் நாய், நீதி கேட்டு போராடும் போராட்ட கதையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் நிதின் வேமுபதி. பார்வையற்றவரை நாய்குட்டியை கார் ஏற்றி கொன்றவனை என்னால் அடையாளம் காட்ட முடியும் என்று நீதிமன்றத்திற்க்கு வந்து கூண்டில் ஏறி நடந்த சம்பவத்தை கண்ணால் பார்த்த சாட்சியாக சொல்லுவது சித்தரித்திருப்பது சிறப்பு. நாயிடம் சிறப்பாக வேலை வாங்கி இருக்கிறார்.
இப்படத்தில் பணியாற்றி அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள் சிறப்பாக நேர்த்தியாக பணியாறறியுள்ளனர்.
நாய் பற்றி பல படங்கள் வந்தாலும் இந்த படம் முற்றிலும் புதிய கதை களம் குடும்பத்துடன் பார்க்கும் படம்










