“கூரன் “திரைப்பட விமர்சனம்.
கனா புரொடக்சன்ஸ் சார்பில் விபி கம்பைன்ஸ் உடன் இணைந்து இயக்குநர் விக்கி தயாரித்திருக்கும் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் நிதின் வேமுபதி.
இதில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், ஒய்.ஜி.மகேந்திரன், சரவண சுப்பையா, சத்யன், பாலாஜி சக்திவேல், ஜார்ஜ் மரியான், கவிதா பாரதி, இந்திரஜா, இயக்குனர் நிதின் வேமுபதி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:-திரைக்கதை வசனம் எஸ். ஏ. சந்திரசேகர், மார்டின் தன்ராஜ் ஒளிப்பதிவு, சித்தார்த் விபின் இசை, கலை இயக்கம் வனராஜ். பீ. லெனின் மேற்பார்வையில் மாருதி எடிட்டிங் செய்துள்ளார். மக்கள் தொடர்பு : சக்தி சரவணன்.
கொடைக்கானல் பகுதியில் வாழ்ந்து வரும் பிரபலமான வழக்கறிஞர் எஸ்.ஏ.சந்திரசேகர், கடந்த பத்து ஆண்டுகளாக எந்த வழக்கையும் எடுக்காமல் இருக்கிறார்.
இந்நிலையில் ஜான்சி என்கிற நாய் தனது குட்டியுடன் சாலையில் சென்று கொண்டிருந்தபோது தன் கண்ணெதிரேயே ஒருவன...
