
ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தனுஷ் , க்ரித்தி சனோன் , பிரகாஷ் ராஜ் நடித்துள்ள திரைப்படம் ‘தேரே இஷ்க் மே’ . இசை ஏ.ஆர் ரஹ்மான் நவம்பர் 28 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகியுள்ளது
படத்தை பார்ப்போம்:
இந்திய விமானப்படையின் வீரராக இருக்கும் தனுஷ், தனது கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல், தனக்கு மேல் உள்ள அதிகாரிகள் சொல் பேச்சை கேட்பதில்லை மனம் போக்கில் போகிறார் மேல் அதிகாரி தனுஷை சைக்காலஜி மருத்துவரிடம் கவுன்சிலிங் எடுக்க வேண்டும் என உத்தரவிடப்படுகிறது. இந்த உத்தரவு கதாநாயகி க்ரித்தி சனோன் யிடம் வருகிறது , தானே முன் வந்து தனுஷுக்கு கவுன்சிலிங் தருவதாக கூறுகிறார். இருவரும் சந்திக்க பிளாஷ் பேக். ஆரம்பமாகிறது
தனுஷ் கல்லூரி படிக்கும் போது . முரட்டு பயலாக அடிதடி ரகளை ரவுடிசம் கெத்தாக வளம் வருகிறார் இவர் மீது கல்லூரில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்தும் அடங்க மறுக்கிறார்
அதே கல்லூரியில் படிக்கு மாணவி க்ரித்தி சனோன் மனிதர்கள் பற்றி ஆய்வறிக்கை செய்து கொண்டு இருக்கிறாள் எப்படிப்பட்ட , கோபகாரன் முரட்டு மனிதனாக இருந்தாலும், அவரை சகமனிதனாக மாற்ற முடியும் என நம்புகிறார் க்ரீத்திசனோன் முரட்டு .மனிதராக இருக்கும் தனுஷை மாற்றிவிட்டால், கீர்த்தி சனோன் ஆய்வறிக்கை நிறைவு பெறும். இதனால் தனுஷுடன் பழக ஆரம்பிக்கிறார். அழகான பெண் பழகினால் கல் நெஞ்சும் கரைந்து விடும் அப்படிதான் தனுஷ் முரட்டு குணம் அடங்கியது சகமனிதனாக மாறினார் கீர்த்தி சனோன் மனிதர்களின் ஆய்வறிக்கை வெற்றி பெருகிறார் ஆனால் கல்யாணம் என்று வரும் போது வேறு ஒருவரை திருமணம் செய் தயாராகிறாள் நிச்சயதார்தம் விழா நடக்கிறது இதை தெரிந்து கொண்ட தனுஷ் நிச்சயார்த்த விழாவில் மிருக மனிதனாக மாறி பெட்ரோல் பாட்டில் வீசி பெரிய கலாட்ட செல்கிறார் போலீஸ் கைது செய்து காவல் நிலை வைத்துள்ளது தனுஷ்வின் அப்பா பிரகாஷ்ராஜ். விபத்தில் இறக்கிறார் இவர் எப்படி இறக்கிறார் தனுஷ் காவல் நிலையததிலிருந்து எப்படி வெளியே வந்தார் .இந்திய விமானப்படையின் வீரராக எப்படி சேர்ந்தார் படத்தின் மீதி கதை
நடிகர்கள் தனுஷ் கல்லூரியில் முரட்டு பயலாகவும் விமானப்படை பைலட் வீரார் வேக நடை மிடுக்கான உடை . காதல் தோல்வி, காதலியை மீண்டும் பார்க்கிற இடங்களில் உணர்ச்சி பூர்வமான காட்சிகளில் அசத்துகிறார்
கிர்த்தி சனோன் தனுசை சில இடங்களில் மிஞ்சுகிறார் ஹீரோயின் . காதல் முறியும் இடங்களில், மீண்டும் பல ஆண்டுகள் கழித்து காதலனை பார்க்கும் இடங்களில், அப்புறம், கிளைமாக்சில் குடிகார கர்ப்பிணி பெண்ணாக துாள் கிளப்பி இருக்கிறார். படத்துக்கு அவர் நடிப்பு அவ்வளவு பலம். தனுஷ் அப்பாவாக வரும் பிரகாஷ்ராஜ் வழக்கம்போல் நடிப்பு தான் .அதேசமயம், ஹீரோயின் அப்பாவாக வரும் டோட்டாராய் சவுத்ரி ஒரு ஐஏஎஸ் ஆபீசராக, பல கேள்விகள் கேட்கும் அப்பாவாக மனதில் நிற்கிறார்.
இசை ஏ.ஆர் ரஹ்மான் படத்திற்க்கு பெரிய பலம். ஒளிப்பதிவு சூப்பர், எடிட்டர் படத்திற்க்கு தேவையான காட்சி மட்டும் சேர்த்துள்ளார்
ஆனந்த் எல் ராய் இயக்கம் வித்தியசமான புது கதை முயற்ச்சி பாராட்டுகள்
மொத்தத்தில் தனுஷ் வேற லெவல் “தேரே இஷ்க் மே” திரைப்படம் ரசிகர்கள் கொஞ்சம் பொறுமை காக்க வேண்டும்










