
ஜிவிபி பிக்சர்ஸ் சார்பில் ஜி.வி.பெருமாள் தயாரித்திருக்கும் சரீரம் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ஜி.வி.பெருமாள்.
இதில் தர்ஷன் – பிரியன், சார்மி – விஜயலட்சுமி, வில்லன் – ஜே.மனோஜ், நீதிபதி – பாய்ஸ் ராஜன், டாக்டர் – ஷகீலா, வழக்கறிஞர் – மதுமிதா, கதாநாயகி அப்பா -புதுப்பேட்டை சுரேஷ், நாயகி அம்மா – கௌரி, வழக்கறிஞர் – மிலா, இன்ஸ்பெக்டர் – ஜி.வி. பெருமாள் மலைச்சாமி ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:- இசை – பாரதிராஜா, ஒளிப்பதிவு – டோர்னலா பாஸ்கர், பரணி குமார், எடிட்டிங் – லக்ஷ்மன், நடன இயக்கம் – மனோஜ், ஸ்டண்ட் – தவசி ராஜ், பாடலாசிரியர் – குமாரவேலன், வேதகிரி, அலெக்ஸ், எக்சிக்யூட்டிவ் புரடியூசர் – சரத்குமார், மக்கள் தொடர்பு – மணி மதன்
கதை கரு
இயற்கையில் நாம் எப்படி படைக்கப்பட்டிருக்கிறோமோ அப்படியே வாழ்வதுதான் விபரீத ஆசை விபரீத முடிவு
படத்தை பார்ப்போம்
கல்லூரியில் படிக்கும் ஆதரவு இல்லாதவன் ப்ரியன் (புதுமுகம் :தர்ஷன்) தன் தோழியான விஜயலட்சுமியை (சார்மி) உயிருக்கு உயிராக காதலிக்கிறார் சார்மி பணக்கார வீட்டுப் பெண் என்பதால் வழக்கம் போல் அப்பா எதிர்ப்பு இதனால் தன் மனைவியின் தம்பி மனோஜ்க்கு சார்மி திருமணம் செய்து வைக்க முடிவெடுகிறார் இதை தெரிந்து கொண்ட சார்மி தர்ஷனுடன் வீட்டை விட்டு ஓடிப் போகிறார் சார்மி. அவளது மாமன் தர்ஷனை கொலை செய்ய அடியாட்கள் வைத்து வெறித்தனமாக தேடுகிறார் எங்கும் கிடைக்கவில்லை காதலர்கள் தர்ஷன் சார்மியும் தற்கொலை செய்து முயல்கிறார்.இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்தனர் இருவரும் ஒரு முடிவு எடுத்தனர் இனிமேல் நாம் சாகக்கூடாது – பிரச்சனை சமாளிக்க வேண்டும் இருவரும் திடீர் விபரீத முடிவு எடுக்கிறார்கள். அது ‘பாலினம் மாறுவது’ .அதாவது தர்ஷன் திருநங்கை ( பெண்ணாகவும் )சார்மி திருநம்பியாக ( ஆணாகவும்) அறுவை சிகிச்சை செய்து கொள்கிறார்கள். இரண்டாம் கட்ட பரிசோதனை மருத்துவரரிடம் செல்கிறார்கள் மருத்துவர்க்கு அதிர்ச்சி சார்மி கற்பமாக இருக்கிறாள் கடைசியில் இந்த பிரச்சனை எப்படிதான் முடிவுக்கு வந்தது என்பது மீதிக் கதை.
நடிகர்கள்
தர்ஷனும் பிரியன் நடிப்பு :நடனம் ,ஆகிஷன் கதையுடன் கதாபாத்திரம் பொருத்தமாக இருந்தது
நாயகி சார்மி எதார்த்தமான அழுத்தமான நடிப்பை அழகாகவும் கொடுததுள்ளார்
தர்ஷனும் சார்மியும் காதலர்கள் இருந்த போது பொருத்தமாக இருந்தது திருநங்கையாக /திருநம்பியாக மாறும் போகும்போது சார்மி மிகவும் பொருந்தம் இருந்தது தர்ஷனை பிரியன் திருநங்கையாக பொருந்தவில்லை
திருநங்கை திருநம்பியாக மாற்றும் அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர் ஷகீலா. சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார்
போலீஸ் இன்ஸ்பெக்டராக இயக்குனர் தயாரிப்பாளர் ஜி.வி.பெருமாள் சரியாக பொருத்தமாக இருக்கிறார். பெண் சபல ஜொல்லு போலீஸ்ஸாக சிறப்பான நடிப்பை துணிச்சலுடன் நடித்துள்ளார் பாரட்டுகள்
திருநங்கைகளைப் பெருமைப்படுத்தும் விதத்தில் இந்தப் படத்தை வரவேற்கலாம். அதுவும் கோர்ட்டில் இவர்களுக்காக வாதாடும் திருநங்கை மிலா பாராட்டுகள்
ஒரு அரசு தரப்பு வழக்கறிஞராக இருந்து கொண்டு திருநங்கைகளை கேளி கேவலமாக நடத்தும் மதுமிதாவின் மற்றும் இப் படத்தில் நடித்த அனைவரும் சிறப்பாக நடித்துள்ளார்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:– இசை – பாரதிராஜா, ஒளிப்பதிவு – டோர்னலா பாஸ்கர், பரணி குமார், எடிட்டிங் – லக்ஷ்மன் அனைவரின் பங்களிப்பு சிறப்பாக இருந்தது.
படத்தின் இயக்குனர் /தயாரிப்பாளர். நடிகர் ஜி.வி. பெருமாள் மலைச்சாமி சமூகத்தில் நடக்கும் அவலங்களை சமூக அக்கறையுடன் காதலுக்காக பாலின மாற்றம் செய்வதின் ஏற்படும் விபரீத விளைவுகளை படம் பேசுகிறது.
புதிய கதை களம்., முயற்ச்சிக்கு வாழ்த்துகள் பாராட்டு










