Thursday, April 16

“சல்லியர்கள்”திரை விமர்சனம்.

Salliyargal Movie Direct OTT Release

கிட்டு இயக்கத்தில் கருணாஸ் நடித்த ஈழத்து மண்ணில் நடந்த உண்மை சம்பவங்களை தழுவி எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் சல்லியர்கள்.  இப்படம் ஜனவரி 1-ந் தேதி புத்தாண்டன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆக இருந்தது   எண்ணிக்கை மிக குறைவாக 27 தியேட்டர் மட்டும் கிடைத்ததால்  போதிய தியேட்டர்கள் கிடைக்காததால் நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யப்பட்டு உள்ளது.

படத்தை பார்ப்போம்:

தமிழ் ஈழ மக்களும், விடுதலைக்காக போராடிய போராளிகளும் சிங்கள ராணுவத்தால் அனுபவித்த கொடுமைகள் ஏராளம், அதில் ஒன்றை கூறுகிறது இந்த சல்லியர்கள் .. போராளிகளின் மருத்துவ குழுவை அழித்தால், அவர்களை எளிதில் வீழ்த்தி விடலாம் என்று திட்டம் போடும் சிங்கள ராணுவம், போராளிகளின் மருத்துவ பணிகளுக்கு எதிராக செயல்பட தொடங்குகிறது.அந்த வகையில், விடுதலைப் போராளி இயக்கத்தின் மருத்துவப் பிரிவு எப்படி இயங்கியது, அவர்களது பதுங்கு குழி மருத்துவமனை மற்றும் தன் .உயிரை பொருட்படுத்தாமல்  அதில் பணியாற்றிய மருத்துவர்களின் உண்மையான பணி நேர்மையான நடத்தை அவர்களின் மனிதநேயம் எதிரிகளுக்கும் உதவும் மனிதத்தன்மையும், சிக்கள ராணுவத்தின் மிருகத்தன்மையையும் எடுத்து சொல்லும் படைப்பு தான் ‘சல்லியர்கள்’.

நடிகர்கள்

மருத்துவர் நந்தினி கதாபாத்திரத்தில் கதையின் நாயகியாக நடித்திருக்கும் சத்யதேவி, கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். அளவான பேசுதல்,  வேகமான  சுறுசுறுப்பாக செயல்பாடு பதுங்கு குழியில் .சுழன்று பணியாற்றும்  தமிழ் ஈழ போராளி மருத்துவர்களை நம் கண் முன் நிறுத்தியிருக்கிறார். இவருக்கு ஒரு சபாஷ் கொடுக்கலாம், ஒரு நடிகையாக அல்லாமல் ஒரு மருத்துவ போராளியாகவே வாழ்ந்து அனைத்து பார்வையாளர்கள் அனைவரின் கவனத்தை பெற்றார்.

மருத்துவர் செம்பியன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மகேந்திரன், தோற்றத்தில் மட்டும் இன்றி நடிப்பிலும் வித்தியாசத்தை காண்பித்திருக்கிறார்.அவரது கதாபாத்திரத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது.

நாயகியின் தந்தையாக   நடித்திருக்கும் சேது கருணாஸ், ஒரு சில காட்சிகள் வந்தாலும் நம் மனதில் நிலைத்து நிற்கிறார் .சிங்கள ராணுவம் தன்னையும் , தன் மகனை சுடும் போது தன் மகனுக்கு அவர் சொல்லும் வார்த்தை மகனே நெஞ்சை நிமிர்ந்து காட்டு தலையை குனியாத  சொல்லும்  வசனங்கள் தமிழனின் வீரத்தையும் அடையாளத்தையும் காட்டுகிறது சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார் ..

சிங்கள ராணுவ அதிகாரிகளாக நடித்திருக்கும் திருமுருகன், சந்தோஷ், மோகன் அனைவரும் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வு. மற்றும் இப்படத்தில் நடித்த அனைவரும் சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளார்.

காதலர்களாக அறிமுகமாகி பிறகு போராளிகளாக பார்வையாளர்கள் மனதில் இடம் பிடித்து விடுகிறார்கள் நாகராஜ் – பிரியலயா ஜோடி.

கென் மற்றும் ஈஸ்வர் ஆகியோரது இசை / பின்னணி இசை கதைக்களத்திற்கும், காட்சிகளுக்கும் கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.

சிபி சதாசிவத்தின் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் சிறப்பாக இருந்தது  பதுங்கு குழி குறிப்பாக யுத்த காட்சிகளை ஒளிவீச்சு செய்து படமாக்கிய விதம் சிறப்பாக இருந்தது.

எடிட்டர் :சி.எம்.இளங்கோவன், யுத்தம்  யுத்தத்தின் நடுவே உயிர்களை காப்பாற்ற போராடும் மருத்துவர்கள் படத்திற்க்கு தேவையான காட்சிகள் மட்டும் நேர்த்தியாக சேர்த்துள்ளார்.

இதுவரை தமிழ் சினிமாவில்யாரும் சொல்லாத கதையாக உள்ளது பார்க்காத, போர்களத்தை நம் கண்முன் நிறுத்தியுள்ளார் திரைக்கதை நேர்த்தியாக இருந்தது பாராட்டு வாழ்த்துக்கள் இப்படம் அனைவரும் வயது வந்தவர் மட்டும்  பார்க்கலாம்