“ஹார்ட்டிலே பேட்டரி” வெப் சீரிஸ் விமர்சனம்.
ஹார்ட்டிலே பேட்டரி வெப் சீரிஸ் விமர்சனம்.
தமிழ் ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக, விஞ்ஞானமும் உணர்வுகளும் கலந்த சயின்ஸ் பிக்சன் ரொமான்ஸ் டிராமாவான ‘ஹார்டிலே பேட்டரி’ என்ற புதிய ஓரிஜினல் சீரிஸை ZEE5 வழங்கியிருக்கிறது
செந்தில் ராஜன் எழுதி இயக்கியுள்ளார். குரு லக்ஷ்மன் சித் ஆகவும், பாடினி குமார் சோஃபியாவாகவும் நடித்துள்ளனர்.
வெப் சீரிஸ் பார்ப்போம்:
நம் உடலில் உள்ள நோய்கள் மற்றும் நாம் , பேசுவது உண்மையா ? பொய்யா ? என்பதை கண்டுபிடிப்பது என கருவிகள் வந்துள்ளன நாம் அறிந்தது அதேபோல் ஒருவர் மனதில் உள்ள காதலை கண்டுபிடிக்க ஒரு கருவியை ஏன் உருவாக்க கூடாது ? என்ற கேள்வி எழுகிறது அந்த கேள்விக்கான பதிலாக கதாநாயகி சோபியா லவ் மீட்டர் என்ற பெயரில் கருவி ஒன்றை உருவாக்குகிறாள் காதலிப்பதாக சொல்பவர்களின் கைரேகையை அந்த கருவி மீது பதிவு செய்தால் அவர்கள் நிஜமாகவே காதலிக்கிறார்களா? பொய்யாக பழகுகிறார்கள...
