Thursday, June 11

“பரிமளா அன்ட் கோ” திரைவிமர்சனம்.

லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன், தமிழ்குமரன் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் ஜிகேஎம் தமிழ்குமரன் , பசங்க புரொடக்ஷன்ஸ் சார்பில் பாண்டிராஜ் தயாரித்திருக்கும் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் பாண்டிராஜ்.

இதில் ஜெயராம், ஊர்வசி, மிஷ்கின், யோகி பாபு, சாண்டி, சந்தோஷ் சோபன், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, அனந்திகா சனில்குமார், ஜிகேஎம் தமிழ்குமரன், பூர்ணிமா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு : ஜார்ஜ் சி. வில்லியம்ஸ், இசை: ஃபாக்ஸ்ன், எடிட்டர்: பிரதீப் இ ராகவ், கலை இயக்குனர் : டி.ராமலிங்கம், ஸ்டண்ட் மாஸ்டர்: கலை கிங்சன், நடனம்: சாண்டி, பாபா பாஸ்கர்,பிஆர்ஒ: சதீஷ் (ஏஐஎம்)

படத்தை பார்ப்போம்

ஒரு சாதாரண நடுத்தரக் குடும்ப த்தை மையமாக கதை நகர்கிறது.

மனைவி ஊர்வசி, மகள் சஞ்சனா, அனந்திகாவுடன் நடுத்தர குடும்ப வாழ்க்கை வாழ்ந்த வருகிறார்    ஜெயராம். லோக்கல் ரவுடி  போதை பொருள் விற்பவரான சாண்டிமாஸ்டர், ஜெயராம் இளைய மகளை தொடர்ந்து தொந்தரவு செய்யும் உள்ளூர் ரவுடியின் செயல்கள். அதை தட்டிகேட்கும் மூத்த மகள் சஞ்சனா மீது ஆசிட் அடித்துவிடுவேன் என மிரட்டுகிறார். இதனால் ஒட்டு மொத்த குடும்பமும் சாண்டி மாஸ்டர்,  கொலை செய்து விடலாம் திட்டம் போடுகிறார்கள் ஒரு தீபாவளி நாளில் சாண்டி மாஸ்டர் திடீரென மர்மமான முறையில் கொடூரமாக கொலை செய்யப்பட, இன்ஸ்பெக்டர் மிஷ்கின் அந்த வழக்கை விசாரிக்கிறார்.குடும்ப உறுப்பினர்கள் மீத சந்தேகம் கொள்கிறார். அதே நேரத்தில் குடும்பத்தினரும் தங்களுக்குள் யார் இந்தக் கொலையை செய்திருக்கலாம் என்ற குழப்பத்தில் சிக்கிக் கொள்கிறார்கள். இறுதியில் கொலையாளி யார் சாண்டியை மாஸ்டரை கொன்றது யார்? ஏன்? அதை மிஷ்கின் கண்டுபிடித்தாரா? பரிமளா அண்ட் கோ  பல திருப்பங்கள் என்பதே படத்தின் கதை.

ஜெயராம் மற்றும் ஊர்வசி இருவரும் அனுபவம் மிக்க நடிகர்களாக தங்களது கதாபாத்திரங்களை சிறப்பான இயல்பான நடிப்பை கொடுத்துள்ளார் . குறிப்பாக குடும்பத் தலைவராக ஜெயராமும்,அவ்வப்போது அவர் அடிக்கிற காமெடி போலீஸ் விசாரணையில் பயந்து உளறுவது ரசிக்க வைக்கிறது ,எப்போதும் பதற்றத்துடன் இருக்கும் தாயாக ஊர்வசியும் பல இடங்களில் கவனத்தை ஈர்க்கிறார். சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, அனந்திகா இருவரும் கதைக்கு தேவையான நடிப்பை வழங்குகின்றனர். மிஷ்கின் வழக்கம்போல் தன் நடிப்பை கொடுத்து கவனத்தை ஈர்க்கிறார்.ஜிகேஎம் தமிழ்குமரன் நடிப்பு சிறப்பாக இருந்தது.

ஒளிப்பதிவு : ஜார்ஜ் சி. வில்லியம்ஸ், இசை: ஃபாக்ஸ்ன்,இவரகளின் பணி படதிற்கு பெரியபலம், எடிட்டர்: பிரதீப் இ ராகவ், படத்திற்கு தேவையான காட்சி மட்டும் சேர்த்து படத்தின் விறு விறுப்பு ஏதிபார்பை கூட்டிள்ளது.

இயக்குனர் பாண்டிராஜ் படம் என்றால் பார்க்கலாம் என்ற எண்ணம் தமிழ்நாட்டு மக்கள்  இருக்கிறார்கள். அதுதான் அவருக்கு பலம்  எல்லாரும் ரசிக்கும் படியாக  இப்படம் கொடுத்துள்ளார்.