Sunday, May 31

“ஜோரா கைய தட்டுங்க”.திரைபட விமர்சனம்.

வாமா என்டர்டைன்மென்ட் சார்பில் ஜாகிர் அலி தயாரித்து, கதை திரைக்கதை வசனத்தை வினீஷ் மில்லினியம் மற்றும் கே. பிரகாஷ் இணைந்து எழுதி, வினீஷ் மில்லெனியம் இயக்கி இருக்கும் படம் ஜோரா கைய தட்டுங்க.

இதில் யோகி பாபு, சாந்தி ராவ், ஹரீஷ் பேரடி, கல்கி, வசந்தி, மணிமாறன், ஜாகிர் அலி, அருவி பாலா, ஸ்ரீதர் கோவிந்தராஜ், மூர், மேனகா, வரிஜாகஷன், நைரா நிஹார் ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப குழுவினர்கள்:-கோ பேனர்-ஸ்ரீ சரவணா பிலிம் ஆர்ட்ஸ், கோ தயாரிப்பாளர்-ஜி சரவணா, இசை – எஸ்.என் அருணகிரி, பின்னணி இசை – ஜித்தின் கே ரோஷன், ஒளிப்பதிவாளர் – மது அம்பாட், எடிட்டர் – சாபு ஜோசப், பாடல் வரிகள் – மணி அமுதவன், ஸ்டண்ட் – மிரட்டல் செல்வா, நடனம் – விஜய் சிவசங்கர்,வாடிக்கையாளர் – ராதாகிருஷ்ணன், கலை : எஸ் அய்யப்பன், இணை இயக்குனர் – ஸ்ரீனிவாஸ், வண்ணம் – ரகு ராம், ஸ்டில்ஸ் – மணிவண்ணன், மக்கள் தொடர்பு – சதீஷ் குமார் (எஸ்2 மீடியா

யோகிபாபு யின் தந்தை மேஜிக்
கலைஞர் அவர் விட்டு சென்ற கலையை யோகி பாபு எடுத்து.செய்து வருகிறார்கள் மக்களை மகிழ்ச்சி செய்வது இவரது வேலையாக உள்ளது இந்த தொழில் போதிய வருமானம் இல்லை வீட்டு வாடகை கூட கொடுக்க முடியவில்லை மக்கள் இவரின் மேஜிக் பிடிக்காமல் ஊர் மக்கள் பேசுகிறார்கள். இந்நிலையில் யோகிபாபுவின் மேஜிக்கால் ஒரு குழந்தை பாதிக்கப்படுகிறது. இதையடுத்து யோகி பாபுவை போலீசார் அழைத்துச் சென்று அடிக்கிறார்கள். குழந்தை பாதிப்பு இல்லையென்று போலீஸ் அதிகாரிக்கு போன் வந்ததால் இவரை விட்டு விடுகிறார்கள் இவர் வீட்டருகே மூன்று இளைஞர் எந்த நேரமும் குடித்து கும்மாளம் ,கஞ்சா போதை வாசிகள் வேலை வெட்டி போகதவர்கள் . யோகிபாபு வரும்போது போகும்போதும் கிண்டல் கேலி செய்வது இவர்களின் வழக்கமாக இருக்கும்.யோகிபாபு வீட்டுக்கு தொழில் விஷியமாக அடிக்கடி கதாநாயகி சாந்திராவ் வந்து போவார் இவரை இந்த குடிகாரர் இளைஞர்கள் இவரையும் கிண்டலும் கேலியும் செய்தனர் இதை எதிர்த்து கேட்கிறார் யோகிபாபு கேட்க குடிகாரர் இளைஞர் பீர் பாட்டிலால் யோகி பாபுவின் தலையில் ஒங்கி அடிக்கிறார்கள் பிறகு கூலிப்படை யை ஏவிவிட்டு யோகிபாபு கையை வெட்டுகிறார்கள் இதனால் பழயமாதிரி மேஜிக் தொழில் செய்ய முடியவில்லை.
யோகிபாபுவுக்கு தெரிந்த சிறுமியை கற்பழித்து இந்த கும்பல் கொலை செய்கிறது. இதை தெரிந்து கொண்ட தால் தன் மேஜிக் திறமையை வைத்து  இந்த கும்பலில் உள்ளவர்களை அனைவரையும் போலீஸ்க்கு தடயம். கொடுக்காமல்  சிக்காமல் சவலாக யோகிபாபு எப்படி கொலை செய்கிறார், போலீஸ் இவரை பிடித்தார்கள்? இல்லையா? சட்டம் தண்டித்ததா? என்பதே படத்தின் மீதிகதை.

நடிகர்கள்:

கதாநாயகனாக யோகிபாபு மேஜிக் கலைஞராக இதுவரை ஏற்று நடிக்காத கதாபாத்திரம் சிறப்பாகவும் பொருத்தமாக இருந்தது இவருக்கு உதவியாளராக  நடித்த கல்கி சிறப்பாக நடித்துள்ளார்.

கதாநாயகி சாந்தி ராவ் அப்பப்ப வந்து போகுவதுமாக தான் இருந்தார் .மற்றும் இப்படத்தில் நடித்த ஹரீஷ் பேரடி, ,வசந்தி, மணிமாறன், ஜாகிர் அலி, அருவிபாலா, ஸ்ரீதர் கோவிந்தராஜ், மூர், மேனகா, வரிஜாகஷன், நைரா நிஹார் அனைவரும் நடிப்பை சரியாக செய்து உள்ளனர் .

தொழில்நுட்ப கலைஞர்கள் :

மது அம்பாட்டின் ஒளிப்பதிவு தான் படத்தின் பெரிய பலமே.
இசை – எஸ்.என் அருணகிரி, பின்னணி இசை – ஜித்தின் கே ரோஷன், படத்திற்க்கு தேவையான இசை கொடுத்துள்ளார்.
எடிட்டர் :சாபு ஜோசப் படத்திற்க்கு தேவை காட்சிகள் மட்டும் சோத்துள்ளார்.

இயக்குனர் வினீஷ் மில்லெனியம்
யோகிபாபுவின் நடிப்பு நன்றாக இருந்தது இன்னும் அவரை சரியாக பயன்படுத்த தவறிவிட்டீர்கள் !
திரைகதை -யில் கவனம் செலுத்தியிருக்கலாம் அவசரத்தில் எடுத்த படம் போல் உள்ளது .சிறுமியை கற்பழித்த கொன்ற கொலைகார கும்பலை எந்த வலியும் இல்லாமல் கொள்கிறார் பழிவாங்கும் படம் விறவிறுப் பில்லாமல் மெதுவாக செல்கிறது. .

நான் ஜோரா கைய தட்ட முயற்சிக்கிறேன் ஆனா முடியல ! உங்கள் முயற்ச்சிக்கு பாராட்டு…

—.. xxx