Sunday, May 31

“வருணன்” திரைப்பட விமர்சனம்.

யாக்கை பிலிம்ஸ் சார்பில் கார்த்திக் ஸ்ரீPதரன் தயாரித்திருக்கும்” வருணன்” படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ஜெயவேல்முருகன்.

இதில் அய்யாவுவாக ராதாரவி, ஜானாக சரண்ராஜ், தில்லையாக துஷ்யந்த் ஜெயபிரகாஷ், சிட்டுவாக கேப்ரியேலா, அக்னியாக ஹரிப்ரியா, டப்பாவாக ஷங்கர்நாக் விஜயன், மருதுவாக பிரியதர்சன், மதுரைவீரனாக ஜீவா ரவி, ராணியாக மகேஸ்வரி, யாளியாக அர்ஜுனன் கீர்த்திவாசன், ஹைடுவாக ஹைட் கார்டி, நண்பராக கௌசிக், ரம்யாவாக கிரண்மாய்,கமுதியாக தும்கன் மாரி, துளசியாக குழந்தை ஜாய்ஸ் , சீமாவாக ஐஸ்வர்யா நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப கலைஞர்கள் : இணை தயாரிப்பு: வான் புரொடக்ஷன்ஸ், இணை தயாரிப்பாளர்: ஜெயவேல்முருகன், இசையமைப்பாளர்: போபோ சஷி. ஒளிப்பதிவாளர்: எஸ்.ஸ்ரீPராம் சந்தோஷ், எடிட்டிங்: யு.முத்தையன் டிஎஃப்டி, அதிரடி இயக்குனர்: தினேஷ் சுப்பராயன், கலை இயக்குனர்: பது, நடனம்: தினேஷ், பாப்பி, விளம்பர பாடல் நடனம் : ஸ்ரீதர், ஒலி வடிவமைப்பு: தபஸ் நாயக், மக்கள் தொடர்பு : நிகில் முருகன்.

கதைகளம்

கேன் (வாட்டர்)குடி தண்ணீர் வியாபாரிகள் பற்றி சொல்லும் கதை.

படத்தை பார்ப்போம்: வடசென்னை ராயபுரம் ஏரியாவில்  ராதாரவியும், சரண்ராஜ்ம் ஆளுக்கு ஒரு பகுதிகளாக பிரித்து (வாட்டர் கேன்) தண்ணீர் சப்ளை வியாபாரம் செய்கிறார்கள்

ராதாரவியிடம் துஷ்யந்த் ஜெயப்பிரகாசும், பிரியதர்சனும் இருவரும் வேலை செய்கிறார்கள் .

சரண்ராஜிடம் ..சங்கர்நாக் / விஜயன் இவர்கள் வேலை செய்கிறார்கள் இவர்களின் குடும்பம் ஒரே பகுதியில் குடியிருக்கிறார்கள் இவர்களுக்கிடையே அடிக்கடி பிரச்சினைகளும், மோதல்களும் ஏற்படுகிறது.நடுவுல ஒரு போலீஸ்காரர் இரு கோஷ்டியையும் சமாதானம் செய்து  வைப்பது. இந்நிலையில் சரண்ராஜ் மனைவியும் /துஷ்யந்த் ஜெயப்பிரகாசும் மனைவி மர்ம்மா நபர்களால் கொலை செய்யப்படுகிறார். இந்த கொலைக்கு காரணம் யார் ? கொலைகார்கள் கண்டுபிடிக்கப்பட்டதா ? தொடர்ந்து  நடக்கும் மோதல் சஸ்பென்ஸ்
தான் படத்தின் மீதிக்கதை….

நடிகர்கள் தண்ணீர்கேன் (வாட்டர் கேன்)கடையின்  ஓனராக ராதா ரவி (.அய்யாவு) யிருக்கிறார் அவருடை நடிப்பு அனுபவ முதுர்ச்சியை காட்டுகிறது படத்திற்க்கு பக்கபலமாக இருந்தது.

.சரன்ராஜ் (ஜான்)  வாட்டர் கேன் கடைக்கு ஒனர் நீண்ட இடைவேளைக்கு பிறகு   சரண்ராஜ் ‘ வித்தியசமான  வாய் மொழி  பேசி   நடிப்பை அசத்தியுள்ளார்.

துஷ்யந்த் ஜெயப்பிரகாசும், பிரியதர்சனும் நடிப்பு ராயபுரம் ஏரியா பசங்களாக இருக்கிறங்க சிறப்பக நடித்துள்ளனர்

இதில் நடித்த அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள் :ஸ்ரீராம சந்தோஷின் கேமராவில் வட சென்னை தெருக்கள் தத்ரூபமா இருக்கு பாராட்டு

இசையமைப்பாளர்: போபோ சஷி. பின்னனி இசை சிறப்பாக செய்துள்ளார்.

இப்படத்தில் பணியாற்றிய அனைத் தொழில் நுட்ப கலைஞர்கள் சிறப்பாக  தன் பணியை செய்துள்ளனர்

இந்த படம்  நடக்கும் சண்டையை சுவாரஸ்யம் இல்லாமல் சொல்லி இருக்கிறது. இருந்தாலும் உங்கள் இயக்குனர் ஜெயவேல்முருகன் முயற்ச்சி பாராட்டு