
நடிகர்கள் :
பரத் – ராஜா, அபிராமி – சாவித்திரி, தலைவாசல் விஜய் – நாதன்,ராஜாஜி – அருள் ஜோதி,கனிகா – கௌசி,ஷான் – கதிர்,கல்கி – இஸ்மாயில்,பவித்ரா லக்ஷ்மி – அனிதா,அஞ்சலி நாயர் – மதி, பிஜிஎஸ் – மூர்த்தி, அரோல் டி சங்கர் – சுப்ரமணி
எம்.ஜெகன் கவிராஜ்
தொழில்நுட்ப கலைஞர்கள்:
எழுத்து – இயக்கம் – பிரசாத் முருகன்
தயாரிப்பு – ஃப்ரைடே பிலிம் பேக்டரி சார்பில் கேப்டன் எம்.பி.ஆனந்த்
இணை தயாரிப்பு – ட்ரீம் ஹவுஸ் ஹாரூன் மற்றும் பிஜிஎஸ் புரொடக்ஷன்ஸ் பி.ஜி.சரவணன்
ஒளிப்பதிவு – கே.எஸ்.காளிதாஸ் மற்றும் கண்ணா.ஆர்
இசை – ஜோஸ் பிராங்க்ளின்
படத்தொகுப்பு – ஷான் லோகேஷ்
கலை இயக்குநர் – வி.கே.நடராஜன்
வசனம் – பாடல்கள் – எம்.ஜெகன் கவிராஜ்
சண்டை பயிற்சி – சுகன்
நடனம் – ஷாம்
மக்கள் தொடர்பு – கே.எஸ்.கே செல்வகுமார், மணிமதன். இந்த படம் 13/12/2024 உலகெங்கும் ரிலீஸ் ஆனது.
கதை
நான்கு வெவ்வேறு கதைகள் மற்றும் அவர்களின் வாழ்க்கை நடந்த சம்பத்தை சங்கிலி தொடராக கதைக்களம் தொடங்குகிறது.
சென்னையில் நடந்த ஒரு துப்பாக்கி சூட்டில் இருந்து குற்றவாளி தப்பிக்க துப்பாக்கியை கூவம் ஆற்றில் தூக்கி வீசுகிறார்.
1.உயிருக்கு போராடும் காதல் மனைவியை காப்பாற்ற எதையும் செய்யும் ஆட்டோ ஓட்டுநர் பரத்
2. தனது திருநங்கை மகள் கார்த்தியை மருத்துவராக படிக்க வைக்க போராடும் துப்புரவுத் தொழிலாளியான அபிராமி
3.அப்பாவின் ஆசைக்காக திருமண ஆகியும் சந்தோஷம் இல்லாமல் இருக்கும் அஞ்சலி நாயர்,
4. மகள் அனிதாவின் காதலை எதிர்க்கும் சாதி வெறி பிடித்த (மிருகம்)அப்பா தலைவாசல் விஜய் உண்மை அறியாமல் தவறான புரிதல் அதன் விளைவு என்ன? .
இவர்களின் வாழ்க்கையில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.
.. முன்னாள் ரவுடி. பரத் உயிருக்கு போராடும் காதல் மனைவியை காப்பாற்ற பணமில்லாமல் படும் வேதனையை காட்சியை எதார்த்தமாக இருந்தது
அபிராமி துப்புரவுத் தொழிலாளியாகவும் தனது திருநங்கை மகள் கார்த்தியை மருத்துவராக படிக்க வைக்க போராடும் காட்சி மற்றும் கந்து வட்டிக்காரன் மதியின் பாலியல் தாக்குதலை எதிர்கொள்ளும் தன் மகளை பாதுகாக்க போராடுகிறார். துப்புரவு தொழிலாளியாக எதார்த்தமாக நடிப்பாக இருந்தது. எல்லோரின் நினைவில் நிற்க்கும் காட்சியாகவும் படத்தின் பக்கபலமே இவர் தான்
அஞ்சலி நாயர், தன் மாமியாரும் தனக்கு எதிராக சதி செய்வதை கண்டு பிடிக்கிறார். கணவன் இரவு நேரம் பாதியில் காணாமல் போகிறான் கணவனின் தகாத உறவைப் கண்டுபிடிக்கிறாள் இதனால் இவள் எதிர்கொள்ளும் போராட்டம். இவருடை கதாபாத்திரம் சிறப்பாக நடிப்பால் கவனிக்க வைக்கிறார்
சாதிவெறி பிடித்த அப்பாவாக தலைவாசல் விஜய், தன்னுடைய மகள் பவித்ரா வேறு சாதியினரை பதிவுத் திருமணம் செய்யப்போவதை தகவல் அறிந்த உடன் அந்த இடத்திற்கு ,பெரும் கோபத்துடன் அதைத் தடுக்க கிளம்புகிறார். முதிர்ச்சியான நடிப்பால் சிறப்பாக தன் நடிப்பை கொடுத்துள்ளார்
இதில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள்:
ஒளிப்பதிவு – கே.எஸ். காளிதாஸ் மற்றும் கண்ணா.ஆர் சிறப்பாக தன் பணியை செய்துள்ளார்
பின்னணி இசை – ஜோஸ் பிராங்க்ளின் கதையோட்டத்துக்கு சரியாக பயணித்தளளது சிறப்பாக தன்பணியை செய்துள்ளார்
படத்தொகுப்பு – ஷான் லோகேஷ் படத்திற்க்கு தேவையான காட்சிகள் மட்டும் நேர்த்தியாக சரியாக வைத்துள்ளார் . மற்றும் இதில் பணியாற்றிய அனைத்து தொழில் நுட்ப கலைஞர் சிறப்பாக தன் பணியை செய்துள்ளனர்.
இந்த நான்கு தொடர்பற்ற கதை அமைப்புகளுக்குள் நடக்கும் கொலைகளின் தொடர்ச்சியில் சுற்றி சுழன்று ஒரு கட்டத்தில் எதிர்பாராத திருப்பத்துடன் இணைகிறது.
சமூகத்தில் நடக்கும் சில அவலங்களை சொல்ல. முயற்ச்சிக்கிறார் இயக்குநர் பிரசாத் முருகனின் அவருக்கு பாராட்டு. ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்’.
ஒரு முறை பார்க்கலாம் இப் படம்










