
பியாண்ட் பிக்சர்ஸ் சார்பில் ஜெயவர்தன் தயாரித்திருக்கும் ஹேப்பி ராஜ் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் மரியா ராஜா இளஞ்செழியன்.
நடிகர்கள் ஜி.வி. பிரகாஷ் குமார்: ஆனந்த் ராஜ் (எ) ஹேப்பி, ஜார்ஜ் மரியான்: காத்தமுத்து (ஹேப்பியின் தந்தை), ஸ்ரீP கௌரி பிரியா: காவ்யா (கதாநாயகி), அப்பாஸ்: ராஜீவ் (காவ்யாவின் தந்தை), கீதா கைலாசம், அதிர்ச்சி அருண், மதுரை முத்து, மகேஷ் தேவி, பிரார்த்தனா நாதன், பிரேம்ஜி அமரன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்பகலைஞர்கள் இசை: ஜஸ்டின் பிரபாகரன், ஒளிப்பதிவு: மதன் கிறிஸ்டோபர், எடிட்டர் : செல்வா ஆர்.கே., மக்கள் தொடர்பு: ரேகா
படத்தை பார்ப்போம்:
ஒரு கிராமத்தில் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றுபவர் ஜார்ஜ் மரியன் கஞ்சத்தனம் உடல்வாகு வைத்து ஊருக்குள் கேலி ‘கிண்டல் ஊர் மக்கள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள்வரை குதிரை முட்டை என்ற பெயர் தான் வீட்டு அடையாளம் ஊர் அறிய அனைவரும் கூப்பிடுகிறார்கள் இருந்தாலும் அதை பற்றியும் கவலைபடுவதில்லை இவருக்கு ஒரே மகன் படத்தின் கதாநாயகன் ஜி.வி. பிரகாஷ் இவர்மீது அதிக பாசமாக இருக்கிறார் தந்தை மீது இருக்கும் உருவக் கேலியால் மனதளவில் பாதிக்கப்படும் இங்குள்ள எந்த பெண்ணும் இவரை காதலிக் மறுக்கிறார்கள் இதனால் இந்த ஊரை விட்டு ,பெங்களுரில் வேலைக்கு போகிறார் அங்கு IT கம்பெனியில் வேலை சேர்ந்து கம்பெனியின் முதலாளி பெண்ணான நாயகி கௌரி பிரியாவை காதலிக்கிறார் நாயகியும் காதலிக்கிறார் கம்பெனியில் ஜீவி பிரகாஷ் வேலையின் திறமை பார்த்து கம்பெனி முதலாளி அப்பாஸ் தன் மகளை திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார் உடனே ஜீவி பிரகாஷ்யிடம் உன் அப்பா அம்மா வரச்சொல் உங்கள் திருமணத்தை பற்றி பேசனும் ஆனால் அப்பாவின் உருவத்தை பார்த்து பெண்ணை உங்கள் குடும்பத்திற்க்கு மருமகளா அனுப்ப மாட்டேன் என்று சொல்லிவிட்டா..? என்ற கேள்வி மனபதற்றமாக இருக்கு … இருந்தாலும் காதலியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் உடனே ஜீவி பிரகாஷ் தன்னுடைய அப்பா அம்மாவை வர சொல்லுகிறார் .தாய், தந்தை மட்டும் வருவார்கள் என எதிர்பார்த்தால், ஊரில் உள்ள மொத்த சொந்தகாரர்கள் பெங்களூருக்கு வந்து சேர்கிறார் இதனால் கடும் கோபமடையும் அப்பாஸ், திருமணத்தை நிறுத்தி விடுகிறார். ஜார்ஜ் மரியனுக்கும், அப்பாஸுக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. மேலும், ஜி.வி – நாயகி கௌரியும் பிரிந்துவிடுகிறார்கள்.இவருக்கும் திருமணம் நடந்ததா ? தன் அப்பா , குடும்பத்தும் மீது உள்ள கேலி கிண்டல் பெயர் என்ன ஆனது ..?.. இப்படி பல திருபங்களுடன் ஜாலியாக படத்தின் மீதி கதையை பார்க்கலாம்..
கதாநாயகனாக GV பிரகாஷ் கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்து கைதட்டல் பெறுகிறார். கதாநாயகியாக
ஸ்ரீகெளரி ப்ரியா அழகாலும் நடிப்பாலும் நம்மை கவர்கிறார். கதாநாயகியின் அப்பாவாக நீண்ட நாட்களுக்கு பிறகு அப்பாஸ் நடித்திருக்கிறார் . கொடுத்த கதாப்பாத்திரத்தை சரியாகவும் சிறப்பாகவும் செய்துள்ளார். ஜிவி பிரகாஷ் அப்பாவாக ஜார்ஜ் மரியான் (இன்னொரு கதாநாயகள் ) அம்மாவாக கீதா கைலாசம் கிராமத்து பெண்ணாக இருந்து நவநாகரிக உடையில் மாறி வரும் காட்சி கலாட்டா ரசிக்கும்படியாக இருந்தது இருவரும் சிறப்பாக நடித்துள்ளனர். பிராத்தனா நாதன் மற்றும் இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சரியாக நடித்துள்ளனர்.
ஜஸ்டின் பிரபாகரனின் இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் ரசிக்க வைக்கிறது.
மதன் கிறிஸ்டோபரின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம்.
எடிட்டர் செல்வா ஆர்.கே படத்தின் நீளத்தை கொஞ்சம் குறைத்திருக்கலாம்.
இயக்குநர் மரிய ராஜா இளஞ்செழியன் அப்பா மகன் பாசத்தை சொல்ல முயன்றிருக்கிறார்.
படம் முதல்பாதி இடைவேளை வரை என்னடா படம் இது டென்ஷனாக இருக்கும் இடைவேளை பின் கடைசி 45 நிமிடம் தான் படம் வேற லெவள் படம் பார்க்கலாம் ரசிக்கலாம் திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம் . உங்கள் முயற்ச்சிக்கு பாராட்டுக்கள்.
“ஹேப்பி ராஜ்” அனைவரும் ஹேப்பி யாக. இருக்க..பொறுமை தேவை…










