Sunday, July 26

“அந்தரன்” திரை விமர்சனம்.

ஸ்ரீ கிருஷ் பிக்சர்ஸ் சார்பில் சாம்பசிவம் தயாரிக்க, பிரஜின், இவானா , சாம்பசிவம், அனுபமா, நடிப்பில் சந்தோஷ் ராவணன் எழுதி இயக்கி இருக்கும் படம்.

படத்தை பார்ப்போம்

நாயகி தொழிலதிபர் எம்.கே.சாம்பசிவத்தின் மகள் இவானா வருண், இவரை  காதலிக்கும் இளைஞர் கொலை செய்யப்படுகிறார். சில மாதங்களுக்குப் பிறகு அவருக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையும் மர்மமான முறையில் உயிரிழக்கிறார். அதன்பிறகும் அவரை திருமணம் செய்ய வரும் நபர்களுக்கு தொடர்ந்து மரணம் நிகழ்கிறது. ஒவ்வொருவரும் மர்மமான முறையில் இறக்கின்றனர். போலீசில் புகார் கொடுக்கிறார். இது சாதாரண சம்பவம் இல்லை என்பதை காவல்துறை கண்டுபிடிக்க, இந்த வழக்கு போலீஸ் அதிகாரி பிரஜினிடம் வருகிறது. இவானாவை மையமாக வைத்து விசாரணையை தொடங்கும் பிரஜின், அவரையே காதலிக்க தொடங்குகிறார்.இன்ஸ்பெக்டர் பிரஜின் தீவிர விசாரணையில் ஈடுபடும்போது பல மர்மங்கள் வெளியாகி அதிர வைக்கிறது.அது என்ன? நிஜ கொலையாளி யார்? அவர்கள் கொல்லப்படுவதற்கு என்ன காரணம் என்ன ?,

இறுதியில் பிரஜின் வாழ்க்கை என்ன ஆனது? இந்த தொடர்பகொலைகளுக்கு பின்னால் இருப்பது யார்?யாரும் எதிர்பாராத பலத் திருப்பங்களுடன் படத்தின் மீதிக்கதை.

நடிகர்கள் போலீஸ் அதிகாரியாக வரும் பிரஜின்,  விசாரணை காட்சிகளிலும், காதல் காட்சிகளிலும் கவனம் ஈர்க்கிறார். நாயகியாக நடித்திருக்கும் இவானா வருண் சுற்றி தான்  கதை நகர்கிறது  . பயம், குழப்பம், பதற்றம் என பல பரினாமங்களை  இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். நாயகியின் பெற்றோர்களாக வரும் எம்.கே. சாம்பசிவம், செந்தி குமாரி உள்ளிட்ட மற்ற நடிகர்கள் ஆகியோர் யதார்த்தமாக நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு & இசை
கிஷோர் ராமச்சந்திரன் ஒளிப்பதிவு, ஹரி.எஸ்.ஆர் பின்னணி இசை இரண்டுமே பலம் சேர்க்கிறது.

பட்ஜெட் படத்தில் சந்தோஷ் ராவணன் எழுதி இயக்கி விறுவிறுப்பான காட்சி நகர்தல் வித்தியமான கதைளம் யாரும் யூகிக்க முடியாத கிளைமேக்ஸ்

இந்தபடம் சஸ்பென்ஸ் த்ரில்லர் விரும்பு பார்வையாளர் பார்க்கலாம்