
பிகே7 ஸ்டுடியோஸ் எல்எல்பி சார்பில் பிரேமா கிருஷ்ணதாஸ் – சி தேவதாஸ் – ஜெயா தேவதாஸ் தயாரித்திருக்கும் ஜாக்கி படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் டாக்டர். பிரகாபால்
இதில் யுவன் கிருஷ்ணா – ராமர், ரிதான் கிருஷ்ணாஸ் – கார்த்தி, அம்மு அபிராமி – மீனாட்சி, காளி – காளி, மதுசூதன் ராவ் – வஸ்தவி, சித்தன் மோகன் – ஓதமுத்து, சரண்யா ரவி – ஈஸ்வரி, பாத்மன் – அய்யாவு, யோகி – சுப்பு, சாய் தினேஷ் – சிவபானம், சிதம்பரம் – ஜோன்ஸ், பிரவீன் – மைக், ஆதவ் – வசந்த், ஈஷா – இனியாள் ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
படக்குழுவினர்கள்:-
ஒளிப்பதிவு: என்.எஸ்.உதயகுமார், எடிட்டர்: என் பி ஸ்ரீPகாந்த், இசை: சக்தி பாலாஜி, பாடல் வரிகள் – சினேகன், வசனங்கள்: டாக்டர் பிரகாபால், சூரிய பாண்டியன், சூர்யா பாலா, ஜே, நடன இயக்குனர் – அசார், நான் ராதிகா, ரிச்சி, ஸ்டண்ட் – பிரபு ஜாக்கி, முதன்மை இணை இயக்குனர் – உனைஸ்.எஸ், , மக்கள் தொடர்பு – நிகில் முருகன்.
கதை கரு:
மதுரையின் பாரம்பரிய கிடா சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம்
படத்தை பார்ப்போம்!
ஆட்டோ டிரைவரான யுவன் கிருஷ்ணா, கிடா சண்டை மீது அதிக ஈடுபாடு உள்ளவர். அதேவேளை பணக்காரரான ரிதன் கிருஷ்ணா கிடா சண்டையை கவுரவமாக கருதுகிறார். இதற்கிடையே நடக்கும் ஒரு சண்டையில் யுவன் கிருஷ்ணாவின் கிடா, ரிதன் கிரிஷ்ணாவின் கிடாயை வீழ்த்தி விட, அதன் மூலம் இருவருக்கும் இடையே பகை உண்டாகிறது. இதனால், இரு தரப்புக்கும் இடையே அடிக்கடி வெட்டு குத்து, அடிதடி மோதல் நடக்கிறது. கிடா சண்டை மூலம் ஆரம்பித்த இவர்களுடைய பகைக்கு, அதே கிடா சண்டை போட்டி மூலம் முற்றுப்புள்ளி வைக்க ஊர் பெரியவர்கள் முடிவு செய்கிறார்கள். அதன் பிறக என்ன நடந்தது? என்பது தான் மீதி கதை.
நடிகர்கள்
நாயகனாக நடித்திருக்கும் யுவன் கிருஷ்ணா, மதுரை இளைஞராக நடிப்பில் மிரட்டியிருக்கிறார். கிடா போல சண்டை காட்சிகளில் பாய்கிறார். அதேவேளை காதல் காட்சிகளிலும் அசத்துகிறார். வில்லனாக மிரட்டியிருக்கும் ரிதன் கிருஷ்ணா, பஞ்ச் வசனங்கள் பேசியும் கலக்குகிறார். அடிதடி காட்சிகளிலும் புகுந்து விளையாடியுள்ளார்.
இருப்பினும் இவர்களின் ஆக்ரோஷமான நடிப்பை விட, களத்தில் மோதும் ஆடுகளின் நடிப்பு தான் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. கதாநாயகியாக வரும் அம்மு அபிராமி, தனது வழக்கமான யதார்த்தமான நடிப்பால் படத்திற்கு வலு சேர்த்துள்ளார். மதுசூதன் ராவ் வழக்கமாக நடிக்கும் சண்டைகளை உருவாக்கும் கதாபாத்திரமாக இல்லாமல், சண்டைகளைத் தீர்த்து வைக்க முயற்சிக்கும் கதாபாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்துகிறார்.மேலும் துணை கதாபாத்திரங்களுக்கு பெரியளவில் படத்தில் ரோல் இல்லை.
தமிழக மக்கள் மற்றும் சினிமா களத்தில் பெரிதும் பேசப்பட்டாத கிடா சண்டையை தத்ரூபமாக திரையில் கொண்டு வந்துள்ள ஜாக்கி திரைப்படம் அதன் கதைக்காகவே நம் கவனத்தை ஈர்க்கிறது.
தொழில்நுட்பம்
ஒளிப்பதிவாளர் என்.எஸ்.உதயகுமாரின் கேமரா, கிடா சண்டை மோதும் மைதானம் புழுதி கிளப்பி கிடாக்கள் மோதும்போது காட்சிகளையும் மிக தத்ரூபமாக படமாக்கி உள்ளது. சக்தி பாலாஜியின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் கேட்கும்படியாக ரசிக்கும்படியாக இருந்தது
எடிட்டர் ஸ்ரீகாந்த் கிராமத்தின் கிடா முட்டு சண்டை சம்பந்தப்பட்ட காட்சிகள் மற்றும் படத்திற்க்கு தேவையான காட்சிகள் மட்டும் சேர்த்தது சிறப்பாக இருந்தது மற்றும் இப்படத்தில் பணியாற்றிய அனைவரும சிறப்பாக இருந்தது
இதுவரை.தமிழ் சினிமாவின் கிடா சண்டை வைத்து எந்த ஒரு படமும் வந்ததில்லை.
கதைக்களம் புதிதாக இருந்தாலும், ஒரு கட்டத்தில் வழக்கமான பழிவாங்கும் கதையாக மாறுவதால்
மண் சார்ந்த ஒரு கதையை தேர்ந்தெடுத்து, அதை முடிந்தவரை குறை இல்லாமல் படமாக்கியுள்ளார். அரசாங்கம் அங்கிகாரம் இல்லாத பாரம்பரிய விளையாட்டு மற்றும் மண்வாசனை திரைப்படங்களை விரும்பும் ரசிகர்களுக்கு ஜாக்கி ஒரு புதிய அனுபவமாக இருக்கும்










