
நடிகர்கள் :- ரவி மரியா, அக்சரா விஜய், ராதாரவி, பழ. கருப்பையா, நாஞ்சில் சம்பத், கஞ்சா கருப்பு, இயக்குனர் பேரரசு, அக்னி எஸ். வருண், பயில்வான் ரங்கநாதன், இயக்குனர் ரங்கநாதன்
தொழில்நுட்பக் கலைஞர்கள்:-
தயாரிப்பு நிறுவனம்: கவிதாலயா சரவணன் கிரியேஷன்ஸ்
தயாரிப்பாளர்: கவிதாலயா சரவணன்
கதை, திரைக்கதை, இயக்கம்: ராம்தேவ்
ஒளிப்பதிவு: கார்த்திக் எஸ். நாயர் படத்தொகுப்பு: துர்காஷ்
இசை: ,பாடல்கள்:துளசிராமன் ,
மக்கள் தொடர்பு: வேலு
கதைகரு
அரசியல்வாதிகள் எப்படி உருவாகிறான்! மக்களை எப்படி ஏமாற்றுகிறான்! அரசியல் பேசுகிற படம் “மக்கள் தலைவா”
படத்தை பார்ப்போம்:
எந்த வேலையும் செய்யாமல், ஊரை சுற்றி திரியும் ரவிமரியா போலியான அமைப்பு வைத்து கொண்டு போராட்டங்கள் நடத்தி பணம் வசூல் வேட்டையில் வாழ்க்கையை நடத்திவந்த நிலையில் திடீரென பெரும் பணக்கார ராதாரவி சந்திப்பு தனது அரசியல் திட்டத்தை சொல்கிறார் திட்டத்திற்கு மறுப்பு பிறகு சம்மதத்துடன் அக்ரிமெண்ட் கையெழுத்துயிடுகிறார். முதலில் அவரை சினிமா ஹீரோவாக மாற்றும் அவர், பின்னர் அரசியல் கட்சியை தொடங்கி மக்கள் தலைவராக உருவாக்குகிறார்.இந்த கட்சி தேர்தல் போட்டியிட்டு பணபலத்தால் போலியான வாக்குறுதி, விளம்பரங்கள் கொடுத்து இந்த கட்சி வெற்றி பெற்றது ஆனால் ரவிமரியா முதலமைச்சராக பதவியேற்க்கவில்லை வேற ஒருவரை முதலமைச்சராகிறார்! ரவி மரியா நிலை என்ன.? ராதாரவியின் அரசியல் விளையாட்டை தமிழ்நாட்டில் தொடங்க காரணம் என்ன .? என்பதே பல திருபங்களுடன் படத்தின் மீதிக்கதை…
நடிகர்கள்
கதாநாயகனாக நடித்திருக்கும் ரவி மரியா இதுவரை,காமெடியனாக, குணச்சித்திர வேடங்களில் நடித்துவந்தார் இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரத்தை இயல்பாக கையாண்டிருக்கிறார். அரசியல் மேடை பேச்சு, நகைச்சுவை, என தன்னால் முடிந்த பங்களிப்பை சிறப்பாக கொடுத்திருக்கிறார். ராதாரவி வழக்கம்போல அனுபவமான நடிப்பால் கதைக்கு பலம் சேர்க்கிறார்.
பழ.கருப்பையா, நாஞ்சில் சம்பத்,இருவரும் அரசியல்வாதி கதாபாத்திரம் மிக பொருத்தம். கஞ்சா கருப்பு, பேரரசு, பயில்வான் ரங்கநாதன் உள்ளிட்டோர் தங்களது கதாபாத்திரங்களுக்கு ஏற்ற நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு
ஒளிப்பதிவாளர் கார்த்திக் எஸ்.நாயர் குறைந்த வசதிகளிலும் காட்சிகளை நேர்த்தியாக படமாக்கியிருக்கிறார்.
இசை
துளசிராமனின் பாடல்களும் பின்னணி இசையும் கதைக்கு தேவையான ஓகே ராகம்
இயக்குநர் ராம்தேவ், தற்போதைய அரசியல் மாற்றங்களையும், தைரியமாக பேச முயற்சித்திருக்கிறார். ஆனால் திரைக்கதையில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி இருந்திருந்தால் படம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். உங்கள் முயற்சிக்கு பாராட்டு
இது ஒரு அரசியல் ,நையாண்டி ,காமெடி படம் எல்லோரும் ரசிக்கும்படி உள்ளது.
ரேட்டிங்;३:०










