
ஆஞ்சநேயா புரொடக்ஷன்ஸ், ஸ்ரீநிதி புரொடக்ஷன்ஸ் – கே.கந்தசாமி, கே.கணேசன், வி.விஜயகுமார், வி.லோகேஷ்வரி விஜயகுமார் தயாரித்திருக்கும் தி பெட் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் எஸ்.மணிபாரதி.
இதில் ஸ்ரீPகாந்த் – வேலு, சிருஷ்டி டாங்கே – கிறிஸ்டி, நண்பர் – கருப்பு பாண்டி – பாண்டி,நண்பர் – விஜே பப்பு,நண்பர் – விக்ரம்,அம்மா – திவ்யா, இன்ஸ்பெக்டர் – ஜான் விஜய்,எஸ்ஐ – தேவி பிரியா ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப வல்லுநர்கள்:- இசை : தாஜ்நூர், ஒளிப்பதிவு : கோகுல் , பாடல் வரிகள்: யுகபாரதி, படத்தொகுப்பு: ஜெபி, கலை: பழனிவேல், ஸ்டண்ட்: அதிரடி பிரகாஷ், ஸ்டில்ஸ்: ராஜ்பிரபு, மக்கள் தொடர்பு : ஏ. ஜான்.
கதை கரு
*படுக்கறைக்கு Call girl வந்த விலைமாது (விபச்சாரி) மாயம் நடந்தது என்ன?*
படத்தை பார்ப்போம்:
ஸ்ரீகாந்த் அவரது நண்பர்கள் பிளாக் பாண்டி, விஜே பப்பு, விக்ரம் ஆகியோர் ஐடி துறையில் வேலை பார்க்கிறார்கள். வார விடுமுறையை நான்கு பேரும் சேர்ந்து மதுபோதை . கொண்டாட்டம் இந்த வாரம் வித்தியாசமாக ஊட்டிக்கு செல்லலாம் முடிவு செய்கிறார்கள் இத்துடன் மது – மங்கை இரண்டையும் சேர்ந்து அனுபவிக்க முடிவு செய்கின்றனர். அதற்க்காக தேடுதல் ( கூகுள்) Call girl புரோக்கர் மூலம் விபச்சாரி தேடுதல் கடைசியாக சிருஷ்டி டாங்கே ஓகே செய்து ,ஊட்டிக்கு காரில் அழைத்துச் செல்கின்றனர். காருக்குள் நண்பர்கள் சிலுமிஷம் அழகியிடம் பார்த்தவுடன் ஸ்ரீகாந்த் காதல் வசப்படுகிறார் .அதனால் தன் நண்பர்களை சிருஷ்டி டாங்கேவிடம் ஒவ்வொரு இரவிலும் நண்பர்கள் உல்லாசம் அனுபவிக்க துடிக்கிறார்கள் அவர்களை நெருங்கவிடாமல் செய்கிறார் ஒரு நாள் சிருஷ்டி டாங்கே மது போதையில் தூங்கிவிடுகிறார் இந்த நிலையில், சிருஷ்டி டாங்கே திடீரென்று காணாமல் போய்விடுகிறார் மறுநாள் நான்கு நண்பர்களில் ஒருவரும் காணாமல் போய்விடுகிறார். காணமல் போன நண்பர்கள் தேடுகிறார்கள். அவர்கள் கிடைத்தார்களா ? ,அவர்கள் காணமல் போன பின்னணியில் இருக்கும் மர்மம் என்ன ?, விலை மாது என்று தெரிந்தும் சிருஷ்டி டாங்கே மீது ஸ்ரீகாந்த் காதல் வசப்பட்டது ஏன் ? ஆகிய கேள்விகளுக்கான விடை தான் படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ஸ்ரீகாந்த் ஆபீஸ் ஐ.டி கம்பெனி வேலை பெருத்தமான கதாபாத்திரம் . சிருஷ்டி டாங்கே மீது காதல் கொள்வது, காணாமல் போன சிருஷ்டி டாங்கேவை தேடி அலைவது என ஆங்காங்கே நடிப்புத் சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார். குறிப்பாக போலீஸ் விசாரணையில் மூன்றாம் தரம நடிகரை போல் சித்ரவதைக்குள்ளாகும் காட்சிகளில் பரிதாபத்தை ஏற்படுத்தி இருக்கிறார்.
கதாநாயகியான சிருஷ்டி டாங்கே ‘கால்கேர்ள்’ கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். குடும்பப்பாங்கான கேரக்டரில் பார்த்த சிருஷ்டி டாங்கே இந்த படத்தில் கவர்ச்சியும், இரட்டை அர்த்த வசனங்கள் மற்றும் மது அருந்துவது என காட்சிகளில் இவரா ? கவர்ச்சியில் படம் முழுவதும் ரசிக்க வைத்திருப்பவர், ஸ்ரீகாந்த் நண்பர்களைப் போல் படம் பார்க்கும் பார்வையாளர்களையும் ஏங்க வைத்து விடுகிறார்.
பிளாக் பாண்டி, வி.ஜே.பப்பு மற்றும் நண்பர்களின் காமெடி காட்சிகள் பெரியதாக ஒர்க் அவுட் ஆகவில்லை. சமீப காலமாக போலீஸ் கதாபாத்திரத்திலேயே நடித்துவரும் ஜான் விஜய் வழக்கமான ஒரே மாதிரியான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.
இசை
தாஜ்னுர் இசையில் பாடல்கள் சுமார் ரகம்.
ஒளிப்பதிவு
கோகுல் ஒளிப்பதிவை ரசிக்க முடிகிறது.
எடிட்டர்.ஜெபி படத்திற்க்கு தேவையான காட்சிகள் சேர்த்துள்ளனர்
நண்பர்களின் காமத்தால் ஏற்படும் விளைவுகளை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் மணி பாரதி. வலுவான காட்சிகளும் சுவாரஸ்யமான காட்சிகளும் இல்லாமல் சாதாரண படமாக மாறிவிட்டது. .
படம் பார்க்கலாம்










