Sunday, May 31

“உயிர் தமிழுக்கு” திரைப்பட விமர்சனம்.

மூன் பிக்சர்ஸ் சார்பாக ஆதாம் பாவா தயாரிப்பு, இயக்கத்தில், வித்யாசாகர் இசையில், அமீர் சுல்தான், சாந்தினி ஶ்ரீதரன், ஆனந்தராஜ், இமான் அண்ணாச்சி, ராஜ்கபூர், சரவணசக்தி, மாரிமுத்து, கஞ்சா கருப்பு நடிப்பில் உருவாகியுள்ள படம் “உயிர் தமிழுக்கு. “10_ 5 – 2024 (தேதி மே மாதம்) தமிழகமெங்கும் வெளியிடப்பட்டது

படத்தை பற்றி பேசுவோம் :

அதிகாலையில் வாக்கிங் போகும் முற்போக்கு மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான ஆனந்தராஜ் மர்ம நபர்களால் கொல்லப்படுகிறார். அவரின் மகளான சாந்தினியை காதலிக்கும் எதிர்க்கட்சியான புரட்சிகர மக்கள் முன்னணி கழகத்தைச் சேர்ந்த மாவட்ட செயலாளர் அமீர் தான் இந்த கொலையை செய்தார் என குற்றம் சாட்டப்படுகிறது. கொலைசெய்தவர்கள் கோர்ட்டில் சரணடைந்தார்கள் இவர்தான் கொலை செய்ய சொன்னார் என்று கோர்ட்டில் வாக்குமூலம் கொடுக்கிறார்கள்  போலீஸ் அமீர்ரை  கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள்  சாந்தினி அமீரை வெறுக்கிறார். அமீர் சாந்தினியை  உயிருக்கு உயிராக காதலிக்கிறார். இறுதியாக அமீர் தன்மீதான கொலைப்பழியை  ! நீக்கினாரா சாந்தினியோடு  ஒன்று சேர்ந்தரா என்பதே இப்படத்தின் மீதி கதையாகும்.

உயிர் தமிழுக்கு என டைட்டில் பார்த்ததும் ஹீரோ தமிழ் மொழிக்காக வாழ்பவர் தமிழ் தியாகி  என்றெல்லாம் நினைக்க தோன்றும்  அப்படி எதுவுமே இப்படத்தில் இல்லை ஹீரோயினாக நடித்திருக்கும் சாந்தினியின் ஸ்ரீதர் பெயர் தமிழ்செல்வி இப்ப புரியுதா ?

தேனி மாவட்டத்தில் கேபிள் டி.வி ஆப்ரேட்டராக MGR பக்தன் ரசிகனாக இருக்கிறார் கதாநாயகன் அமீர். (பாண்டியன்) தன்னுடைய காதலிக்காக அரசியல்வாதியாக ஆவது  காதலிக்காக கண்டன பொதுக்கூட்டம், காதலி பார்பதற்க்கு  (காதலி அப்பா) இறந்த உடலுக்கு அஞ்சலி செலுத்த   மத்திய மந்திரி உடன் வருதல் காதலியை சைட் அடித்தல் ரசிகும்படியாக இருந்தாலும் கொஞ்சம் ஓவராக தான் இருந்தது   அமீர் வழக்கம்போல் இல்லாமல் இப்படத்தில் கலாட்டா காமெடி கலக்கிறார் .

சாந்தினி ஸ்ரீதர்.தமிழ் படத்தில் . தனக்கு கொடுத்த கதாபாத்திரம் சரியாக செய்துள்ளார்  இப்படத்தில் இவரது நடிப்பு . பரவாயில்லை

இவர்களை தவிர்த்து ஆனந்தராஜ், ராஜ் கபூர், இமான் அண்ணாச்சி கஞ்சா கருப்பு ஆகியோர் பேசும் வசனங்கள் ஆங்காங்கே நம்மை ரசிக்க சிரிக்க வைக்கிறது . பக்கபலம் இவர்கள் தான்

சமாதி முன் தியானம், சமாதியில் சசத்தியம் சபதம் செய்தல், நடிகர்கள் அரசியலுக்கு வருவது என எல்லா தற்கால அரசியலை நாம் பார்த்ததை நம் கண் முன்னே கொண்டு வந்துள்ளார்

சினிமாவில் லாஜிக் பார்த்தால் எதுவும் எடுபடாது என்பதை சொல்லாமல் சொல்லியுள்ளார் இயக்குநர் ஆதம்பாவா. முதல் படைப்பு வெற்றி படைப்பாக அமைந்தது வாழ்த்துக்கள்

இப்படத்தில் எம்ஜிஆர் பற்றிய பாடல் Super …என்றும் காலத்தில் நிலைத்து நிற்க்கும்.

இப் படத்தில் பணியாற்றிய தேவராஜ் கேமராமேன் /எடிட்டர் / ,வித்யாசாகர்பின்னணி இசை அனைவரும் பணிகளும் சிறப்பாகவும் அழகாகவும் இருந்தது.

நல்ல அரசியல் நையாண்டி படம். அமீர்  இதுவரை நடிக்காத கதாபாத்திரத்தில்  நகைச்சுவையில் அசத்தியுள்ளார். இமான் அண்ணாச்சி கஞ்சா கருப்பு மற்றும் நகைச்சுவை கூட்டணியுடன் வெற்றி பெற்றுள்ளது.

இப்படம் :குடும்பத்துடன் பார்க்கும் படம்