“உயிர் தமிழுக்கு” திரைப்பட விமர்சனம்.
மூன் பிக்சர்ஸ் சார்பாக ஆதாம் பாவா தயாரிப்பு, இயக்கத்தில், வித்யாசாகர் இசையில், அமீர் சுல்தான், சாந்தினி ஶ்ரீதரன், ஆனந்தராஜ், இமான் அண்ணாச்சி, ராஜ்கபூர், சரவணசக்தி, மாரிமுத்து, கஞ்சா கருப்பு நடிப்பில் உருவாகியுள்ள படம் “உயிர் தமிழுக்கு. "10_ 5 - 2024 (தேதி மே மாதம்) தமிழகமெங்கும் வெளியிடப்பட்டது
படத்தை பற்றி பேசுவோம் :
அதிகாலையில் வாக்கிங் போகும் முற்போக்கு மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான ஆனந்தராஜ் மர்ம நபர்களால் கொல்லப்படுகிறார். அவரின் மகளான சாந்தினியை காதலிக்கும் எதிர்க்கட்சியான புரட்சிகர மக்கள் முன்னணி கழகத்தைச் சேர்ந்த மாவட்ட செயலாளர் அமீர் தான் இந்த கொலையை செய்தார் என குற்றம் சாட்டப்படுகிறது. கொலைசெய்தவர்கள் கோர்ட்டில் சரணடைந்தார்கள் இவர்தான் கொலை செய்ய சொன்னார் என்று கோர்ட்டில் வாக்குமூலம் கொடுக்கிறார்கள் போலீஸ் அமீர்ரை கைது செய்து சிறையில் அடைக்க...
