
பிடிஜி யுனிவர்சல் சார்பில் பாபி பாலச்சந்திரன் தயாரித்திருக்கும் ரெட்ட தல படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் கிரிஷ் திருக்குமரன்.
இதில் அருண் விஜய், சித்தி இத்னானி, தன்யா ரவிச்சந்திரன், யோகி சாமி, ஜான் விஜய், ஹரீஷ் பேரடி, பாலாஜி முருகதாஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:- இசை – சாம் சிஎஸ் , வியூகத்தின் தலைவர் – டாக்டர் எம் மனோஜ் பெனோ, ஒளிப்பதிவாளர் – டிஜோ டாமி, எடிட்டர் – ஆண்டனி , கலை இயக்குனர் – அருண்சங்கர் துரை , ஸ்டண்ட் – பி.சி.ஸ்டண்ட், , இணை இயக்குனர் – நெல்சன் வி.ஜே , நிர்வாகத் தயாரிப்பாளர் – மணிகண்டன், கிரியேட்டிவ் எக்ஸிகியூட்டிவ் – வி.கே தேவ், ஸ்டில்ஸ் – மணியன் ,பிஆர்ஒ – சதீஷ் (ஏய்ம்)
பாண்டிச்சேரியில் வேலை இல்லாமல் எந்த வித ஆதரவும் இல்லாமல் இருப்பவர் காளி (அருண் விஜய்).சித்தி இத்னானி.தனியார் ஒட்டலில் வேலை செய்கிறாள் இவளுக்கு பணம் மீது பேராசை இருவரும் நண்பர்கள் திடீர் காளி (அருண் விஜய்) சித்தி இத்னானியிடம் நாம் இருவரும் திருமணம் செய்து கொள்வோம் என தன் விருப்பத்தை சொல்கிறார் சித்தி இத்தானி மறுக்கிறாள் காரணம் உன்னிடம் பணம் இல்லை நான் ஆடம்பரம் வாழ்க்கை கிளியோபாட்ரா (Cleopatra) போல் நான் வாழ விரும்புகிறேன்.
ஒரு நாள் எதிர்பாராதவிதமாக தோற்றத்தில் தன்னை போல இருக்கும் ஒரு நபரை பாண்டிச்சேரியில் சந்திக்கிறார்.அந்த நபர் பெரும் பணக்காரர். காளி (அருண் விஜய்) தன் காதலி ஏமாற்றத்தை கூறுகிறார். உடனே தன்னை போல் முடி Hair ஸ்டலில் /உடை அலங்காரம் மாற்றி தன்னுடைய சொகுசு காரை கொடுத்து உதவுகிறார் சொகுசுகாருடன் சித்திஇத்னானி சந்திக்கிறார் இருவரும் சொகுசு காரில் சந்தோஷ்மாக ஊரைச் சுற்றுகிறார்கள் காதலி சித்திஇத்னானி தரும் ஐடியாவை பின்பற்றி தன்னை போலவே இருக்கும் இன்னொரு நபரை கொலை செய்து விடுகிறார். இருவரும் ஜாலியாக சந்தோஷமா இருக்கிறார்கள் சில நாட்கள் சென்ற பின் தான் கொலை செய்தது கோவாவில் இருக்கும் பெரிய டான் உபேந்திரா என்றும் கோவாவில் பெரும் பணக்காரன், தாதா ஒருவனை கொலை செய்து குற்றத்திற்க்காக தினமும் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் இன்னொரு பக்கம் இவனால் பாதிக்கப்பட்ட எதிரிகள் பணகாரன். தாதா குடும்பம் பாண்டிசேரிக்கு வருகிறது இங்கேயே இவனை கொலை செய்ய துரத்துகிறார்கள்.
ஒரு பக்கம் போலீஸ் மற்றொரு பக்கம் உபேந்திராவின் எதிரிகள் என இரண்டு பக்கமும் காளியை முடிக்க துரத்துகிறார்கள். இவர்களில் யார், யாரை முடித்தார்கள் என்று சொல்கிறது படத்தின் மீதி கதை.
இந்த படத்தில், அருண் விஜய் இரண்டு மாறுபட்ட கதாபாத்திரங்களில் தோன்றுகிறார்.சாதாரண இளைஞரின் தோற்றத்தில் காளியாகவும் மற்றும் கோவா வில் மல்பே உபேந்திரா (ஸ்டைலிஷாக) என்ற இரு வேடங்களில் முழுமையான அதிரடி ஆக்ஷன் த்ரில்லருடன் ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கிறார் அசத்துகிறார்.
ஜான் விஜய் வழக்கமான போலீஸ் கதாபாத்திரம் ,சித்தி இத்னானி மற்றும் தான்யா ரவிச்சந்திரன் நாயகிகளாக தனக்கு கொடுத்த கதாபாாத்திரம் சிறப்பாக நடித்துள்ளார்கள்.
ஒளிப்பதிவாளர் – டிஜோ டாமி அனைத்து காட்சிகளும் சிறப்பாக ஒளிவீச்சு இருந்தது
எடிட்டர் – ஆண்டனி படத்திற்க்கு தேவையான காட்சி மட்டு சேர்த்துள்ளார்
சாம் சி.எஸ் இசையமைத்துள்ள பின்னணி இசை, படத்தின் வேகத்தையும் டென்ஷனையும் அதிகரிக்கிறது.
பணம் பேராசை மனிதனை எந்த அளவிற்கு மாற்றி விடும் என்பதை வேகமாக விறுவிறுப்பாக வித்தியாசமான திரைக்கதையில் பார்வையாளரை உட்கார வைத்து சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் பாராட்டு .
எல்லோரும் ரசிக்கும்படியாக மற்றும் ஆக்ஷன் ரசிகர்களுக்கு விருந்தாகவும் கொடுத்துள்ளார்.










