
தயாரிப்பு : ஆர்டிஎஸ் பிலிம் பேக்டரி
இயக்கம் : சுப்ரமணியன் ரமேஷ்குமார்
நடிப்பு : நட்டி, அருண் பாண்டியன், மூணாறு ரமேஷ், அக்சரா ரெட்டி, யுவினா, வினோதினி
இசை : குணா சுப்ரமணியன்
ஒளிப்பதிவு : பத்மேஷ் மார்தாண்டன்
கதை கரு:
காவல் நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல் காவல் நிலையத்தில் பெண் நீதிபதி உள்பட மொத்தம் 14 பேர் சிறை மர்ம நபர் வலை வீச்சு
படத்தை பார்ப்போம்
காவல் நிலையத்தில் writer ரைட்டர் மற்றும் லாக்ப்பில் சில கைதிகள் இருக்க இன்ஸ்பெக்டரான நாயகன் நட்டி, உடன் அனைத்து போலீஸ்ம் பிரதமர் (PM)பாதுகாப்பிற்காக சென்று உள்ளனர் அதேநேரத்தில் தனது மகனைக் காணவில்லை என்று புகார் அளிக்க வந்த அருண்பாண்டியன், திருமண அழைப்பிதழ் கொடுக்க வந்த பெண் சப்-இன்ஸ்பெக்டரர் கொஞ்ச நேரத்தில் சில போலீஸ் காவல் நிலையத்து வந்து கொண்டு இருக்க அதே நேரத்தில் பொதுமக்களிடம் இருந்து திருட்டு போன பொருட்கள் மீட்டெடுத்த தங்கம், வெள்ளி பல பொருட்கள் காவல் நிலையத்தில் உரியவரிடம் ஒப்படைக்கப்டுகிறது அதில் ஒரு லேப்டாப் வாங்க யாரும் முன் வரவில்லை அந்த லேப்டாப்பை ரைட்டர் தன் மகனுக்காக எடுத்து வைத்துக் கொண்டார் அந்த லேப்டாப் work ஆகுதா? இல்லையா?சரிபார்க்க லேப்டாப் இருந்து மர்மநபர் பேசுகிறார் , எங்கோ இருந்து தொழில்நுட்ப ரீதியாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு பேசுகிறார், காவல் நிலையம் மற்றும் அதனை சுற்றி வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், காவல் நிலையத்தில் இருப்பவர்கள் வெளியே சென்றால் அந்த வெடிகுண்டுகள் தானாகவே வெடிக்கும் என்றும் மிரட்டுகிறார். அனைவரும் சிக்கிக் கொள்கிறார்கள்.
பிரதமரின் வருகை நிகழ்ச்சி தீவிரமாக நடைபெற்று கொண்டு இருக்கும் இந்த வேலையில் இந்த விஷயம் வெளியே தெரிந்தால் பெரிய பிரச்சனையாகிடும் அதனால் போலீசார் பிரச்சனையை வெளியே சொல்லாமல் சமாளிக்க முயற்சிக்க, காவல் நிலையத்திலிருந்து வெளியே கைதி தப்பிக்க முயற்ச்சி செய்ய வெடிகுண்டு வெடித்து. தீ காயத்துடன் உயிர் தப்பினார் காயம்பட்ட நபருக்கு சிகிச்சை அளிக்க ஆம்புலன்ஸ் காவநிலையத்திற்க்குள் வர வைக்கப்படுகிறது , ஓய்வு பெற்ற உயர்காவல் அதிகாரி வர வைக்கப்படுகிறது. பெண் நீதியரசர் வருகிறார் இவர்கள் அனைவரும் காவல் நிலையத்திற்குள் உள்ளனர் மர்ம நபர் தனது தேவையை வெளிப்படுத்துகிறார். அது என்ன? அவர் யார்? காவல் நிலையத்தில் வெடிகுண்டு வைக்க காரணம் என்ன? காவல் நிலையத்தில் சிக்கியவர்களை உயிருடன் வெளியில் வந்தார்களா? காவல் நிலையத்தில் வெடிகுண்டு வைத்த மர்ம நபர் யார்.?.காவல்துறை கண்டுபிடித்ததா ? இல்லையா? ‘ரைட்’ படத்தின் மீதிகதை.
அருண்பாண்டியன் மகன் காணவில்லை தவிப்பு ஏக்கம் காவல் நிலையத்தில் எச்சரிக்கை கொடுப்பதும் அனுபவ நடிப்பு மிக பொருத்தமாக இருந்தது கொடுத்த கதாபாத்தரத்தை சிறப்பாக செய்துள்ளார்.
நட்டி தன் மகள் மீது பாசம் அவள் இறந்து கிடந்த போது கதறி அழுதது பாச மகளை பறி கொடுத்தவேதனை குற்றவாளியை கணடுபிடிக்க தீவீரம் காட்டுவதும் போலீஸ் அதிகாரியாக நன்றாக சிறப்பாக நடித்துள்ளார். மற்றும் இவர்களுடன் மூணார் ரமேஷ் நன்றாக நடித்துள்ளார். தங்கதுரை காமெடி ரசிக்கும்படி இருந்தது. வில்லனாக ரோஷன் நன்றாக நடித்துள்ளார். நீதிபதியாக விநோதினி வைத்யநாதன், ஆதித்யா ஷிவகுமார், யுவினா அக்ஷரா என இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.
M. பத்மேஷின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம். குணா பாலசுப்ரமணியம் இசை படத்தோடு ஓன்றிட செய்கிறது.
தமிழ்சினிமாவில் பல கிரைம் திரில்லர் வந்துள்ளது “ரைட் ” “கதை 90% சதவீதம் போலீஸ் நிலையத்தில் தொடங்கி முடிகிறது விறுவிறுப்பான காட்சிஓட்டம் அடுத்தது என்ன நடக்கப் போவுது எதிர்பார்ப்பு கூடுகிறது நேர்த்தியான திரைக்கதை இயக்குநர் சுப்ரமணியன் ரமேஷ்குமார் கிரைம் திரில்லர் கதையை எல்லோரும் ரசிக்கும்படி கொடுத்துள்ளார். வாழ்த்துக்கள்.










