
திரைப்பட இயக்குனராக இருக்கும் ஹீரோ ஆர்யன் ஷாம், அடுத்த படத்தின் ஸ்டோரி ஸ்டோரி டிஸ்கஷனுக்காக ஆத்யா, லீமா, ராஜ்குமார், கிஷோர் ராஜ்குமார், இமான் அண்ணாச்சி ஆகியோருடன் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பஞ்சமி பங்களாவிற்க்கு செல்கிறார்கள். அங்கு தங்குகிறார்கள் இரவு நேரத்தில் அந்த பங்களாவில் அமானுஷ்யமான சக்தி விஷயங்கள் நடக்கிறது. பங்களாவில். மர்மம் நம்மை மிரளவைக்கும் சம்பங்கள் நடக்கிறது இரவில் முகமூடி மனிதர் ஒருவர் கொடூர ஆயுதத்துடன் மிரட்டுகிறான் விரட்டுகிறான் பயத்தில் அங்கிருந்து தப்பி ஒடுகிறார்கள் மீண்டும் அதே இடத்தில் வந்து சேர்கிறார்கள் . அங்கு நடக்கும் மர்மங்கள் இவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை ஆனால், அவர்களால் அந்த இடத்தை விட்டு வெளிய செல்ல முடியவில்லை அதே நேரத்தில் அந்த பங்களவில் இரவு நேரத்தில் , முகமூடி மனிதர் ஒருவன் கொடூர ஆயுதத்துடன் இவர்களை கொல்ல துடிக்கிறான் விரட்டுகிறான் கையில் கிடைத்த மனிதர்களை கொடூரமாக தாக்குகிறான் கொல்லுகிறான் அவன் யார்? அந்த பங்களாவில் நடக்கும் மர்மங்களின் பின்னணி என்ன?, அந்த வீட்டில் மாட்டிகிட்ட ஹீரோ ஆர்யன் ஷாம் மற்றும் அவரின் உதவியாளர்களின் நிலைமை என்ன? தப்பித்தார்களா? இல்லையா?, என்பதை மிரள வைக்கும் சம்பங்கள். திகிலோடு மர்மங்களுடன் சொல்வது தான் ‘அந்த நாள்’. மீதிகதை.
ஹீரோ இரண்டு குணாதிசயங்களை வெளிப்படுத்தும் சவாலான கதாபாத்திரம் சிறப்பாக ஹீரோ ஆர்யன் ஷாம், முதல் படத்திலேயே எந்தவித தடுமாற்றமும் இன்றி அனுபவம் வாயந்த நடிகர்கள் போல் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறார். ஆறடி உயரம், அமைதியான முகம் என்று ஒரு பக்கம் காதல் ரொம்ன்ஸ் கதைகளுக்கு ஏற்ப பொருத்தமானவராக இருப்பவர், மற்றொரு பக்கம் அடிதடி ஆக்ஷன் ஹீரோவாக தூள் கிளப்புவார் கதை தேர்வு கவனம் செலுத்த வேண்டும் நிச்சயம் தமிழ் / தெலுங்கு சினிமாவில் முக்கிய இடத்தை பிடிப்பார்.
நாயகியாக நடித்திருக்கும் ஆத்யா பிரசாத், ஆர்யன் ஷாமின் உதவியாளர்களாக நடித்திருக்கும் லிமா பாபு, கிஷோர் ராஜ்குமார், ராஜ்குமார், இமான் அண்ணாச்சி ஆகியோர் அவர்களுக்கு கொடுத்த கதாபாத்திரம் சிறப்பாக நடித்துள்ளனர்
இசையமைப்பாளர் என்.எஸ்.ராபர்ட் சற்குணத்தின் பின்னணி இசை படத்திற்கு சரியாக பயணித்திருக்கிறது.
படம் பார்பவர்களை திகில் காட்சிகளை காட்சிப்படுத்தியிருக்கும் ஒளிப்பதிவாளர் சதிஷ் கதிர்வேல், இரவு நேர ஒளிகாட்சி சிறப்பாக காட்சியமைத்துள்ளார் .
படத்தொகுப்பாளர் ஜே.எஸ்.காஸ்ட்ரோ படத்திற்க்கு தேவையானதை வெட்டி – சேர்த்து இயக்குநர் சொல்ல வந்த கதையை தெளிவாக புரிய வைத்துள்ளார் .
படத்தின் கதை
நரபலியை மையமாக வைத்து உருவாக்கம்
ஹீரோ ஆர்யன் ஷாம் மற்றும் இயக்குநர் வீவீ கதிரேசன் எழுதியிருக்கும் கதை மற்றும் திரைக்கதை சுவாரஸ்யம் அடுத்த காட்சி எதிர்ப்பார்களுடன் கதை நகர்கிறது,நரபலியின் பின்னணி போன்றவை திகில் அனுபவத்தை கொடுக்கிறது.ஆர்யன் ஷாம் இரண்டாவது குணாதிசயங்களை விஸ்ட்! யாரும் எதிர்பார்க்காதது.
சொல்ல வந்ததை நேர்த்தியாக சொல்லி உள்ளார் இயக்குநர் வீவீ கதிரேசன் திரையுலகில் நல்ல எதிர்காலம் உள்ளது
மொத்தத்தில், ‘அந்த நாள்’ பார்க்கலாம்.










