Saturday, July 25

“லட்சுமி காந்தன் கொலை வழக்கு”- திரை விமர்சனம்.

நடிகர்கள் :-

வெற்றி – அறிவுமதி

ரங்கராஜ் பாண்டே – சிவானந்தன்​

பிரிகிடா சகா – மல்லிகா

மாறன் – மூர்த்தி

சரவணன் – சற்குணம்

லிசி ஆண்டனி – சூடாமணி

அருவி மதன் – வேல்முருகன்

கன்யா பாரதி – அன்னம்

சுப்பிரமணியம் சிவா – தர்மன்

தொழில்நுட்பக் கலைஞர்கள்:-

தயாரிப்பாளர்: கே.வி. சபரீஷ்

தயாரிப்பு நிறுவனம்: 2எம் சினிமாஸ், டி பிக்சர்ஸ்

இணை தயாரிப்பு, கதை, இயக்கம்: தயாள் பத்மநாபன்

திரைக்கதை – வசனம்: கவிதா பாரதி, தயாள் பத்மநாபன்

இசை – பின்னணி இசை: தர்புகா சிவா

ஒளிப்பதிவு: எம்.வி. பன்னீர்செல்வம்

படத்தொகுப்பு: பூபதி வேதாகிரி

பாடல்கள்: பாரதியார், பாரதிதாசன், தயாள் பத்மநாபன்

மக்கள் தொடர்பு: ரேகா

கதை கரு   ஒரு கொலை குற்றவாளி _க்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது சரியா ? தவறா?

படத்தை பார்ப்போம்;

1944-ல் நடந்த லட்சுமிகாந்தன் கொலை வழக்கு சென்னை  உலுக்கிய ஒரு வரலாற்றுச் சம்பவமாகும். .

லட்சுமிகாந்தன் கொலை வழக்குக்கும், இந்தத் திரைப்படத்தின் கதைக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை!

இப்போது இந்த பயடத்தின் கதைக்கு வருவோம் 1970-களில் தமிழக கிராமப் பின்னணியில் தொடங்கும் கதை.

படித்த இளைஞர் அரசு வேலை கிடைக்காத விரக்தியில் வாழும் நாய்கன்  வெற்றி , அவரது நண்பர் மாறன் இருவரும் நெருங்கிய நண்பர்கள் மாறன் குடும்ப தேவைக்கு சிறு திருட்டுகளை செய்து வாழ்க்கையை நடத்துகிறார். திருட்டுக்கு விளக்கம் கொடுக்கிறார் இந்த திருட்டு தொழிலை பசிக்கு திருடினால் திருட்டு இல்லை சொகுசு வாழ்க்கைக்கு திருடினால் திருட்டு  நாயகன் வெற்றி கற்றுதருகிறார் பிறகு  இருவரும் சேர்ந்து திருடுகிறார்கள்  நாயகனுக்கு கடன், வட்டி நாளுக்கு நாள் அதிகமாகிறது நிம்மதி இல்லை   நாயகன்  பெரிய  திருட்டு திட்டம் போடுகிறார் திருட போன இடத்தில்  சந்தர்ப்பசூழ்நிலை காரணமாக  பண்ணையார்  கவிதாபாரதியை கத்தியால் குத்தி கொடூரமா கொலை செய்து விடுகிறார் குற்றத்தை ஒப்புகொள்கிறார  கொலை செய்த குற்றத்திற்காக அவருக்குதூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது. தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முந்தைய இரவில், நீதிபதி, மருத்துவர், சிறை அதிகாரி ஆகியோர் வெற்றியை சந்திக்கிறார்கள். இறுதியில் வெற்றிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதா? அவரது வாதத்திற்கு சட்டம் என்ன பதில் சொல்கிறது? என்பதே பல திருபங்களுடன் படத்தின் மீதி கதை. .

நாயகன் வெற்றி தனது கதாபாத்திரத்தில் வேதனை, கோபம், விரக்தி ஆகியவற்றை மிகவும் இயல்பாக  உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார். நாயகனின் அம்மா நடித்த லிசி ஆண்டனி, பிரிகிடா சாகா, கவிதா பாரதி பல ஏக்கர் நிலத்திற்கு சொந்தகாரர் ரெட்டி யாராக  வாழ்த்து இருக்கிறார்  ‘பருத்திவீரன்’ சரவணன் அமைதியான நடிப்பு , சுப்பிரமணியம் சிவா சிறையில்  தூக்கு கயிறு தயார் செய்தல்  இது வரை எந்த படதிலும் இந்த காட்சி காட்டியதுயில்லை மற்றும் ரங்கராஜ் பாண்டே சிறை அதிகாரியாக அளவான பேச்சு சிறப்பான நடிப்பு  அனைவரின் கவனத்தை ஈர்த்தது . இப்படத்தில் நடித்த  அனைவரும் கதைக்கு தேவையான நடிப்பை சிறப்பாக வழங்கியுள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்

வி. பன்னீர்செல்வத்தின் ஒளிப்பதிவு நீதிமன்ற அறை மற்றும் சிறைக் காட்சிகளின் உணர்வை யதார்த்தமாக பதிவு செய்துள்ளது. தர்புகா சிவாவின் பின்னணி இசை பல இடங்களில் காட்சிகளின் தூக்கி பிடிக்கிறது

எடிட்டர் : பூபதி வேதாகிரி படத்திற்க்கு தேவையான காட்சிகள் சேர்ந்துள்ளார்

பாடல்கள்: பாரதியார், பாரதிதாசன், தயாள் பத்மநாபன் பாடல் அனைத்தும் மீண்டும் கேட்க தூண்டும் வரிகள்..

தயாள் பத்மநாபன்,கதை எழுதி இயக்கியிருக்கும் தயாள் பத்மநாபன், எளிமையான கதையாக இருந்தாலும் வலிமையான திரைகதை  “சட்டத்தின் நோக்கம் பழிவாங்குவது அல்ல; மனிதனை திருத்தி சமூகத்தில் மீண்டும் வாழ வைப்பதே” என்ற கருத்தை ஆழமாக  முன்வைக்கிறார். பார்வையாளர்களை சிந்திக்க வைக்கிறார்    படத்தின் மிகப்பெரிய பலம். மொத்தத்தில் “லட்சுமி காந்தன் கொலை வழக்கு” வெறும் கொலை வழக்கை பேசும் படம் அல்ல; மரண தண்டனை, நீதி, மனிதநேயம் குறித்து  சமூக அக்கறை கொண்ட படமாக வெளிவந்துள்ளது பாராட்டு

அனைவரும் பார்க்கலாம்

ரேட்டிங் 3:०