
தயாரிப்பு: குமார், அபிஷேக், பாவனா, ஆதித், இயக்கம்: ரியாஸ் மராத்
நடிப்பு: பாவனா, ரகுமான், ஷிபின், அர்ஜூன்; ஒளிப்பதிவு: சுஜித் சாரங், இசை: ஹர்ஷவர்தன் ராமேஸ்வர்
கதை கரு:
மனநல பாதிக்கப்பட்டவர்களை மட்டும் கடத்தி கொலை செய்யபடுகிறது ஏன் ? எதற்க்கு.! நடந்தது நடக்கப் போவது என்ன ?
படத்தை பார்ப்போம்.
தடயவியல் நிபுணரான பாவனாவின் தம்பி உட்பட 3 பேர் மர்மமான முறையில் இறக்கிறார்கள். பாவனா அவருக்கு ஜியான் எனற சகோதரர் இருக்கிறார் அவர் ஒரு விபத்தில் தங்கள் பெற்றோர் இறந்ததால் ஏற்பட்ட அதிர்ச்சி மனநல பாதிக்கப்பட்டு உள்ளார் அதற்கான மருந்து மாத்திரை சாப்பிட்டு கொண்டு வருகிறார் ஒரு நாள் ஜியான் காணாமல் போகிறார் அவரை போலீஸ் அதிகாரி ரகுமான் தேடுகிறார் அதே நேரத்தில் ஜியானைப் போன்ற சிலர் மனநல பாதிக்கப்பட்டவர்களும் காணாமல் போகிறார்கள் அவர்களை உடனே கொல்லப்பட்டதை தெரியவருகிறது மனநல பாதிப்புள்ளவர்களா இருப்பதால் தற்கொலை செய்து இருக்கலாம் என போலீஸ் நினைக்கிறது. அது, தவறு, இது கொலை என்று சொல்லும் பாவனா, கொலையாளியை கண்டுபிடிக்க தேடுகிறார் அலைகிறார். ஒரு கட்டத்தில் உண்மையை உணர்ந்த போலீஸ் அதிகாரி ரகுமானும் கொலைகள் குறித்து தீவிரமாக விசாரிக்கிறார். பல உண்மை களை கண்டுபிடிக்கிறார். அவர்கள் இறக்க காரணம் என்ன? எதற்காக மனநல பாதிப்பக்கபட்டவர்களை தேடி கொல்லபடுவது ஏன் எதற்கு கொலையாளி யார்? பல திருப்பங்களுடன் படத்தின் மீதி கதை..
தடயவியல் நிபுணரான பணி வேகம் விவேகமாகவும் சுறு சுறுபாக மற்றும் அவரின் உடை சரியாக பொருந்திருந்தது அதே நேரத்தில் தம்பி மீது அதிக அக்கறை பாசம் கொண்ட வராக சிறப்பாக நடிப்பை பாவனா கொடுத்துள்ளார்
ரகுமான் சிரிப்பு இல்லாமல் நேர்மையான போலீஸ் அதிகாரி மிடுக்கான நடை உடை வேகம் எந்த நேரமும் கொலை காரனை தேடும் வேட்டை கண்டு பிடிக்க எடுக்கும் தீவிர முயற்சியில் கொலைகாரனுடன் ஆக்ரோஷமாக சண்டை எல்லாமே சிறப்பாக இருந்தது. அவருக்கு ஒரு சல்யூட் கொடுக்கலாம்.
பாவனவின் தம்பியாக நடித்த கதாபாத்திரம் சிறப்பாக இருந்தது மற்றும் இப்படத்தில் நடித்த துணை நடிகர் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள் ஒளிப்பதிவு: சுஜித் சாரங், இசை: ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் படத்திற்க்கு பெரிய பலம், ;எடிட்டர் படத்தின் நீளத்தை கொஞ்சம் குறைத்து இருக்கலாம்.
இயக்குனர் ரியாஸ் மராத் படத்தின் வித்தியாசமான சிந்தனை கதை உருவாகியுள்ளது சஸ்பென்ஸ் த்ரில்லர அடுத்த காட்சி என்ன? யாரும் யூகிக்க முடியாது பார்வையாளர் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது வழக்கமான சினிமா பார்த்து போராடித்தவர்களுக்கு “அனோமி .”சஸ்பென்ஸ் திரில்லர் பிரியர்களுக்கு நல்ல விருந்து










