“வணங்கான்” திரைப்பட விமர்சனம்.
வணங்கான் திரைப்படத்தின் கதை என்னவென்றால் கன்னியாகுமரியில் சுனாமியின் பாதிப்பால்
வீடு வாசல் தாய் தந்தையரை இழந்த வாய் பேச முடியாத அனாதை சிறுவன் கோட்டி என்பவன் தனக்கு ஆதரவாக கிடைத்த பெண் பிள்ளை தேவியை தங்கையாகவே பாவித்து வளர்க்கிறான் இவர்களுக்கு அந்த ஊரின் சர்ச் பாதர் ஆதரவளித்து வளர்த்து வருகிறார்
அநியாயத்தை கண்டு பொங்கி பல பிரச்சினைகளை செய்யும் கதாநாயகனுக்கு பார்வையற்ற பிள்ளைகள் தங்கி இருக்கும் அனாதை ஆசிரமத்தில் காவல்காரன் வேலை கிடைக்கிறது
வாய் பேச முடியாத கதாநாயகன் கண்பார்வையற்ற பிள்ளைகளிடம் அண்ணனாக பழகுகிறான் அங்கு அந்தப் பெண்கள் குளிப்பதை ரசிக்கும் அந்த விடுதியில் பணிபுரிவோ வரை மிகக் கொடூரமாக கொன்று விடுகிறான் தானே கொன்றதாக காவல்துறையிடம் சரணடைந்து நீதிமன்றத்தின் விசாரணைக்கு நிறுத்தப்படுகிறான்
சிறையில் இருந்து அவன் எப்படி வெளியே வந்தான் வெளியே வந்தபின் அவனின் தங்கையின் நிலைமை என்ன...
