Monday, September 21

“பீப் “திரைபட விமர்சனம்.

எம்க்வெஸ்ட் மூவீஸ் தயாரித்திருக்கும் பீப் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் எல்.சண்முக சுந்தர்

நடிகர்கள், இளந்தேவன் – ராகவ் ரங்கநாதன், சுனைனா – யாமினி லட்சுமணன், காவ்யா – பிரேர்ணா கண்ணா, நயனா கபூர் – ஐடிஐ ஆச்சார்யா, சுராஜ் – அருண் மோகன், சாந்தா – ஷ்ரவன் ராமகிருஷ்ணன்,ஹெலன் – ஜூஹி ஷர்மா, லயா – பிரியதர்ஷினி, இன்ஸ்பெக்டர் – நிதீஷ், எஸ்ஐ – பாலாஜி, வினோத் – ராஜவேல், ஹர்ஷ் – அதுல், யோகன் – ஜி.சிவகுமார், ஹீரோ அப்பா – வெங்கட் ரமேஷ், பேராசிரியர் மாமனார் – கர்னல் ஆர் கணேசன், பேராசிரியர் சிதம்பரம் – எல் சண்முக சுந்தர் மற்றும் பலர் ​நடித்துள்ளனர்.

 தொழில்நுட்ப கலைஞர்கள்:- நிர்வாகத் தயாரிப்பாளர்கர்னல் ஆர் கணேசன், ஒளிப்பதிவுபிரதீப் பத்ம குமார், இசையமைப்பாளர்பிரசாந்த் விஹாரி,  எடிட்டர்,  – அபிஷேக், விக்னேஷ் ஆர்.எல்,  நிரஞ்சன், மக்கள் தொடர்பு ஏ.ஜான்

படத்தை பார்ப்போம்:

மாணவரான நாயகன் ராகவ் ரங்கநாதன், ஒரு புகைப்படத்தை பார்த்ததும்  அங்கே என்ன நடந்திருக்கும் என்பதை அறிந்துக் கொள்ளும் அதிசய ஆற்றல்சக்தி உள்ளவராக உள்ளார்  இருக்கிறார். அவருக்கு கடவுள் கொடுத்த சக்தி, என்று அவரது நண்பர்கள் சொன்னாலும், அது அறிவியல் பூர்வமானது என்று அவர் நம்புகிறார்.

நடிகை ஒருவரது தீவிர ரசிகராக இருக்கும் ராகவ், அந்த நடிகையை நேரில் சந்திப்பதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறார். அதேநேரத்தில் பாலியல் தொழிலாளியான யாமினி லக்‌ஷ்மணனின் நட்பு கிடைக்கிறது. யாமினியுடன் நட்பாக பழகி வரும் ராகவ், ஒரு பிரச்சினைக்காக போலீஸ் காவல் நிலையத்திலிருந்து வெளியில் வர யாமினி உதவி செய்கிறார் அவர் மீது அக்கறையும் காட்டி வரும் சூழலில், திடீரென்று யாமினி அடுக்குமாடி குடியிருப்பின் மேல் தளத்தில் இருந்து விழுந்து இறந்து விடுகிறார். அவரது மரணம் கொலை தான் என்பது உறுதி செய்யப்பட்டாலும், அதற்கான சரியான ஆதாரங்கள்  கிடைக்காமல் போலீஸ் தடுமாற்றம் விசாரணை துரிதமாக நடக்கவில்லை.இந்த சூழ்நிலையில் ராகவ் தனது அதிசய ஆற்றல் சக்தியை பயன்படுத்தி கொலை எப்படி நடந்தது  மற்றும் கொலையாளி யார் ? என்பதை கண்டுபிடிக்க முயற்சிக்கும் ராகவ் கொலைகாரன் யார் ? போலீஸ் விசாரணை சூடு பிடித்ததா? பல திருபங்களுடன் படத்தின் மீதிகதை.