
முகவை பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் ஜே.அங்கையற்கண்ணன் தயாரித்து க்ளாஸ்மேட்ஸ் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் குட்டிப்புலி ஷரவண சக்தி
இதில் அங்கையற்கண்ணன், பிராணா, குட்டிப்புலி ஷரவண சக்தி, மயில்சாமி, டிஎம் கார்த்திக், சாம்ஸ், எம்பி முத்துப்பாண்டி, அபி நட்சத்திரா, அருள்தாஸ், மீனாள், எஸ்ஆர் ஜாங்கிட் ஐபிஎஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள் :இணை இயக்குனர் : ஜே.அங்கையற்கண்ணன், ரத்னகுமார்,இணை தயாரிப்பாளர் : கலைவாணி கண்ணன், நிர்வாக தயாரிப்பாளர் : ஹர்னிஷ்.ஏ.கே., பேனர்: டிஓபி: அருண்குமார் செல்வராஜ், படத்தொகுப்பு: எம்.எஸ்.செல்வம், கூடுதல் எடிட்டர் : ஆர்.ராஜவர்மன், கலை இயக்குனர் : ஜெய், இசையமைப்பாளர் : பிரிதிவி, பாடல் வரிகள் : சீர்காலி சிற்பி , நடன இயக்குனர் : சந்தோஷ், ஆடை வடிவமைப்பாளர் : ஏ.முத்து, ஸ்டண்ட் : ராம்குமார், ஸ்டில்ஸ்: சிவா, ஒப்பனை: ஜி.ராகவன் ராகுல்,ஒலி வடிவமைப்பு: சி.ஏ.மைதீன் (மைட்டி ஸ்டுடியோ), மக்கள் தொடர்பு : AIM சதீஷ்.
“குடி குடியைக் கெடுக்கும்”குடியால் வாழ்க்கை சீர்ழிக்கிறது கதைகளம்
ஹீரோ அங்கையற்கண்ணன் கால் டாக்சி டிரைவர் தான் சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் தனது மாமா ஷரவணசக்தியுடன் சேர்ந்து மது குடிக்கிறார்கள் இருவரும் மதுக்கு அடிமையாகி விட்டனர் இருவரும் தினமும் குடிக்கிறார்கள். இதனால் ஹீரோ தன் புது மனைவி மீது சந்தேகப்பட குடும்பத்தில் அதிக பிரச்சனை சண்டையும் ஏற்பட்டு குடிக்கு அடிமையான இவர்கள் . குடி பழக்கத்தை விட்டு திருந்தினார் நல்ல மனிதராக குடும்பத்தோடு சந்தோஷமாக வாழும் மயில்சாமியை அங்கையர்கண்ணனும், ஷரவணசக்தியும் சேர்ந்து மயில்சாமியை மீண்டும் குடிக்க வைத்துவிடுகிறார்கள். இதனால் மூன்று பேர் வாழ்க்கையில் ஏற்படும் மிக பெரிய பிரச்சனையிலிருந்து தப்பித்தார்களா ? மதுபழக்கத்தை கைவிட்டார்களா? திருந்தினார்களா? என்பது படத்தின் மீதிக்கதை…
ஹீரோ.வாகவரும் அங்கையர்கண்ணனும்,கதாபாத்திரத்திற்கு ஏற்றபடி அளவாக நடித்து கவனம் ஈர்க்கிறார். மதுபோதையில் அவர் செய்யும் ரகளைகள் ரசிக்கும்படி இருக்கிறது.
அவரது மாமனாக ஷரவணசக்தியும் சேர்ந்து நடிக்கும் (கடிக்கும்) லூட்டி ஓவராக பார்க்க தாங்க முடியலா ..
ஹீரோ மற்றும் அவரது மாமன் ஆகியோரின் குடிபழக்கத்தை அவர்களது மனைவிமார்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளாதது குடிகாரர் மீது அதிகபாசம் காட்டுவது போன்ற காட்சி ஆச்சரியம் அளிக்கின்றன.
‘அயலி’ அபி நட்சத்திரா கிளைமாக்ஸில் அதிரவைக்கிறார்.எதிர்பாராதது
குடிகார கதாபாத்திரத்துக்கு பெயர் பெற்ற மயில்சாமியும் படத்தில் மதுப் ப்ரியராக சில காட்சிகள் வந்து போகிறார்.
நாயகனுக்கு மனைவியாய் வருகிற பிரணா ஹோம்லி லுக்
மயில்சாமி தான் நடித்தவற்றில் கடைசியாக டப்பிங் பேசிய படமாம் இது தான். நடிப்பில் எந்த வித்தியாசமும் காட்டாமல் வழக்கம்போல் குடிகாரராக வந்து, அசத்துகிறார்
துபாயில் வேலை செய்துவிட்டு மீண்டும் கிராமத்துக்கு வந்தாலும், கோட் சூட்டுடன் வலம் வரும் சாம்ஸ்,சாம்ஸ் நடிப்பு பங்களிப்பை சரியாக கொடுத்திருக்கிறார்
குடிபோதை மறுவாழ்வு மையம் நடத்தி வரும் டி எம் கார்த்திக் குடிபழக்கத்தை விட சிகச்சைகாக வரும் அவர்களுடன் பழகி, இவரும் அவர்களைவிட மகா குடிகாரனாக மாறிப்போகிறார்.
பிரித்வி இசையில், சீர்காழி சிற்பி வரிகளில் பாடல்கள் அனைத்தும் ஆட்டமும், தாளமும் போட வைக்கிறது. அருண்குமார் செல்வராஜின் ஒளிப்பதிவு நேர்த்தி
மது பழக்கத்துக்கு அடிமையானவர்கள் தங்களை சீரழித்துக் கொள்வதோடு, தங்களை சார்ந்திருப்பவர்களையும் எப்படி சீரழிக்கிறார்கள்,குடி…குடி…என்று காட்டுவது சற்று சலிப்படைய செய்கிறது.
படத்தின் மையக்கருவுக்காக இயக்குநர் ஷரவணசக்தியை மனதார பாராட்டுக்கள் சில காட்சிகள் வசனங்களுக்காகவும் பாராட்டலாம். குறிப்பாக, கிளைமாக்ஸ் நெருங்கும் போது, அபி நக்ஷத்ரா கதாபாத்திரம் மூலம் அவர் சொல்லியிருக்கும் விசயம் நெஞ்சை பதற வைக்கிறது குடிகாரன் களுக்கான மரண அடியாகவும் இருக்கிறது.
மொத்தத்தில், ‘கிளாஸ்மேட்ஸ்’ ஆண்கள் நிச்சயம் பார்க்க வேண்டிய படம்.
ரேட்டிங் 2.5/5










