“அறம் செய்” திரைப்படத்தின் விமர்சனம்.
நடிகர்கள் : பாலு எஸ்.வைத்தியநாதன், அஞ்சனா கிர்த்தி, மேகாலி மீனாட்சி, லொள்ளு சபா ஜீவா
இசை : ஸ்ரீகாந்த் தேவா
ஒளிப்பதிவு : பாலு எஸ்.வைத்தியநாதன்
இயக்கம் : பாலு எஸ்.வைத்தியநாதன்
தயாரிப்பு : தாரகை சினிமாஸ்
மருத்துவ கல்லூரி மாணவரான நாயகன் பாலு எஸ்.வைத்தியநாதன், தான் படிக்கும் அரசு மருத்துவக் கல்லூரியை தனியாரிடம் கொடுப்பதாக தகவல் வருகிறது இதற்க்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, தன்னுடன் படிக்கும் மாணவர்களுடன் சேர்ந்து போராட்டம் நடத்த தயரகிறார் போலீஸ் அனுமதி தரமறுக்கிறது இதனால், தன் மருத்துவ கல்லூரி வளாகத்திற்க்குள் உண்ணாவிரத போராட்டம் நடத்துகிறார் அவருக்கு சில கட்சிகள் ஆதரவும் சிலர் மிரட்டல்கள் வருகிறது.
அடுத்தது , நாயகி அஞ்சனா கிர்த்தி அறம் செய் என்ற அரசியல் அமைப்பின் மூலம், இன்றைய நம் நாட்டில் நடக்கும் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார் . இதனால், அவருக்கும் ஆளும்கட்சி பல...
