“ரத்னம்” திரைப்பட விமர்சனம்
ஸ்டோன் பெஞ்ச் புரொடெக்ஷன் தயாரிப்பில்,நடிகர் விஷால் & இயக்குனர் ஹரி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் ‘ரத்னம்’. நடிகர்கள் , சமுத்திரக்கனி, ப்ரியா பவானி சங்கர், யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், கௌதம் வாசுதேவ் மேனன் ,YG மகேந்திரன் , விஜயகுமார் ,மற்றும் நட்சத்திர கும்பலே நடித்துள்ளனர் நடிப்பில் முழுக்க முழுக்க ஆக்ஷன் திரைப்படமாக ஏப்ரல் 26 - வெளியாகியுள்ள . படம் எப்படி இருக்கு வாங்க பார்க்கலாம் ……
1994 ஆம் ஆண்டில் கதை தொடங்கி… திருப்பதி செல்லும் பக்தர்களை வழி மறித்து அவர்களிடம் தங்க நகைகளை கொள்ளை அடிக்கும் மிகப்பெரும் கொள்ளையர் கூட்டம்.. இப்படியாக தமிழக – ஆந்திர எல்லையில் பதட்டமான அந்த காட்சி படமாக்கி விறுவிறுப்பான தொடக்கம் ..
சிறுவயதில் தாயை இழந்த பின்னர், தன்னை அரவணைத்த சமுத்திரக்கனியை காப்பாற்றுவதற்காக கொலை செய்துவிட்டு சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்குச் செல்கின்றார் விஷால்...









