Monday, July 27

Month: October 2025

*மெடிக்கல் கிரைம் த்ரில்லர் திரைப்படம் “அதர்ஸ்” – பத்திரிக்கையாளர் சந்திப்பு!*

News
*மெடிக்கல் கிரைம் த்ரில்லர் திரைப்படம் “அதர்ஸ்” – பத்திரிக்கையாளர் சந்திப்பு!* கிராண்ட் பிக்சர்ஸ் (Grand Pictures) நிறுவனத்தின் தயாரிப்பில்,அப் 7 வெஞ்சர்ஸ் ஆதிராஜ் புருஷோத்தமன் இணைத் தயாரிப்பில், அபின் ஹரிஹரன் இயக்கத்தில் உருவாகியுள்ள மெடிக்கல் கிரைம் த்ரில்லர் திரைப்படம் “அதர்ஸ்” வரும் நவம்பர் 7 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. படத்தில் புதிய முகம் ஆதித்யா மாதவன் நாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக கௌரி கிஷன் மற்றும் அஞ்சு குரியன் நடித்துள்ளனர். படம் வெளியாகும் முன்னதாக,நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் படக்குழுவினர் ஊடக நண்பர்களை சந்தித்து, படத்தைப் பற்றிய அனுபவங்களைப் பகிர்ந்தனர். இசையமைப்பாளர் ஜிப்ரான்: “ஒரு புரொடக்ஷன் நிறுவனத்துடன் வேலை செய்வது எப்போதும் ஒரு புதிய அனுபவம். கிராண்ட் பிக்சர்ஸ் என்னிடம் மிகவும் அன்பாக நடந்துகொண்டனர். அபின் கதை சொன்னபோதே வில்லன் க...

*ZEE5-ல் ‘கிஸ்’ — வரும் நவம்பர் 7 முதல் ஸ்ட்ரீமிங்!*

News
*ZEE5-ல் ‘கிஸ்’ — வரும் நவம்பர் 7 முதல் ஸ்ட்ரீமிங்!* நாட்டின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரொமாண்டிக் தமிழ்த் திரைப்படமான ‘கிஸ்’-யை நவம்பர் 7, 2025 முதல் பிரத்தியேகமாக ஸ்ட்ரீம் ஆகவுள்ளது. பிரபல நடன இயக்குநர் சதீஷ் கிருஷ்ணன் தனது அறிமுக இயக்கமாக உருவாக்கியுள்ள இப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் கவின் மற்றும் ப்ரீத்தி அஸ்ரானி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் VTV கணேஷ், ராவ் ரமேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ‘கிஸ்’ திரைப்படம் அர்ஜுன் (கவின்) எனும் திறமையான இசைக்கலைஞரின் கதையைச் சொல்கிறது. அவரிடம் ஒரு வினோதமான சக்தி உள்ளது — ஒரு ஜோடி முத்தமிடும் போதெல்லாம், அவர்கள் உறவின் எதிர்காலத்தை முன்கூட்டியே காண முடியும்! காதலும் விதியும் மீது நம்பிக்கையற்ற அர்ஜுனின் வாழ்க்கை, மீரா (ப்ரீத்தி அஸ்ரானி) என்பவளைச் சந்தித்த ...

கிஷ்கிந்தாபுரி”, 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து, ஜீ5 தளத்தின்

News
*மர்மம் மற்றும் திகில் நிறைந்த "கிஷ்கிந்தாபுரி", 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து, ஜீ5 தளத்தின் வெற்றி திரைப்பட வரிசையில் இணைந்துள்ளது.* இந்தியாவின் முன்னணி OTT தளமான ZEE5, கிஷ்கிந்தாபுரி திரைப்படத்தை சமீபத்தில் வெளியிட்டது. கௌசிக் பெகல்லபாட்டி இயக்கத்தில், சைன்ஸ்கிரீன்ஸ் சார்பில் சாகு கருப்பதி தயாரித்த இந்த படத்தில் பெல்லம் கொண்டா சாய் ஸ்ரீநிவாஸ், அனுபமா பரமேஸ்வரன், மகரந்த் தேஷ்பாண்டே மற்றும் தனிக்கெல்லா பரணி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தெலுங்கு மொழியில் அக்டோபர் 17 அன்று ZEE5-இல் வெளியானது, மற்றும் பெரும் வரவேற்பைப் பெற்றதையடுத்து, இப்போது திரைப்படம் தமிழ், கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் வெளியாகியுள்ளது. தற்போது இந்த திரைப்படம் ZEE5 தளத்தில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்துள்ளது. இந்த கதை, ஆமானுஷ்ய சுற்றுலாவுக்காக ஒரு பழமையான வானொலி நிலையத்திற்கு சென்ற...
“ஆண் பாவம் பொல்லாதது” திரைப்பட முன் வெளியீட்டு விழா !!

“ஆண் பாவம் பொல்லாதது” திரைப்பட முன் வெளியீட்டு விழா !!

News
“ஆண் பாவம் பொல்லாதது” திரைப்பட முன் வெளியீட்டு விழா !! https://www.youtube.com/live/paMj7XGjoCw?si=6KPcpLr-BHQpjjhh Drumsticks Productions தயாரிப்பில், இயக்குநர்  கலையரசன் தங்கவேல் இயக்கத்தில், ஜோ' படத்தில் பெரிய வரவேற்பைப் பெற்ற ரியோ ராஜ் - மாளவிகா மனோஜ் ஜோடி மீண்டும் இணைந்து நடிக்க, அழகான ஃபேமிலி என்டர்டெயினராக உருவாகியுள்ள படம் `ஆண் பாவம் பொல்லாதது'. இப்படம் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி  உலகெங்கிலும் வெளியாகிறது. இப்படத்தின் முன் வெளியீட்டு விழா, தனியார் மாலில்,  ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள்  முன்னிலையில்,  படக்குழுவினருடன்,  திரைபிரபலங்கள் கலந்துகொள்ள கோலாகலமாக நடைபெற்றது. இதில் இயக்குநர் மிஷ்கின் பேசியதாவது.., ஆண்பாவம் என்ற  வார்த்தை பாண்டியராஜன் சார் படமெடுத்த போது தான் எங்களுக்குத் தெரிந்தது. அந்த வார்த்தையே ஆச்சரியமாக இருந்தது. இத்தனை வருடங்கள் கழித்து இந்தக்குழு பொல்லாத...
“திரைக்கதைதான் ஹீரோ” – புதிய முயற்சியுடன் இங்கிரெடிபிள் புரொடக்ஷன்ஸ்!

“திரைக்கதைதான் ஹீரோ” – புதிய முயற்சியுடன் இங்கிரெடிபிள் புரொடக்ஷன்ஸ்!

News
“திரைக்கதைதான் ஹீரோ” – புதிய முயற்சியுடன் இங்கிரெடிபிள் புரொடக்ஷன்ஸ்! Production No. 2 – இயக்குநர் சிவநேசனின் இயக்கத்தில் ஸஸ்பென்ஸ் த்ரில்லர் ‘காளிதாஸ்’ (2019) திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, Incredible Productions தனது அடுத்த தயாரிப்பை அறிவித்துள்ளது. எதிர்பாராத திருப்பங்களை திரைக்கதையாய் கொண்ட இந்த சஸ்பென்ஸ் திரில்லர் படம், ஆரம்பம் முதல் முடிவு வரை பார்வையாளர்களை கவனத்தை ஈர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது. இத்திரைப்படத்தின் மூலம் ‘நாளைய இயக்குனர்’ (Season 1–4) நிகழ்ச்சியை இயக்கிய சிவநேசன் திரைப்பட இயக்குநராக அறிமுகமாகிறார். இயக்குநர் கூறுகையில்: “இந்த படத்தில் திரைக்கதையே ஹீரோ. ரசிகர்களை கடைசி வரை சஸ்பென்ஸில் வைத்திருக்கும் கதை இது,” என தெரிவித்தார். இப்படத்தில் கிஷோர், சார்லி, சாருகேஷ் (HeartBeat புகழ்), வினோத் கிஷன், மற்றும் ஷாலி நிவேகாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத...
சிவராஜ்குமார் நடிக்கும், அன்புக்குரிய தலைவர் “கும்மடி நரசைய்யா”

சிவராஜ்குமார் நடிக்கும், அன்புக்குரிய தலைவர் “கும்மடி நரசைய்யா”

News
*டாக்டர் சிவராஜ்குமார் நடிக்கும், அன்புக்குரிய தலைவர் கும்மடி நரசைய்யா அவர்களின் வாழ்க்கை வரலாறு படத்தின் ஃபர்ஸ்ட் லுக்  & கான்சப்ட்  வீடியோ வெளியானது !!* அனைவராலும் நேசிக்கப்படும் அரசியல் தலைவர் கும்மடி நரசைய்யா அவர்களுக்கு தனியே அறிமுகம் தேவையில்லை. அடித்தட்டு மக்களுக்காக அரசியலில் தன்னை அர்ப்பணித்த இவர், 1983 முதல் 1994 வரையிலும், பின்னர் 1999 முதல் 2009 வரையிலும்,  யெல்லந்து தொகுதியில், சுயேச்சை வேட்பாளராக,  பலமுறை சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியவர். சாதாரண மக்களின் நலனுக்காக தன்னலமின்றி உழைத்த இவர், தனது உறுதி தவறாத நேர்மைமிகு  வாழ்க்கையால், மக்களின் அன்பையும் மரியாதையையும் பெற்றார். இந்த மகத்தான நபரின் வாழ்க்கையை, பெரிய திரையில் உயிர்ப்பிக்கும் முயற்சியாக உருவாகியுள்ளது ‘கும்மடி நரசைய்யா’ எனும் வாழ்க்கை வரலாறு திரைப்படம். இந்தப் படத்தில் தலைசிறந்த கன்னட நடிகர் டாக்டர் சிவரா...
“கிஷ்கிந்தாபுரி”, அக்டோபர் 24 முதல் ZEE5-இல் தமிழ், கன்னடம் மற்றும் மலையாளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகிறது

“கிஷ்கிந்தாபுரி”, அக்டோபர் 24 முதல் ZEE5-இல் தமிழ், கன்னடம் மற்றும் மலையாளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகிறது

News
மர்மம் மற்றும் திகில் நிறைந்த "கிஷ்கிந்தாபுரி", அக்டோபர் 24 முதல் ZEE5-இல் தமிழ், கன்னடம் மற்றும் மலையாளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகிறது இந்தியாவின் முன்னணி OTT தளமான ZEE5, கிஷ்கிந்தாபுரி திரைப்படத்தை அக்டோபர் 24 முதல் தமிழ், கன்னடம் மற்றும் மலையாளத்தில் வெளியிட உள்ளது. கௌசிக் H சார்பில் சாகு கருப்பதி தயாரித்த இந்த படத்தில் பெல்லம் கொண்டா சாய் ஸ்ரீநிவாஸ், அனுபமா பரமேஸ்வரன், மகரந்த் தேஷ்பாண்டே மற்றும் தனிக்கெல்லா பரணி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தெலுங்கு மொழியில் அக்டோபர் 17 அன்று ZEE5-இல் வெளியானது, மற்றும் பெரும் வரவேற்பைப் பெற்றதையடுத்து, இப்போது திரைப்படம் தமிழ், கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் வெளியாகிறது. இந்த கதை, ஆமானுஷ்ய சுற்றுலாவுக்காக ஒரு பழமையான வானொலி நிலையத்திற்கு சென்ற குழுவைத் தொடர்ந்து உருவாகிறது. அவர்கள் தெரியாமலே ஒரு நின்றுபோன ஆவியை எழுப்பிவிடுகிறார்கள். ஆர...
*கென் கருணாஸ் நடிக்கும் புதிய படத்தின் தொடக்க விழா*

*கென் கருணாஸ் நடிக்கும் புதிய படத்தின் தொடக்க விழா*

News
*கென் கருணாஸ் நடிக்கும் புதிய படத்தின் தொடக்க விழா* m ko தமிழ் திரையுலகில் பன்முக ஆளுமை கொண்ட கலைஞர்களான கருணாஸ் - கிரேஸ் கருணாஸ் தம்பதிகளின் வாரிசும், 'அசுரன்' படத்தின் மூலமாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த பிரபல நடிகர் கென் கருணாஸ் கதையின் நாயகனாக அறிமுகமாகும் பெயரிடப்படாத திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ் திரையுலகத்தை சார்ந்த முன்னணி பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர். கென் கருணாஸ் இயக்குநராக அறிமுகமாகும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தில் கென் கருணாஸ், அனிஸ்மா அணில் குமார், மீனாட்சி தினேஷ் , பிரியான்ஷி யாதவ், சுராஜ் வெஞ்சரமூடு, தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். விக்கி ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு தேசிய விருதினை வென்ற 'இசை அசுரன்' ஜீ. வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகள...
*விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் வழங்கும், “ஆர்யன்” திரைப்பட முன் வெளியீட்டு விழா !!*

*விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் வழங்கும், “ஆர்யன்” திரைப்பட முன் வெளியீட்டு விழா !!*

News
*விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் வழங்கும், “ஆர்யன்” திரைப்பட முன் வெளியீட்டு விழா !!* விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், சுப்ரா & ஆர்யன் ரமேஷ் வழங்க, இயக்குநர் பிரவீன் K இயக்கத்தில், முன்னணி நட்சத்திர நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் இணைந்து நடிக்க, இன்வஸ்டிகேடிவ் திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் “ஆர்யன்”. இப்படம் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் முன் வெளியீட்டு விழா படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவினில் படத்தின் டீசர், டிரெய்லர் மற்றும் சிங்கிள் பாடல் பத்திரிக்கையாளர்களுக்காக பிரத்தியேகமாக திரையிடப்பட்டது. இதனைத்தொடர்ந்து படக்குழுவினர் படம் குறித்த பல தகவல்களை ஊடக நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வினில், எழுத்தாளர் இயக்குநர் ம...
*தொடர்மழை காரணமாக ‘ஆட்டி’ பட ரிலீஸ் தள்ளிவைப்பு*

*தொடர்மழை காரணமாக ‘ஆட்டி’ பட ரிலீஸ் தள்ளிவைப்பு*

News
*தொடர்மழை காரணமாக ‘ஆட்டி’ பட ரிலீஸ் தள்ளிவைப்பு* லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் இசக்கி கார்வண்ணன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஆட்டி’. ‘மேதகு ’ மற்றும் ‘சல்லியர்கள்’ படத்தை இயக்கிய இயக்குநர் தி.கிட்டு இயக்கியுள்ள இந்த படத்தில் தயாரிப்பாளர் இசக்கி கார்வண்ணன் கதையின் நாயகனாக காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.. ‘அயலி’ புகழ் அபி நட்சத்திரா நாயகியாக நடிக்க, காதல் சுகுமார், சௌந்தர், பிரவீன் பழனிச்சாமி மற்றும் பல முக்கிய நடிகர்கள் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். "எங்கள் குலத்தில் பெண்களே முதலானவர்கள்" என்கிற கருத்தை மையப்படுத்தி இந்தப்படம் உருவாகியுள்ளது. வரும் அக்-24ஆம் தேதி ‘ஆட்டி’ படம் ரிலீஸ் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது தமிழகமெங்கும் பெய்துவரும் தொடர்மழை காரணமாக இப்படத்தின் ரிலீஸ் தேதியைத் தள்ளி வைக்க படத் தயாரிப்பு நிறுவனம் முடிவெடுத்துள்ளது. ...