
பிரபல எழுத்தாளர் கிரைம் கதை மன்னன் ராஜேஷ்குமார் நாவலை தழுவி உருவாகியுள்ள வெப் சீரிஸ் தான் இந்த ரேகை. தினகரன் இயக்கத்தில் பாலஹாசன், பவித்ரா ஜனனி, அஞ்சலி ராவ், வினோதினி வைத்தியநாதன் மற்றும் பலர் நடித்து நவம்பர் 28ல் ZEE5 ல் வெளியாகியுள்ள வெப்தொடர் ரேகை
வெப் தொடரை பார்ப்போம்:
ஒரே நாளில் நடக்கும் சம்பவத்தில் வெவ்வேறு இடங்களில் நான்கு பேர் இறந்து போகிறார்கள். அந்த நான்கு பேரின் கைரேகைகளுமே ஒன்றாக இருக்கிறது. முதலில் இறந்து போன, தனது நெருக்கமான தம்பி மாதிரி ஒருவரின் மரணத்தை விசாரிக்க துவங்கும் போலீஸ் அதிகாரியான பாலஹாசனுக்கு .விசாரிக்க செல்கிறார்கள். ஆனால் அந்த மரணம் விபத்தல்ல, அதன் பின்னணியில் யாரோ இருக்கிறார்கள் என சந்தேகிக்கிறார்கள். அப்படி சாதாரணமாக விசாரிக்க துவங்கும் அந்த குற்றச் சம்பவம் அடுத்தடுத்த சில மரணங்களால் மிக தீவிரமான விசாரணையாக மாறுகிறது. விபத்து என்பது மாறி கொலை என்பதை கண்டறிகிறார்கள். அவர்களை கொலை செய்தது யார்? இந்த சாதாரண மனிதர்களை கொன்றது யார்? அந்த ஐந்து பேருக்கும் என்ன சம்பந்தம்? ஏன் இந்த கொலைகள் நிகழ்ந்தது என்பதை ஒரு பரபர திரில்லராக சொல்வதே இந்த வெப் சீரிஸின் மீதிக்கதை
கதாநாயகன் பாலஹாசன் துப்பரியும் போலீஸ் அதிகாரியாக சிறப்பாக நடித்துள்ளார். அவருக்கு காதலியாக உதவியாக கான்ஸ்டபுளாக பவித்ரா ஜனனியும் சிறப்பாக நடித்துள்ளார்.
அஞ்சலி ராவ், வித்தியாசமான கதாபாத்திரத்தில் போஸ்ட் மார்ட்டம் செய்யும் பெண் டாக்டராக சிறப்பாக நடித்துள்ளார் வினோதினி . போபலன் பிரகதேஷ், ஸ்ரீராம், இந்திரஜித்
என இதில் நடித்திருக்கும் அனைவரூம் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.
இயக்குனர் தினகரன். ஏழு எபிசோடுகள் கொண்ட கிரைம் திரில்லர் சீரீஸ் Zee5-ல்
எல்லோரும் ரசிக்கும் வகையில் சுவாராஸ்யமாக கொடுத்துள்ளார். பாராட்டுக்கள்.
ரேகை .. பார்க்கலாம்










