” ரேகை” வெப் சீரிஸ் விமர்சனம்.
பிரபல எழுத்தாளர் கிரைம் கதை மன்னன் ராஜேஷ்குமார் நாவலை தழுவி உருவாகியுள்ள வெப் சீரிஸ் தான் இந்த ரேகை. தினகரன் இயக்கத்தில் பாலஹாசன், பவித்ரா ஜனனி, அஞ்சலி ராவ், வினோதினி வைத்தியநாதன் மற்றும் பலர் நடித்து நவம்பர் 28ல் ZEE5 ல் வெளியாகியுள்ள வெப்தொடர் ரேகை
வெப் தொடரை பார்ப்போம்:
ஒரே நாளில் நடக்கும் சம்பவத்தில் வெவ்வேறு இடங்களில் நான்கு பேர் இறந்து போகிறார்கள். அந்த நான்கு பேரின் கைரேகைகளுமே ஒன்றாக இருக்கிறது. முதலில் இறந்து போன, தனது நெருக்கமான தம்பி மாதிரி ஒருவரின் மரணத்தை விசாரிக்க துவங்கும் போலீஸ் அதிகாரியான பாலஹாசனுக்கு .விசாரிக்க செல்கிறார்கள். ஆனால் அந்த மரணம் விபத்தல்ல, அதன் பின்னணியில் யாரோ இருக்கிறார்கள் என சந்தேகிக்கிறார்கள். அப்படி சாதாரணமாக விசாரிக்க துவங்கும் அந்த குற்றச் சம்பவம் அடுத்தடுத்த சில மரணங்களால் மிக தீவிரமான விசாரணையாக மாறுகிறது. விபத்து என்பது மாறி கொலை என்பதை கண...
