
பிரபு ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் உதயா, யோகி பாபு, அஜ்மல் ஜான்விகா கலகேரி, தயாரிப்பாளர் தயா பன்னீர்செல்வம் மற்றும் பலர் நடித்து ஆகஸ்ட் 1ல் வெளியானது படம் அக்யூஸ்ட்
கதைகரு :
கொலைகுற்றவாளி கைதியை வழக்கு நீதிமன்றத்திற்க்கு அழைத்து செல்லும் வழியில் கொலைவெறி தாக்குதல் நடக்கிறது எதனால்…?
படத்தை பார்ப்போம்:
லோக்கல் ரவுடியான புழல் சிறையிலிருந்து கைதி கனகுவை (உதயா) போலீஸ் வேனில் மூன்று போலீஸ்காரர்களுடன் சேலம் அழைத்து செல்கிறது காவல் துறை. இந்த மூன்று போலீஸ்காரர்களில் ஒருவர் கான்ஸ்டபிள் வேந்தன் (அஜ்மல்) கைதி கனகுவை கொலை செய்யும் நோக்கோடு போலீஸ் வாகனத்தை தாக்குகிறது ஒரு கும்பல்.வழியிலேயே உதயாவை கொல்வதற்கு மினிஸ்டர் மகன் முயற்சி செய்கிறான். என்கவுன்ட்டர் செய்வதற்குக் காவல்துறையும் பல முயற்சி செய்கிறது.அவன் செய்த குற்றமென்ன, அவன் உயிருடன் நீதிமன்றத்துக்குச் சென்றானா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை
நடிகர்கள்:
உதயாவிற்கு, நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து தயாரித்து சிறப்பாக நடித்து இருக்கிறார்.குற்றஞ்சாட்டப்பட்டவரை நீதிமன்றத்தில் ஒப்படைக்க, அழைத்து செல்லும் காவலர்களில் ஒருவராகச் செல்லும் வேந்தன் பாத்திரத்தில் அஜ்மல் சிறப்பாகவே நடித்துள்ளார்.
மலராக கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக நடித்துள்ளார் ஜான்விகா
லாட்ஜ் ஓனர் ராமா நாயுடுவாக காமெடி கலாட்டா யோகிபாபு நடித்து தனது பாணியில் அனைவரையும் கலாய்த்துக் சிரிக்கவைக்கிறார். நாகராஜ் எனும் குணசித்திர வேடத்தில் தயாரிப்பாளர்களில் ஒருவரான தயா பன்னீர் செல்வம் சிறப்பாக நடித்துள்ளார். ஷாந்திகா, பவண், இயக்குநர் பிரபு ஸ்ரீனிவாஸ்,பிரபு சாலமன், டி சிவா, ஷங்கர் பாபு, ஜெயகுமார், தீபா, சுபத்ரா,
ஸ்ரீதர் என இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர். மற்றும் இப்படத்தில் நடித்த அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர்
தொழில் நுட்பகலைஞர்கள் :
நரேன் பாலகுமாரின் இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் ரசிக்கவைக்கிறது.
மருதநாயகத்தின் ஒளிப்பதிவு Bus பஸ்குள். நடக்கும் சண்டை காட்சி அருமை
எடிட்டர் படத்திற்க்கு தேவையான காட்சிகள் மட்டும் சேர்த்தது கூடுதல் பலம்
ஒரு கைதியும், ஒரு போலீஸும் நடக்கும் சம்பவம் முதல் பாதி பயணம், அடிதடி என சாதாரணமாக செல்கிறது. ஆனால் இரண்டாம் பாதியில் வரும் பிளாஷ்பேக் காட்சிகள் காதல்,, அரசியல் சூழ்ச்சியில் ஒரு அப்பாவி குற்றவாளியாக கிளைமேக்ஸில் நாம் எதிர் பார்க்காத ட்விஸ்ட் சுவாரசியமான திரைக்கதையை அமைத்து எல்லோரும் ரசிக்கும்படி சொல்லியுள்ளார் பிரபல கன்னட இயக்குனர் பிரபு ஸ்ரீநிவாஸ். தமிழ் திரையுலம் வரவேற்கிறது. பாராட்டுக்கள். .










