கிராண்ட் பிக்சர்ஸ் மற்றும் அப் 7 வெஞ்சர்ஸ் – ஆதிராஜ் புருஷோத்தமன் இணைந்து தயாரித்திருக்கும் அதர்ஸ் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் அபின் ஹரிஹரன்இதில் ஆதித்யா மாதவன், கௌரி கிஷன், அஞ்சு குரியன், முனீஷ்காந்த், ஹரீஷ் பேரடி, மாளா பார்வதி, ஜகன், சு. சுந்தர்ராஜன், சுமேஷ் மூர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:-ஒளிப்பதிவு : அரவிந்த் சிங், படத்தொகுப்பு : ராமர், இசை : ஜிப்ரான், ஸ்டண்ட்: பாண்டம் பிரதீன், நடனம் : சந்தோஷ், மக்கள் தொடர்பு : சதீஷ் (எய்ம்)
படத்தை பார்ப்போம்!
சாலையில் கற்கல் வைத்து திட்டமிட்டு கொள்ளை முயற்சி எதிர்பாராத கோரமான விபத்து ஏற்படுத்த வேன் கவிழுந்து முழுவதும் எரிந்து இருந்த நிலையில் மூன்று பெண்கள் மற்றும் ஒரு ஆண் உடல்கள் மீட்கப்படுகின்றனர். இறந்த 3 பேரும் கண் தெரியாத பெண்கள் என தெரிய வருகிறது. இதுகுறித்து விசாரிப்பதற்காக போலீஸ் உதவி கமிஷனரான ஆதித்ய மாதவன், இன்ஸ்பெக்டர் அஞ்சு குரியன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் முனிஷ் காந்த் ஆகியோர் விசாரணையில் ஈடுபடுகின்றனர்.இந்த பெண்கள் தங்கியிருந்த அனாதை இல்லங்கள் சென்று விசாரனை செய்கிறார் திடீர் அனாதை இல்லம் பெண் நிர்வாகி மாடியிலிருந்த கீழே குதித்து தற்கொலை .நாயகி கவுரி கிஷன் டாக்டராக பணிபுரிந்து வருகிறார் நாயகன் ஆதித்ய மாதவன், இருவரும் காதலர்கள் நாயகி வேலை பார்த்து வரும் மருத்துவமனையில் கர்ப்பமாக இருக்கும் ஒரு பெண்ணுக்கும் கருவில் திடீர் பிரச்சினை ஏற்படுகிறது. அந்த பிரச்சனையை கண்டுபிடிக்க கவுரி கிஷன் முயற்சி செய்கிறார்.பல திருக்கிடும் தகவல் கிடைக்கிறது இறுதியில் கர்ப்பம் அடைந்த பெண்ணுக்கு வந்த பிரச்சினை என்ன? கவுரி கிஷன் அதை கண்டுபிடித்தாரா? வேன் விபத்துக்கும் இதற்கும் என்ன தொடர்பு என்பதை போலீஸ் அதிகாரி கண்டுபிடித்தார்களா? அனாதை இல்லத்தில் நிர்வாகி தற்கொலை என்ன காரணம்? படத்தின் மீதி கதை
ஆதித்யா மாதவனுக்கு முதல் படம் என்று தெரியாத அளவில் இவர் நடிப்பு உள்ளது. ஒரு சரியான இளம் போலீஸ் அதிகாரி வேடத்திற்கு கச்சிதமாக பொருந்திருக்கிறார்.
கௌரி கிஷன் காதலிலும், மருத்துவரிலும் பொறுத்தமாக இருக்கிறார் அஞ்சு குரியன் போலீஸ் மிடுக்கிலும் நம்மை கவர்கிறார்கள். இரண்டு ஹீரோயின்களும் சும்மா வந்து விட்டு போகாமல் நடித்து விட்டு போகிறார்கள். நண்டு ஜெகனுக்கு நீண்ட இடைவெளிக்கு மாறுபட்ட கதாபாத்திரம் சிறப்பாக நடித்துள்ளார்
எடிட்டர் ராமர் வெவ்வேறு இடங்களில் நடக்கும் கதையை தனது படதொகுப்பால் அழகான நேர்கோட்டில் கொண்டு வந்து பட ஒட்டத்திற்க்கு சரியாக கொடுத்துள்ளார்.
ஜிப்ரானின் இசை சில இடங்களில் சற்று ஓவர் டோஸாக இருக்கிறது. மற்றும் அனைத்து தொழில்நுட்ப கலைகள் சிறப்பாக தன் பணியை செய்துள்ளனர்.
படம் ஆரம்ப முதல் இறுதி காட்சி வரை விறு விறுப்பாக அடுத்தது என்ன என்ற எதிர்பார்ப்பு கூட்டுகிறது
நாம் வேலை வாய்ப்பு விண்ணப்ப படிவங்களில் பாலினம் என்ற இடத்தில் ஆண்/ பெண் /மற்றவர்கள் others என்று குறிப்பிட்டு இருப்பார்கள் அதை யாரும் கண்டு கொள்வதில்லை அதைபற்றியாரும் யோசிக்கமாட்டோம் மற்றவர்கள் othersபற்றி யோசிக்க வைத்து படம் :பக்கத்தில் இருந்த கொலைகாரனை பிடிக்க இவ்வளவு தாமதமாக நம்ம முடியவில்லை அறிமுக இயக்குனர் அபின் ஹரிஹரன் உங்கள் முயற்சி பாரட்டு










