எம் பி ஆர் பிலம்ஸ், ஸ்கைலைன் சினிமாஸ் சார்பில் டாக்டர். ஏ.மதியழகன், வீரம்மாள் தயாரித்திருக்கும் வட்டக்கானல் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் பித்தாக் புகழேந்தி.
இதில் துருவன் மனோ, மீனாட்சி கோவிந்தராஜ், ஆர்.கே.சுரேஷ், பாடகர் மனோ, ஆடுகளம் நரேன், வித்யா பிரதீப், வினோதினி, ஆர்.கே.வரதராஜ், முருகானந்தம், விஜய் டிவி சரத், ஜார்ஜ் விஜய், கபாலி விஷ்வந்த், பாத்திமா பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:- இணை தயாரிப்பு: ஆர்.எம்.ராஜேஷ், ஒளிப்பதிவு – எம்.ஏ.ஆனந்த், இசை – மாரிஸ் விஜய் , படத்தொகுப்பு – சாபூ ஜோசப், கலை – டான் பாலா, ஸ்டன்ட் இயக்கம் – டான் அசோக், நடனம் – ஷெரிப், மக்கள் தொடர்பு- சாவித்ரி
வெளியான தேதி 7/11/2025
கதை கரு
போதை காளான் விற்பனை அதற்காக நடக்கும் அதிகார சண்டை அதில் காதல் பாசம் துரோகம் கலந்த கதை
படத்தை பார்ப்போம்
கொடைக்கானல் மலையில் இருக்கும் அழகு மிகு வட்டக்கானல் பகுதியில் நடக்கும் கதை. ஆனால், அங்கே விளையும் போதைக் காளானைக் கைப்பற்றி காலம் காலமாக விற்று ஒரு போதை சாம்ராஜ்யத்தை நடத்தி வருகிறார் ஆர்.கே.சுரேஷ். அவரது எல்லா அடாவடி வேலைகளுக்கும் அவர் எடுத்து வளர்த்த துருவன் மனோ, கபாலி விஸ்வந்த், விஜய் டிவி சரத் காவலர்களாக இருக்கிறார்கள். ஆனால், ஆர்.கே.சுரேஷைக் கொல்ல எப்போதும் வித்யா பிரதீப் முயன்று தோற்றுக் கொண்டிருக்கிறார். இதற்கெல்லாம் பின்னணி என்ன, இவை எல்லாம் எங்கே போய் முடிகின்றன என்பதுதான் கதை
தாதா வில்லனாக ஆர்.கே.சுரேஷ் , தோற்றமும் கம்பீரம் அனல்பறக்கும் ஆக்ஷன் காட்சிகள், நடிப்பால் மிரள வைத்துள்ளார்.
பிரபல பின்னணி பாடகர் மனோவின் மகன் துருவன் சத்யாவாக தன்னுடைய இயல்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்
வர்ஷாவாக மீனாட்சி கோவிந்தராஜன் அழகு பதுமையாக வாய் பேச முடியாத பெண்ணாக தன்னுடைய சைகை மூலம் புரிய வைக்கும் இடத்தில் மனதை கொள்ளை கொள்கிறார்.
சில காட்சிகள் தான் என்றாலும் செல்லபாண்டியாக ஆடுகளம் நரேன், அவரது மனைவி ராதாவாக வித்யா பிரதீப் பழி தீர்க்கும் மங்கையாக தன்னுடைய ஆவேச நடிப்பில் அனைவரின் கவனம் ஈர்க்கிறார் .
பாடகர் மனோ, வினோதினி, ஆர்.கே.வரதராஜ், முருகானந்தம், விஜய் டிவி சரத், ஜார்ஜ் விஜய், கபாலி விஷ்வந்த், பாத்திமா பாபு மற்றும் பலர் படத்திற்கு பக்கபலம்.
கொடைக்கானல் மலைபகுதி அழகை அள்ளி கொடுத்துயிருக்கிறார் ஒளிப்பதிவுக்கு எம்.ஏ.ஆனந்த்.
படத்தொகுப்பு – சாபூ ஜோசப், படத்திற்க்கு தேவையான காட்சிகள் சேர்த்துள்ளனர்
இசையமைப்பாளர் மாரிஸ் விஜய், ஏ.ஆர்.ரகுமானின் பரம ரசிகர் போல் இருக்கிறது. எல்லா பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் சிறப்பாக இருந்தது
வித்யா பிரதீப் அத்தனை முறை முயன்றும் ஆர்.கே.சுரேஷ் அவரைக் கொலை செய்யாமல் இருப்பது ஆச்சரியம்தான். அதேபோல் தாதாவாக இருக்கும் ஆர்.கே.சுரேஷ் அந்த சொத்தை அடைவதற்காக 20 வருடம் காத்திருக்கும் காரணம் என்னவென்று தெரியவில்லை.
இயக்குனர் பித்தாக் புகழேந்தி, போதையினால் விளையும் கொடுமைகளை , அழிவையும் சொல்லியிருக்கிறார் முயற்சிக்க பாராட்டு.
–










