ஸ்ரீகலா கிரியேஷன்ஸ் சார்பில் பரிசு படத்தை தயாரித்து, எழுதி இயக்கியிருக்கிறார் கலா அல்லூரி. இவர் திரைப்பட கல்லூரியில் படித்தவர்
இதில் ஜான்விகா, ஆடுகளம் நரேன், ஜெய்பாலா, கிரண் பிரதீப், சுதாகர், மனோபாலா, சென்ட்ராயன், சச்சு, அஞ்சலிதேவி, சின்னப் பொண்ணு மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:-ஒளிப்பதிவு – சங்கர் செல்வராஜ், இசை – ராஜீஷ், பின்னணி இசை – சி.வி. ஹமரா, பாடல்கள் -கே ராஜேந்திர சோழன், படத்தொகுப்பு – சி.எஸ்.பிரேம்குமார் – ராம் கோபி, நடனம் – சுரேஷ்சித், சண்டைக் காட்சிகள் – கோட்டி – இளங்கோ, மக்கள் தொடர்பு – சக்தி சரவணன
கதைகரு
பெண்களின் தன்னம்பிக்கை, இலட்சிய நோக்கம், சமூகப் பொறுப்பு போன்ற அம்சங்களை வலியுறுத்தும் முயற்சி
படத்தை பார்போம்;
பொறியியல் மாணவியான ஜான்விகா விளையாட்டிலும் படிப்பிலும் முதலிடம் ராணுவ வீரரான ஆடுகளம் நரேன் தன் மகளுக்கு துப்பாக்கி சுடுதல் பயிற்ச்சி கொடுக்கிறார் தந்தையின் கனவை நிறைவேற்றி இந்திய இராணுவத்தில் சேர வேண்டும் என்பது அவளது கனவு இலட்சியம் ஜான்விகா அழகையும் அறிவையும் பார்த்து விட்டு அவள் படிக்கும் கல்லூரியில் சில மாணவர் காதலிக்க முயற்ச்சி , ஒருவர் அவளுக்கு பூ கொத்து கொடுக்க முயற்ச்சி செய்கிறார்கள் காதல், சமூக சேவை, விவசாயத்தில் ஆர்வம் துப்பாக்கிச் சுடுதல் நன்கு தேர்ச்சி பெற்றார் அடுத்தவர்களுக்க உதவிசெய்தல் முன் நிற்பவள் எல்லோரிடமும் அன்பாகவும் நட்பாக இருந்து வருகிறார் கண்முன்னே விபத்தில் சிக்கியவரை மீட்டு மருத்துவ மனையில் சேர்க்க உதவி செய்கிறாள் ஒரு ரவுடி கும்பல் துரத்தி வருகிறது இவள் காதலில் விழுந்தாரா ? இந்திய இராணுவத்தில் சேர்ந்தார ?. கொலைகார கும்பலிடம் தப்பித்தாரா ஏன் இவளை கொலைய செய்ய வேண்டும் படத்தின் மீதி கதை
ஜான்விகா துடிப்பான கல்லூரி மாணவியாகவும் ,பிறருக்கு உதவும் இரக்க குணம் கொண்ட பெண்ணாகவும், துப்பாக்கி சுடுதலில் துடிப்புள்ளவராகவும், கிராமத்து விவாசாயி வேலைகளை ஆர்வமாக செய்கிறாள் பல்வேறு தோற்றங்களில் முயற்சி செய்துள்ளார் .சண்டை காட்சி தூள் கிளப்புகிறார் ஆக்க்ஷன் ஹீரோயின் தகுதியானவர்
ஆடுகளம் நரேன் தந்தையாக, சச்சு பட்டிபாயாக கதாபாத்திரத்தில் அனுபவ நடிப்பை கொடுக்துள்ளார்.
மனோபாலா – சென்ட்ராயன் – சின்னப்பொண்ணு கூட்டணி நம்ம சிரிக்க வைக்க முயற்சி செய்துள்ளனர் மற்றும் இப்படத்தில் நடித்த அறுவரும் சிறப்பாக நடித்துள்ளனர்
தொழில்நுட்ப கலைஞர்கள்:-ஒளிப்பதிவு – சங்கர் செல்வராஜ், சிறப்பான பங்களிப்பை கொடுத துள்ளார் .இசை – ராஜீஷ், பின்னணி இசை – சி.வி. ஹமரா, ராஜேந்திர சோழன், படத்திற்க்கு பெரிய பக்கபலமாக இருந்தது ,எடிட்டர் – சி.எஸ்.பிரேம்குமார் – ராம் கோபி, படத்திற்க்கு தேவையான காட்சிகள் மட்டும் சேர்த்துள்ளார்
எழுதி இயக்கியிருக்கிறார் கலா அல்லூரி ‘பரிசு’ ஒரு நல்ல நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட படம்
பெண்கள் தங்கள் இலட்சியத்தை அடைய வேண்டும் என்ற செய்தி பாராட்டத்தக்கது, இவர்களுடை முயற்ச்சி வெற்றி பெற வாழ்த்துவோம்.
—










