Sunday, November 22

“டைட்டானிக்” திரை விமர்சனம்.

டைட்டானிக்’ஜானகிராமன் இயக்கத்தில் கலையரசன், காளி வெங்கட், கயல் ஆனந்தி இவர்கள் நடித்துள்ள டைட்டானிக் என்ற படம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையரங்குகளில் வெளியாகியுள்ள13/11/2026 தமிழில் வெளியாகி உள்ளது.

விடிந்தால் தனது கல்யாணம் என்கிற வகையில் சென்னையிலிருந்து ரயிலில் பெங்களூர் வருகிறார் ராகவ் விஜய் அதே ரயில் பயணத்தில்

காளி வெங்கட், கலையரசன்,மூவரும் ரயில் பயணத்தில்  சந்திக்கிறார்கள்.மூவரும் தங்கள் காதல் அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்கள்.காளி வெங்கட் பள்ளி படிக்கும் போது காவிரி என்ற பெண்ணை காதலித்து இருக்கிறார்.இனொருவருக்கு கல்லூரி காதல், மற்றொருவருக்கு அலுவலக காதல் என்று மூன்று பேரும் வெவ்வேறு காலக்கட்டங்களில் காதலித்தாலும் எதிர்பாராத விதமாக இந்த காதல் கைகூடவில்லை.இவர்களின் முன்னாள் காதலிகள் எதிர்பாராத விதமாகச் சந்திக்கும்போது ஏற்படும் குழப்பங்களும், அதன் பிறகு இவர்களது வாழ்க்கையில் என்ன நடந்தது ? பல திருப்பங்களுடன் படத்தின் மீதிக்கதை.

நடிகர்கள்

காளி வெங்கட்டின் எதார்த்தமான காதல் அனுபவங்களும், அவரது தனித்துவமான நகைச்சுவை வசனங்களும் திரையரங்கில் சிரிப்பை வரவழைக்கின்றன. கயல் ஆனந்தி அப்பாவிதனமானதக துறு துறு உடல் மொழி நடிப்பு ரசிக்கும் படியாக இருந்தது மற்றும் ராகவ் விஜய் ஆகியோரும் மற்றும் இப்படத்தில் நடித்திருக்கும் மதுமிதாவரும் காட்சிகள் கலகலப்பு , சேத்தன், தேவதர்ஷினி, சு.செந்தில் குமாரன், சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கும் இயக்குநர் பாலாஜி மோகன், காயத்ரி உள்ளிட்ட அனைவரும் குறைந்த நேரம் வந்தாலும் அனைவரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரங்களைச் சிறப்பாகச் செய்துள்ளனர்

இசை மற்றும் ஒளிப்பதிவு. நிவாஸ் கே. பிரசன்னாவின் பின்னணி இசையும், பாலுவின் ஒளிப்பதிவில் ரயில் பயணக் காட்சிகளும் படத்திற்குப் பலம் சேர்த்துள்ளன.

ஜானகிராமன் இயக்கத்தில் ஆரம்பம் முதல் இறுதி வரை கதாபாத்திரங்கள் பேசிக்கொண்டே இருப்பது சில இடங்களில் சோர்வைத் தருகிறது.

ஆக்ஷன் மற்றும் வன்முறைக் ,ஆபாசகாட்சிகள் எதுவுமின்றி, குடும்பத்துடன் அமர்ந்து ரசிக்கக்கூடிய ஒரு எளிமையான காதல் கதை அனைவரும் ரசிக்கும் படியாக கொடுத்துள்ளார்.

அனைவரும் பார்க்கலாம்.

ரேட்டிங் 3:5