Sunday, November 22

“எனிமி ஆஃப் தி ஸ்மக்லர் ” திரை விமர்சனம்.

எஸ்.ஆர்; டிரீம் ஸ்டியோஸ் சார்;பில் எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர் படத்தை எழுதி இயக்கி, தயாரித்திருக்கிறார் டி.சமய முரளி.

நடிகர்கள் ஜே.டி.சக்கரவர்த்தி -லிங்கம், லால் – மாத்யூ பாய், சாரதாவாக ராதிகா சரத்குமார், அமராக- சரண் சக்தி, தீனாவாக – பாலா சரவணன், பவித்ராவாக ஸ்மேஹா, செல்வமாக- காளி வெங்கட், ஜாஃபர் சாதிக் – ஜாஃபர், ராஜன் – மைம் கோபி, மற்றும் பலர்  நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்;:-இசை மற்றும் பின்னணி – டி சமய முரளி, ஒளிப்பதிவு – ​கா வின் பாஸ்கர், படத்தொகுப்பு – ஸ்ரீ வாட்சன், இசை – சாம் டேனியல், ஸ்டண்ட் – தவசி ராஜ், பிஆர்ஒ – நிகில் முருகன்

கதைகரு சுங்கத்துறை_ கடத்தல் கும்பலுடன் வேலை பார்க்கும் கதாநாயகன் இவர்களை சுற்றி கதைகளம்.

 படத்தை பார்ப்போம்: கதாநாயகன் சரண் சக்தி,நடுத்தர குடும்பம் வீட்டு கடனை அடைக்க குடும்பச் சூழ்நிலை காரணமாகக் சுங்க துறை அலுவலகம் தொடர்பு நண்பர்களான பால சரவணனும் இருவரும், பிரபல கடத்தல் மன்னனான ஜே.டி. சக்கரவர்த்தியிடம் வேலைக்குச் செல்கின்றனர். ஆரம்பத்தில்  நாயகன் வீட்டின் கடனை அடைக்க  கடத்தல் தொழில் ஈடுபடுகிறார் நாளடைவில்ல் அவர்களின் வாழ்க்கையையே புரட்டிப்போடும் அளவிற்கு பணத்தை பார்க்கும் போது பாதையாக மாறுகிறது நாய்கனின கடத்தல் தொழில் அம்மா ராதிகாவிற்கோ தன்  மனைவி ஷிமேகா தெரியாது  ஒரு கட்டத்தில் தான் கடத்தல் தொழிலில் ஈடுபட்டிருப்பது காதல் மனைவி ஷிமேகாவுக்குத் தெரியவர, வேறு வழியின்றித் தொழிலைக் கைவிட நினைக்கிறார் சரண். ஆனால், அந்த முடிவே அவருக்குப் புதிய சிக்கல்களை ஏற்படுத்துகிறது திடீரென சரண் வீடுக்கு சுங்கத்துறை அதிகாரிகள் வருகிறது   நாயகன் சரண எஸ்கேப்  வீட்டை விட்டு ஒட்டம் நாயகனின் காதல் மனைவியை போலீஸ்  கைதுசெய்து காவல் நிலைய சிறையில் அடைக்கப்பட்டார் இனொருபுறம் பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல் கும்பலைக் கூண்டோடு பிடிக்கக் களமிறங்குகிறார் சுங்கத்துறை_ அதிகாரி சமய முரளி.காதல் மனைவி ஷிமேகா நிலை என்ன? சவலான போதைப்பொருள் கடத்தல் கும்பல் பிடிபட்டார்களா ? பலதிருப்பங்களுடன் படத்தின் மீதிகதை.

கதாநாயகன் சரண் சக்தி,
குடும்ப வீட்டைக் காப்பாற்ற வேண்டும் என்ற தவிப்பு, பணத்துக்காகத் தவறான பாதையைத் தேர்ந்தெடுத்து விட்டோமே என்ற குற்றனர்ச்சி, காதல் மனைவிக்குத் தனது உண்மையான முகம் தெரிந்துவிட்டதே என்ற பதற்றம் என  சிக்கித் தவிக்கும் கதாபாத்திரத்தில் சரண் சிறப்பாக நடித்துள்ளார். குற்றனர்ச்சி  ,

பாலா சரவணன்,நாய்கனுக்கு நண்பனாக . மற்றும் இப்படத்தில் நடித்த கடத்தல் கும்பல் தலைவன் இருவரும் சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளார்

ஸ்மேஹா  பட்டாம்பூச்சி போல் பறந்து சுற்றி திரிந்தவர்  நாயகனை சரண் துரத்தி துரத்தி காதல் செய்கிறார் அதே நேரத்தில் காதலியாக இருந்தவர்  மனைவியாக ஆனதும் காதல் கணவன் தவறான வழிக்கு செல்வதை கண்டிக்கும் கணவனை திருத்த திடீரென எடுக்கும் முடிவுகள்  எள பல  உணர்வுகளை  சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளார்.

கடத்தல் கும்பல் தலைவன் இருவர் மற்றும் இதில் நடித்த அனைவரும் அவரவர் கதாபாத்திரத்திரம் உணர்ந்து நடித்துள்ளனர்.

சாம் டேனியல் இசை ரசிக்கவைக்கிறது. KA WIN Badkar ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம்.

சமயமுரளி சுங்கத்துறை_ அதிகாரியாக கடத்தல் கும்பலை பிடிக்க வியூகம் திட்டம் அமைத்து அதை செயல்படுத்தும் விதமும் பார்வையாளர்களின்  கவனத்தை பெறுகிறார் சரியான பொறுத்தம் துறைமுகங்களில் நடைபெறும் சரக்குப் பரிசோதனைகள் இது வரை யாரும் இந்த அளவுக்கு சொல்லாத விஷயம்
போலி ஆவணங்கள்  மோசடிகள், கடத்தல் கும்பல்களின் பின்னணி மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் எதிர்கொள்ளும் சவால்கள் போன்றவற்றை யதார்த்தமான  ரசிகர்களுக்குப் புரியும் வகையில் எளிமையாகவும் சுவாரஸ்யமாகவும்  சொல்லியுள்ளார் இயக்குநருக்கு பாராட்டு.

பதிய கதை விரும்பிக்கு விருந்து

ரேட்டிங் 4;०