Sunday, November 22

“பனிவிழும் இரவு” திரை விமர்சனம்.

பவி கிரியேஷன்ஸ் சார்பில் சதாமுருகன், தங்கவேல் வல்லவர்சாமி, ஓம் செல்வா தயாரித்திருக்கும் பனி விழும் இரவு படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் செ. ரா. ராஜேஷ்.

நடிகர்கள் :அருண் கார்த்தி( ஜெகே), எனாக்க்ஷி கங்குலி(சபிதா) , கருப்பு நம்பியார்( நாகராஜ்), சேரன்ராஜ்(மதிமாறன்) , சரவணசக்தி(வாட்ச்மேன்) , செ. ரா. ராஜேஷ்(சோலை ராஜ்) , கஜராஜ்(டாக்டர்.சரவணன்) , சுருளி (சுருளி) , உமர்(பால்காரன்),வினோத்(வினோத்) மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்;:- ஒளிப்பதிவாளர் – திரு. ஜெயக்குமார் தங்கவேல், இசையமைப்பாளர் – சதாமுருகன், எடிட்டிர் – எம். எஸ். செல்வா மற்றும் சி.ஆர்.புவனேஷ் , , மக்கள் தொடர்பு சரண்

படத்தை பார்போம்:

திருமணத்திற்கு முந்தைய புகைப்படப் பிடிப்புக்காக (Pre-wedding photoshoot) கொடைக்கானலுக்குச் செல்லும் இளம் ஜோடியான ஜேகே (அருண் கார்த்தி) மற்றும் சபிதா (எனாக்ஷி கங்குலி) ஆகியோர் பங்களாவில்  இருந்து சபிதா திடீரெனக் காணாமல் போகிறார். அலறிடித்துக் கொண்டு கொடைக்கானல் காவல் நிலையத்திற்குச் செல்லும் ஜேகே புகார் அளிக்கிறார். விசாரணை: இன்ஸ்பெக்டர் மதிமாறன் (சேரன் ராஜ்) தலைமையிலான போலீஸ்விசாரணை தொடங்கியது காணமல் போன சபித கிடைத்தார இல்லையா. ஆனால், விசாரணையில் கிடைக்கும் தகவல்கள் ஒவ்வொன்றும் பல சந்தேகங்களை உருவாக்குகின்றன. அதன் பின்னால் பலதிடுக்கிடும் சம்பவம் திருப்பங்களும் மறைக்கப்பட்ட உண்மைகளுமே படத்தின் மீதிக் கதை

கதையின் நாயகனாக ஸஜேகே கதாபாத்திரத்தில் அருண் கார்த்தி, பதற்றம், பயம், குழப்பம் என உணர்வுகளை இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். எனாக்ஷி கங்குலி தனது கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து நடித்திருக்கிறார்.

காவல்துறை அதிகாரியாக வரும் சேரன்ராஜ் வழக்கமான  அனுபவமான நடிப்பை கொடுத்துள்ளார் . கருப்பு நம்பியார் விசாரணைக் காட்சிகளில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கப்பட்டுகிறார் வாட்ச்மேனாக ஷரவண சக்தி கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

சதாமுருகனின் இசை ரசிக்கவைக்கிறது. ஜெயக்குமார் தங்கவேலின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம்.

இயக்குநர் செ. ரா. ராஜேஷ்ஸ நன்றாக நடித்திருப்பதோடு கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் கதையை அடுத்தது என்ன என்ற எதிர்பார்ப்பு கூட்டுகிறது கிளைமாக்ஸ் யாரும்  யூகிக்க முடியாத காட்சி எல்லோரும் ரசிக்கும்படி சுவாராஸ்யமாக சொல்லியுள்ளார்.படக்குழுவினருக்கு பாராட்டுக்கள்.

 

ரேட்டிங் 3:5