
மித்ரா பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி, இசையமைத்து தயாரித்து இயக்கியுள்ளார் எம்.எஸ். மூர்த்தி.
தொழில்நுட்ப கலைஞர்கள் : ஒளிப்பதிவு – சேவிலோ ராஜா (எம்டன் மகன்) , படத்தொகுப்பு – மீனாட்சி சுந்தரம், கலை இயக்குனர் – ஜெயமுருகன், நடன இயக்குநர்கள் – ஸ்ரீPதர் -அக்ஷயா ஆனந்த், ஸ்டண்ட் – பயர் கார்த்திக் , மக்கள் தொடர்பு – புவன் செல்வராஜ்
இதில் சபரி (குணா ), ரோகிந்த் (கரண்), ரக்சிதா மகாலட்சுமி (சங்கீதா), ஸ்வேதா (ரஞ்சிதா), தயாரிப்பாளர் – இயக்குனர் எம்.எஸ்.மூர்த்தி (மூர்த்தி) , பவன்கிருஷ்ணா (விக்கி), கே.ஆர்.விஜயா (துர்கா தேவி அன்னையார், ஜாவா சுந்தரேசன் (சாம்ஸ்), அம்பானி சங்கர், முல்லை, கோதண்டம் ஆகியோர் நடித்துள்ளனர்.
ரச்சிதா மகாலட்சுமி மற்றும் அவரது கணவர் சபரி, அடுக்குமாடி குடியிருப்பில் 66-வது கதவு எண் வீட்டை விலைக்கு வாங்கி குடியேறுகிறார்கள். அதே குடியிருப்பில் 99-வது கதவு எண் வீட்டில் வசிக்கும் ஸ்வேதாவுடன் ரச்சிதாவுக்கு நட்பு ஏற்படுகிறது . இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி கொள்கிறார்கள் .
இந்நிலையில், ரச்சிதாவை கொலை செய்ய அவரது கணவர் பல்வேறு திட்டங்கள் தீட்டி செயல்படுத்த முயற்ச்சிக்கிறார். ஆனால் ஒவ்வொரு முறையும் ரச்சிதா அதிலிருந்து தப்பித்து விடுகிறார். இதற்கிடையே ஒரு இரவு, ஸ்வேதாவை அவரது கணவர் கொலை செய்ய முயற்சிப்பதை ரச்சிதா பார்க்கிறார். அவரை காப்பாற்ற அதே குடியிருப்பு வாசிகளுடன் உதவி கேட்ட போது, ஸ்வேதா ஏற்கனவே இறந்துவிட்டார் என்பதும், 99-வது கதவு எண் வீட்டில் யாரும் வசிக்கவில்லை என்பதும் தெரிய வருகிறது.ரச்சிதா நம்பிக்கையில்லை இருந்தாலும் ஒரு முறை அந்த ஸ்வேதா வீட்டு சென்று பார்க்கிறார் வீடு பூட்டியிருக்கு குடியிருப்பு வாசிகள் சொன்னது சரிதான். ரச்சிதாவை அவளுடைய கணவர் கொலை செய்ய முயற்சி காரணம் என்ன? ஸ்வேதா இறந்தது எப்படி யார் காரணம் ? இன்னும் பல திருப்பங்களுடன் படத்தின் மீதி கதை..
.சின்னத்திரையில் பிரபலமான ரச்சிதா கதைநாயகியாக நடித்து இருக்கிறார். பல காட்சிகளில் , குடும்ப பெண்ணாக அழகாக இருக்கிறார். பேய் (ஆவி) உடலில் புகுந்தபின் நடிப்பில் மிரட்டுகிறார். தயாரிப்பாளர், இயக்குனரான எம்.எஸ்.மூர்த்தியே நடித்தும் இருப்பதால் கதையில் அவருக்கு நிறைய முக்கியத்துவம். ரச்சிதா எதிர்வீட்டில் வசித்து பேய் ஆன ஸ்வேதா அப்பாவாக அவர் வருகிறார். .ஸ்வேதா நடிப்பு ஓகே , சில காட்சிகள் வந்தாலும் பார்வையாளரின் கவனத்தை பெறுகிறார் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார்
இதில் ரச்சிதா கணவராக சபரியும் வரும் காட்சிகள் நினைவில் நிற்கிறது ஸ்வேதா கணவராக ரோஹித்தும் , இவரின் காட்சிகள் குறைவுதான் , நீண்ட இடைவெளி பிறகு கே.ஆர்.விஜயா ,பெண் சாமியராக தோன்றுகிறார் சித்தராக தயாரிப்பாளர் தேனப்பன் வரும் காட்சி சிறப்பாக இருந்தது மற்றும் அம்பானி சங்கர், மூவர் கூட்டனி ஜாவாசுந்தரேசன் (சாம்ஸ்), , முல்லை, கோதண்டம் ஆகியோர் அடுக்குமாடி குடியிருப்பில் காமெடி கலாட்டா ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர்
தொழில்நுட்ப கலைஞர்கள் : ஒளிப்பதிவு – சேவிலோ ராஜா சிறப்பாக இருந்தது
கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி, இசையமைத்து தயாரித்து இயக்கியுள்ளார் எம்.எஸ். மூர்த்தி. இப்படத்தின் கதைளம் அடுக்குமாடி குடியிருப்பில் நடக்கும் சம்பங்களை விறுப்பாகவும் அடுத்தது என்ன என்ற எதிர்ப்பார்ப்புடன் காடசிகள் நகர்த்தி சென்றுள்ளார் உங்கள் முயற்சிக்கு பாராட்டு
99 / 66. இப்படம் அனைவரும் ரசிக்கும் படி உள்ளது பார்க்கலாம்.










