Sunday, May 31

“சென்னை ஃபைல்ஸ் முதல் பக்கம்” திரை விமர்சனம்.

சின்னத்தம்பி புரொடக்ஷன் சார்பில் மகேஸ்வரன் தேவதாஸ் தயாரித்திருக்கும் சென்னை ஃபைல்ஸ் முதல் பக்கம் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் அனிஷ் அஷ்ரஃப்.

நடிகர்கள்: வெற்றி – பிரபாகரன், ஷில்பா மஞ்சுநாத் – சுவாதி, தம்பி ராமையா – ராமையா, கிங்ஸ்லி – மின்னல் ராஜா, மகேஷ் தாஸ் ஆகியோர்   நடித்துள்ளனர்.

படக்குழுவினர்கள்; :இசை: ஏ.ஜே.ஆர், ஓளிப்பதிவு: அரவிந்த், படத்தொகுப்பு: விஷால். இணை தயாரிப்பாளர்: சாண்டி ரவிச்சந்திரன், மக்கள் தொடர்பு: நிகில் முருகன்:

கதைகரு:

சென்னையில் – தொடர் மர்மான முறையில் கொலை செய்யபடுகிறது குற்றவாளியை கண்டுபிடிக்க போலீஸ் திணறுகிறது நாவலாசிரியரின் மகன் உதவுகிறார் எப்படி…?

படத்தை பார்ப்போம்:

கிராமத்தில் வாழ்ந்த புகழ்பெற்ற குற்ற நாவலாசிரியரின் மகனான பிரபு (வெற்றி) தனது தந்தையின் வாழ்க்கை வரலாற்றை தொடராக எழுத பத்திரிகையில் வெளியிட சென்னை வருகிறார்.போலீஸ் விசாரணைக்காக வெற்றி அழைத்து செல்கிறது வரும் வழியில் ஒருவர்  இறந்து கிடக்கிறார்  எப்படி நடந்திருக்கும்   இன்ஸ்பெக்டர் தம்பி ராமையா  விசாரிக்க இந்த கொலை  இப்படி தான் நடந்து இருக்கிறது என்று வெற்றி துல்லியமாக  கூறுகிறார்   இன்ஸ்பெக்டர் தம்பி ராமையா வெற்றியின் துப்பறியும் திறனால்  தனக்கு உதவியாக வைத்துக் கொண்டு தொடர் மர்மான பெண் நிருபர் ஒருவரும், சில பள்ளி மாணவர்களும் ஒரே மாதிரியாக கொடூரமாக கொலை செய்யப்படுகிறார்கள். இந்த தொடர் கொலைகளின் பின்னணியை கண்டுபிடிக்க களத்தில் இறங்கும் வெற்றி   அதை எப்படி கண்டுபிடிக்கிறார்?, கொலைகாரன் யார்?, பின்னணி என்ன?, படத்தின் மீதி கதை… .

நடிகர்கள்:

கதாநாயகன் வெற்றியின் அவருக்கான அளவான அமைதியாகவும்  வழக்கு விசாரணை மற்றும் துப்பறியும் காட்சிகளில் வழக்கமான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

நாயகி பெண் பத்திரிகை நிருபராக சில காட்சிகள் வந்தாலும் மனதில் நிற்கிறார்

.நகைச்சுவை காட்சிகளுக்காக ரெடின் கிங்ஸ்லியின் கதாபாத்திரம்  சிரிக்க வைக்க முயற்ச்சிக்கிறார் இருக்கிறது..

போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் தம்பி ராமையா, தனது வழக்கமான  உடல்மொழியோடு காமெடியாக தான் தெரிகிறது கம்பீரம் இல்லை

வில்லனாக நடித்திருக்கும் அறிமுக நடிகர் மகேஷ் தாஸ், ஹல்கின் கடைசி   மிரட்டுகிறார். அதிகம் பேசாமல் தனது உடல் மூலம் பயமுறுத்த முயற்சித்திருக்கும் மகேஷ் தாஸ், சிறப்பாக நடித்திருக்கிறார்.

இசையமைப்பாளர் ஏ.ஜே.ஆர் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு தேவையானதாக அமைந்திருக்கிறது.

அரவிந்தின் ஒளிப்பதிவும், சிறப்பாக இருந்தது விஷாலின் எடிட்டிங் படத்தை விறுவிறுப்பாகவும், வேகமாகவும் நகர்த்தியிருக்கிறது.

எழுதி இயக்கியிருக்கும் அனிஷ் அஷ்ரப், சைக்கோ திரில்லர் , சமூக பிரச்சனை கையில் எடுத்து  காவல்துறைக்கு சம்மந்தமே இல்லாத ஒரு நபர் குற்ற வழக்குகளை அவர் பார்க்கும் விதமும் படத்தை ரசிக்க வைக்கிறது.  அதே நேரத்தில் காவல் துறையால் குற்றவாளியை கண்டுபிடிக்க திணறுகிறது சம்மந்தமே இல்லாத வெளிநபர் உதவுது நம்ப முடியவில்லை .. காவல் துறையில் எதாவது ஒரு வேலையில் இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்

மொத்தத்தில், ’சென்னை ஃபைல்ஸ் – முதல் பக்கம்’ பரவாயில்லை.