Friday, April 17

“யாதும் அறியான்” திரை விமர்சனம்.

M. கோபி இயக்கத்தில் தினேஷ் பிராணா, அப்பு குட்டி, தம்பி ராமைய்யா, ஆனந்த் பாண்டி, ஷியாமல், மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் யாதும் அறியான்.

கதாநாயகன் தினேஷும், கதாநாயகி பிரானாவும் காதலிக்கிறார்கள். காதலியுடன் ஜாலியாகவும், நெருக்கமாகவும் இருக்க ஆசைபடுகிறார் இவரை தொடக்கூட விட மாட்டாங்க காதலி பிரானாவும் எல்லாம் கல்யாணத்துக்கு பிறகு தான் கண்டிஷன் போடுறாங்க   இதை வருத்தப்பட்டு கூற நண்பனிடம் ஐடியா கேட்கிறான்  நண்பர் ஒரு யோசனை சொல்கிறார். அவரது யோசனைப்படி, தனது காதலி மற்றும் நண்பர் அவரது காதலி என இரண்டு ஜோடியினர் காட்டு பகுதியில் இருக்கும்  சொகுசு விடுதிக்கு போராங்க  அந்த விடுதியில் அப்புக்குட்டி  வேலை செய்கிறார் அவர் மட்டும்தான் அங்கு இருக்கிறார்.முதல் நாள் இரு நண்பர்கள் மற்றும் அப்புகுட்டியும் சேர்ந்து மது குடிக்கிறார்கள்  பிறகு எல்லாரும் அவங்க ரூமுக்கு போயிறாங்க தினேஷ் தன் காதலியுடன் படுக்கறையில்  நெருங்கி கட்டி பிடிக்க முயற்சி செய்கிறார் காதலி மறுக்கிறார்  இருவருக்கும் வாக்குவாதம் பிறகு சம்மதிக்சு இருவரும் சந்தோஷமா இருக்காங்க தினேஷ் உடலுறவு கொள்கிறார் .ரொம்ப சந்தோஷம் இருக்கிறார் கொஞ்ச நேரம் கழித்து  காதலியை எழுப்புகிறார் காதலி எழுந்திருக்கவில்லை  பார்த்தால் அவளுக்கு  மூச்சு பேச்சு இல்லை இறந்துகிடக்கிறாள்  அதிர்ச்சி பயம் கத்துறாரு அழுகிறார் பக்கத்தில் அறையில் இருக்கும் நண்பனை கூப்பிடுகிறார்  நண்பன் காதலியும் வந்து பார்த்து அதிர்ச்சியாகி விட்டனர் தினேஷ்க்கு நண்பனுக்கும் வாக்குவாதம் இருவரும் சண்டையிட்டு கொள்கிறார்கள் அதில் நண்பன் இறக்கப்படுகிறான் நண்பனின் காதலியும் ஏன் உன் நண்பனை கொன்ற   கேட்கும்போது அவளையும் கொலை செய்து விடுகிறார்  இப்ப அந்த அறைக்குள்ள மூணு பிணங்கள் இந்த பிணங்களை மறைக்க வெளில போய் மூணு டிராவல் பேக் வாங்கிட்டு வர்றாரு வந்துட்டு ஒவ்வொரு பிணங்களாக இழுத்துகிட்டு போய் பாத்ரூம்ல கசப்பு கடையில வெட்டுற கத்தியால வெட்டி  பேக்ல அடைச்சு கொண்டு போய் பக்கத்திற்கு இருக்கும் மலை பகுதியிலிருக்கும்  பள்ளாத்தாக்கில் மூன்று பிண பைகளை தூக்கி வீசி விட்டு ரூமுக்குள் வந்து ஒன்றும்  நடக்காத போல் அமைதியாக தூங்கியிட்டிருக்கிறார்  தினேஷ்யை நடிவடிகையில் சந்தேகம் போலீஸ் வர வைத்து ரூமுக்கு போராங் தூங்கும் தினேஷ் எழுப்புகிறார்கள் எழுந்து கண் விழித்து பார்த்ததும் பெரு அதிர்ச்சி தினேஷ்க்கு  நான்   கொலை செய்த வெட்டி வீசிய மூன்று பேரும் உயிருடன் கண் முன்னே நிக்கிறாங்க அப்ப இவரு கொலை செய்து யார்? அன்றை தின செய்தி பேப்பரில் இவர்கள் மூன்று பேரும் மாயம் புகைப்படத்துடன்  வந்திருக்கிறது 2024 ஆம் ஆண்டு, 2026 ஆம் ஆண்டாக மாறுகிறது. தினேஷுக்கு எதிராக நடக்கும் அதிர்ச்சிகரமான சம்பவங்களின் பின்னணி என்ன? இப்படி பல கேள்விகளுக்கு படத்தில் மீதி கதை…

முதல் படத்தில் தினேஷ், கதாபாத்திரத்திற்கு பொருத்தமான இருக்கிறார். அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு காதலியிடம் அவர் செய்யும் சில்மிஷங்கள் அடுத்தடுத்து இரண்டாம் பாதியில் அவரா இவர்!, சைக்கோவாக அவர் நடந்து கொள்ளும் விதமும், ஆக்ரோஷம்  உச்ச நடிப்பும் கொடுத்துள்ளார்

 

கதாநாயகியாக நடித்திருக்கும் பிரானா, கதாநாயகனின் நண்பராக நடித்திருக்கும் ஆனந்த் பாண்டி, அவரது காதலியாக நடித்திருக்கும் ஷ்யாமல், சொகுசு விடுதியில் வேலை பார்க்கும் அப்புக்குட்டி என அனைவரும் சிறப்பாக நடித்து படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் எல்.டி காட்டு பகுதியில் இருக்கும் பழைய சொகுசு  விடுதியை பயம் ஏற்படும் வகையில் காட்சிப்படுத்தியிருப்பதோடு, சிறப்பு

இசையமைப்பாளர் தர்ம பிரகாஷ் இசையில் பாடலும், பின்னணி இசையும் படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது. குறிப்பாக பின்னணி இசை திரில்லர் காட்சிகளில் இருக்கும் பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் .கொடுத்திருக்கிறார் மற்றும் இப்படத்தில் பணியாற்றிய அனைவரும் சிறப்பாக உள்ளது

பல திருப்பங்கள் மூலம் வித்தியாசமான சைக்கோ திரில்லர்  படத்தை கொடுத்திருக்கும் இயக்குநர் எம்.கோபி, முயற்ச்சி கபாராட்டு  .

மொத்தத்தில், ‘யாதும் அறியான்’ திரில்லர், சைக்கோ ஜானர் கதை விரும்பிக்கு விருந்து .

குடும்பம் சிறியவர்கள் பெரியவர்கள் பார்கக இயலாது  என் கருத்து