
நடிகர்கள்:- ஹரீஷ் கல்யாண், சித்தி இத்னானி, கோவை சரளா, தம்பி ராமையா, சின்னஜெயந்த், சம்பத், எம். ரினில், வி.ஜே. பார்வதி மற்றும்பலர் நடித்து ZEE 5 ல் வெளியாகிறது படம் நூறுகோடி வானவில்.
தொழில் நுட்பக் கலைஞர்கள:-
எழுதி இயக்குபவர்: தயாரிப்பாளர்கள்: பாலாஜி கபா, அருண் அருணாச்சலம்,ஒளிப்பதிவு: பிரசன்னா.எஸ்.குமார் இசை: சித்து குமார்,எடிட்டிர் எம். சுபாரக்,பாடல்கள்: மோகன் ராஜன், விக்னேஷ் ராமகிருஷ்ணா,மக்கள் தொடர்பு: சதீஷ் (AIM)
படத்தை பார்ப்போம்:
மும்பையில் உள்ள தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் பணிபுரியும் ஹரிஷ் கல்யாண், வேலை நிமித்தமாக கோவாவுக்குச் செல்கிறார். அங்கு ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியை வெற்றிகரமாக உருவாக்க பணியைத் தொடங்குகிறார். அந்தச் சூழலில் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் பென்னி என்ற கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை தேடுகிறார் இந்த சூழலில் எதிர்பாராத விதமாக போக்குவரத்து சாலை சிக்னல் நிற்கும் சித்தி இத்னானியைச் சந்திக்கிறார். தொடர்ந்து பின் செல்கிறார் அவரிடம் எங்கள் தொலைக்காட்சி நடிக்க வேண்டும் அழைக்கிறார்கள் எனக்கு விருபபம் இல்லை வர மறுக்கிறார் பல முறை முயற்சி செய்தும் பலனில்லை இன்னொரு பக்கம் சித்தி இத்னானியின் காதலனான ரிச்சி விபத்தில் சிக்கி சுமார் 170 நாட்களாக கோமாவில் இருக்கிறார் அவரை தினமும் சித்தி இத்னானி மருத்துவமனையில் சந்தித்து சில நிமிடங்கள் அன்று நடந்த சம்பவமங்களை பதிவு செய்த வீடியோ காண்பிக்கிறார் ரிச்சிஅசைவின்றி இருக்கிறார் மீண்டும் குணமடைந்து வருவார் என்ற நம்பிக்கையுடன் அதேநேரத்தில் பிரபலமான பெண் மருத்துவர வருகைக்காக காத்திருக்கும் சித்தி இத்னானி இந்தச் சூழலில் ஹரிஷ் கல்யாணுக்கும் சித்தி இத்னானிக்கும் இடையே நட்புபாக மாறுகிறது பின்னர் காதல், மோதலாக மாறுகிறது. திடிரென நாம் அனைவரும் எதிர்பார்த்த பிரபல பெண் மருத்துவர் வருகிறார் ரிச்சி கோமா குணமடைந்து மீண்டார ?அதன் பிறகு சித்தி இத்னானி யாரை மணக்கிறார் பல திருப்பங்களுடன் படத்தின் மீதிக்கதை.
ஹரிஷ் கல்யாண், இதில் அழுத்தமான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார்.
சித்தி இத்னானி நல்ல அழகான நாயகி அவர் முகத்தில் சந்தோஷம் குறைவுதான் இருதலைக்கொல்லி எறும்பாகத் தவிக்கும் காட்சிகளில் சித்தி இத்னானியின் நடிப்பு பாராட்டைப் பெறுகிறது. வாழ்த்துக்கள்
. ரிச்சியின் எதார்த்தமான நடிப்பும் பலம். கோவை சரளா, தம்பி ராமையா சின்னி ஜெயந்த், சம்பத் ராஜ், விஜே பார்வதி, என இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர். உள்ளிட்டோரும் சிறப்பாக நடித்துள்ளனர்.
சித்து குமாரின் இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் ரசிக்கவைக்கிறது. பிரசன்னா எஸ் குமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம்.
இயக்குநர் சசி:சொல்லாமலே’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானது முதல், அவரது சமீபத்திய வெற்றிப் படமான ‘நூறு சாமி’ வரை, மேலும் ‘பூ’, ‘பிச்சைக்காரன்’, ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ போன்ற பாராட்டுப் பெற்ற திரைப்படங்கள் மூலம் சசி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளார். மனித உணர்வுகள், உறவுகள் மற்றும் அன்றாட வாழ்க்கையின் சிக்கல்களை ஆழமாகப் பேசும் கதைகளை உருவாக்குவதில் அவர் தனித்துவம் பெற்றவர்.
‘நூறு கோடி வானவில்’ திரைப்படத்தின் மூலம், மனிதர்கள் கொண்டிருக்கும் எதிர்பார்ப்புகள் மற்றும் அவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கக்கூடிய கடினமான முடிவுகள் ஆகியவற்றை ஆராயும் காதல் கதையுடன் இயக்குநர் சசி மீண்டும் வந்துள்ளார். நேரடியாக OTT தளத்தில் வெளியாகிறது ஒரு முக்கோணக் காதல் கதையை சில இடங்களில் யூகிக்கக் கூடியவகையில் காட்சி நகர்வது இருந்தாலும் திரைக்கதையில் இன்னும் சுவாராஸ்யப்படுத்தியிருந்தியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். பாராட்டுக்கள்.
ரேட்டிங் 3/5










