
நடிகர்கள்:- டி. அந்தோணி, மதுமிதா தாஸ், ஜீவா ரவி, ரெஜின் ரோஸ், நவ்யா சுஜி
தொழில்நுட்பக் குழு:-
எழுத்து, இயக்கம் – படத்தொகுப்பு: டி. அந்தோணி
தயாரிப்பாளர்: டி. அந்தோணி
தயாரிப்பு நிறுவனம்: ஆஃள. அந்தோணிஸ் அட்லியர்
ஒளிப்பதிவு: பீட்ரோ வில்லானி
இசையமைப்பாளர் (பாடல்கள்): ஜெய்கார் ஹரிநாத் – அசோக் ஸ்ரீதரன்
பின்னணி இசை: ஜோயி ரெடா
பாடல் வரிகள்: கார்த்திக் நேதா, தமிழ் மணி
பாடகர்கள்: ஆர்.கே. ஆதித்யா, சஞ்சனா கல்மாஞ்சே, தீபக் ப்ளூ ரூ ஜெய்கார் ஹரிநாத்
மக்கள் தொடர்பு: டீம் ஏய்ம்
படத்தை பார்ப்போம்:
சிறுவயதிலேயே தாயை இழந்து , மீண்டும் தனிமைக்கு தள்ளப்படும் ஆண்டனி தந்தை ஜீவா ரவி மதுவுக்கு அடிமையாகி மகனைக் கண்டுகொள்ளாமல் விட, கார்த்திக் தனிமையின் இருளில் மூழ்கி நண்பர்களான ரெஜின் ரோஸ் மற்றும் ஆலம் ஷாவுடன் சுற்றித்திரிகிறான். , புகை, குடி மற்றும் நித்தம் ஒரு பாலியல் பெண்களுடனான உல்லாசம் ஒரு நாள் இரவு வரும் பாலியல் தொழிலாளியான நாயகி மதுமிதா தாஸ், அவரை கவர்ந்து விடுகிறார். அவருடன் பேசுவது, நேரத்தை செலவிடுவது ஆண்டனிக்கு பிடித்துப் போக தினம் தினம் அவரையே அழைக்கிறார். ஆண்டனி தன் மீது காட்டும் அக்கறையால் மதுமிதா தாஸுக்கும் அவர் மீது காதல் மலர்கிறது. மதுமிதாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை இருக்கும் விஷயம் அறிந்தும், இருவருக்குள்ளும் ஆழமான காதல் மலர்ந்து, எதிர்பாராத விதமாக இருவருக்கும் இடையே பெரிய விரிசலும் உருவாகிறது.மீணடும் நாயகன் தனிமையின் தள்ளப்படுகிறார் காதலர்கள் , இருவரின் வாழ்க்கை என்னவானது என்பதே இப்படத்தின் பல திருபங்களுடன் படத்தின் மீதிக்கதையாகும்.
கதையின் நாயகனாக நடித்திருக்கும் டி.ஆண்டனி மற்றும் நாயகியாக நடித்திருக்கும் மதுமிதா தாஸ், இருவரும் முதல் படத்திலேயே பலமான கதாபாத்திரங்களல் பயணித்திருக்கிறார்கள். படத்தின் பெரும்பாலான காட்சிகள் உரையாடல் ஆங்கிலம் மற்றும் நாயகி பெங்காலி மொழி பேச்சு ரசிக்கும்படி இருந்தது. நாயகன் டி.ஆண்டனி, சிறு சிறு ரியாக்ஷன்களை கூட மிக கவனமாக செய்து நடிப்பில் ஸ்கோர் செய்கிறார்கள். மற்றும் ஜீவா ரவி, ரெஜின் ரோஸ், நவ்யா சுஜி ஆகியோர் பங்களிப்பு சிறப்பாக உள்ளது
ஒளிப்பதிவாளர் பியேட்ரோ வில்லானி காட்சிகளை எளிமையாக படமாக்கியிருந்தாலும், ரசிக்கும் படியாக இருந்தது
இசையமைப்பாளர் (பாடல்கள்): ஜெய்கார் ஹரிநாத் – அசோக் ஸ்ரீதரன்
பின்னணி இசை: ஜோயி ரெடா படத்திற்க்கு பெரியபலம்.
படம் இடைவேளை முன் பார்வையாளர்க்கு பொறுமை தேவை பாலியல் தொழிலாளி உடனான காதல் என்ற மாற்றுச் சிந்தனையோடு காதல் கதையை கையாண்டிருக்கும் இயக்குநர் டி.ஆண்டனி , அதை எளிமையான முறையில் ரசிக்கும்படி சொல்லியிருந்தாலும், படத்தின் படத்தின் நீளத்தைக் கொஞ்சம் குறைத்து இருக்கலாம். மற்றும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர் பங்களிப்பு சிறப்பாக உள்ளது உங்கள் முயற்சி பாராட்டு வாழ்த்துக்கள்
மொத்தத்தில் இப்படம் வயது வந்தோர் பார்க்க வேண்டிய படம்.
ரேட்டிங் 3:5










