
பீனிக்ஸ் ஸ்டுடியோ சார்பில் டி.அசோக் தயாரித்திருக்கும் 7 ஸ்டார் பாய்ஸ் படத்தை திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் நிகில் பிரேம்ராஜ்.
இதில் ஆண்டனி வர்கீஸ்- இஸ்மாயில், ஐ எம் விஜயன்- ஐ எம் விஜயன், ஜுமானா அப்து ரஹ்மான் – ரஹீனா, லுக்மான் அவரன்- முனீர், பாலு வர்கீஸ்- தீபக், டேனிஷ் பி.கே- உமர், அமல்- குஞ்சு, பாசித்- பர்ஹான் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:-
இசை மற்றும் பின்னணி இசை – ஜேக்ஸ் பிஜாய், ஒளிப்பதிவாளர் – ஃபைஸ் சித்திக், எடிட்டர் – நௌஃபல் அப்துல்லா, பாடல் வரிகள் – தமிழ் குமரன், ராஜா குருசாமி, இணை இயக்குநர்கள் – பிரேம்நாத், பிஆர்ஒ- வேலு
கதைகரு
சிறியவர் கால்பந்து கனவையும் அவர்களின் நட்பையும் மையமாகக் கொண்டு எதார்த்தமான கதை களத்துடன் உருவாகியுள்ளது.
படத்தை பார்ப்போம்:
சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை கிராமத்தின் பெரும்பாலானவர்கள் கால்பந்தாட்ட ரசிகர்களாக இருக்கிறார்கள். அதே ஊரில் கால்பந்தை உயிராக நேசிக்கும் சிறுவர்கள் கூட்டம். எப்போது பார்த்தாலும் பந்தும் காலுமாக சுற்றித் திரியும் இவர்களுக்கு, கால்பந்தில் சாதிக்க வேண்டும் என்பது மிகப்பெரிய கனவு. தங்கள் கிராமத்தில் உள்ள மைதானத்தில் கால்பாந்து விளையாட விரும்புகிறார்கள். ஆனால், அது முடியாமல் போக, முறையான பயிற்சியும், விளையாட மைதானமும் இல்லாமல் தவிக்கும் அவர்களுக்கு ஆண்டனி வர்கீஸ் உதவ முன்வருகிறார். முன்னாள் இந்திய கால்பந்து வீரர் ஐ.எம். விஜயன் பயிற்சி அளிக்கத் தொடங்கியதும், சிறுவர்களின் கால்பந்து பயணம் புதிய திருப்பம் பெறுகிறது. அவர்கள் சந்திக்கும் போராட்டம், தடைகளும், பல திருபங்களுடன் படத்தின் மீதிக்கதை.
ஆண்டனி வர்கீஸ் உடன் அவர்களின் நண்பர்கள், கால்பந்து பயிற்சியாராக முன்னாள் இந்திய கால்பந்து வீரர் ஐ.எம். விஜயன் வருகை படத்திற்கு பெரிய பலம் சிறுவர்களின் இயல்பான நடிப்பு, குறும்பு, தோல்வி,நட்பு மற்றும் சண்டை காட்சிகள் படத்தின் மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.
இசை – ஜேக்ஸ் பிஜாய், ஒளிப்பதிவாளர் – ஃபைஸ் படத்திற்கு மிக பெரிய பலம்.
எடிட்டர் – நௌஃபல் அப்துல்லா படத்திற்கு தேவையான காட்சிகள் சேர்ந்ததுள்ளார்.
ஒரு சிறுவன் மெஸ்ஸியை ஆதர்சமாகக் கொண்டு தனது கால்பந்து கனவை நோக்கிப் பயணிக்கும் எளிய கதை.: கணிக்கக்கூடிய கதையாக இருந்தாலும், எதார்த்தமான காட்சிகளும், எளிமையான திரைக்கதையும் அடுத்தது என்ன என்ற எதிர்பார்ப்பு அனைவரும் ரசிக்கும்படி உள்ளது.
இப்படம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பார்க்கலாம்.
இப்படத்திற்கு அரசு வரிவிலக்கு அளிக்கலாம்.
ரேட்டிங் :3:5










