
வங்காள விரிகுடா-குறுநில மன்னன் படத்தின் கதை, திரைக்கதை, பாடல் வரிகள், பாடல்கள், இசை, ஒளிப்பதிவு, கலை இயக்கம், நடனம், சண்டைப் பயிற்சி (தனிநபர்), உடைகள், ஸ்டில்ஸ், ஒப்பனை, பின்னணிப் பாடல், பின்னணி இசை, தயாரிப்பு வடிவமைப்பு, தலைப்பு, சிகை அலங்காரம், வெளிப்புற அமைப்பு மேலாண்மை, தயாரித்து, இயக்கியும் இருக்கிறார் குகன் சக்கரவர்;த்தியார். இந்த படத்தில் 21 தொழில்நுட்ப துறைகளையும் தனி ஒருவராக கால்பதித்துள்ளார் .இவருடன் மக்கள் தொடர்பு: நிகில் முருகன்
படத்தை பார்ப்போம்.
தூத்துக்குடி மாவட்டத்தில் குகன்சக்ரவர்த்தி அண்ணாச்சியாக இருந்து ஊர் மகளுக்கு நல்லது செய்து வருகிறார். இந்த சூழ்நிலையில் குகன் சக்ரவர்தியார் நண்பர் வாசு விக்ரமின் பணிரெண்டாம் வகுப்பு படிக்கும் மகளை ரவுடிகளிடம் இருந்து காப்பாற்றுகிறார். கல்யாணமும் இருவருக்கும் நடக்கிறது. . திருமணமான முதல் இரவே அவருக்கு இல்லறத்தில் சோதனை வருகிறது. இதனால் மனம் உடைந்து கடற்கரையில் தனிமையில் இருக்கும் நேரத்தில் பெண் ஒருவர் தற்கொலைக்கு முயற்சிக்கிறார். அவரை காப்பாற்றிய குகனுக்கு தற்கொலைக்கு முயன்ற பெண் தனது முன்னாள் காதலி என தெரிய வருகிறது.அவரது நிலையை அறிந்த குகன் சக்கரவர்த்தி அந்த பெண்ணுடன் வாழ்வது மட்டுமின்றி அவருக்காக ஒரு கொலை செய்கிறார்.
இந்நிலையில் குகன் சக்கரவர்த்தியால் கொலை செய்யப்பட்டவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு குகனையும், காதலியையும் அடிக்கடி மிரட்டுகிறார். இதனால் குகன் அதிர்ச்சி அடைகிறார்யாராக கொலை செய்தவன் எப்படி அவன் போனிலிருந்து எப்படி மிரட்டல் யாரது என்று கண்டுபிடிக்க முயல்கின்றனர் காதலியும் குகன் சக்ரவர்த்தியும். இதன் பிறகு என்ன நடக்கிறது என்பதே படத்தின் மீதிக்கதை.
குகுன் சக்ரவர்த்தியார் நன்றாக நடித்திருப்பதோடு இசை பாடல் என்று பல தொழில்நுட்ப கலைஞராக வெற்றி பெற்றிருக்கிறார்.திரைக்கதையில் மட்டும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.குடும்ப செண்டிமென்ட் தூள் கிளப்பும் சண்டை காட்சிகள் மற்றும் சஸ்பென்ஸ் திரில்லர் என பல திருப்பங்களுடன் விறுப்பாக கதை நகர்கிறது மற்றும்
, வில்லனாக பொன்னம்பலம், திருநங்கையாக வையாபுரி, வாசு விக்ரம், டிப் லேனா, பிரபாத் சிங், அலிஷா என இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர். திரை துறையில் 21 தொழில்நுட்ப கலைஞராக கின்னஸ் சாதனை முயற்சி எல்லோரும் ரசிக்கும்படியாக
இயக்குநர் குகுன் சக்ரவர்த்தியாருக்கு பாராட்டுக்கள்.










