“வங்காள விரிகுடா” திரை விமர்சனம்.
வங்காள விரிகுடா-குறுநில மன்னன் படத்தின் கதை, திரைக்கதை, பாடல் வரிகள், பாடல்கள், இசை, ஒளிப்பதிவு, கலை இயக்கம், நடனம், சண்டைப் பயிற்சி (தனிநபர்), உடைகள், ஸ்டில்ஸ், ஒப்பனை, பின்னணிப் பாடல், பின்னணி இசை, தயாரிப்பு வடிவமைப்பு, தலைப்பு, சிகை அலங்காரம், வெளிப்புற அமைப்பு மேலாண்மை, தயாரித்து, இயக்கியும் இருக்கிறார் குகன் சக்கரவர்;த்தியார். இந்த படத்தில் 21 தொழில்நுட்ப துறைகளையும் தனி ஒருவராக கால்பதித்துள்ளார் .இவருடன் மக்கள் தொடர்பு: நிகில் முருகன்
படத்தை பார்ப்போம்.
தூத்துக்குடி மாவட்டத்தில் குகன்சக்ரவர்த்தி அண்ணாச்சியாக இருந்து ஊர் மகளுக்கு நல்லது செய்து வருகிறார். இந்த சூழ்நிலையில் குகன் சக்ரவர்தியார் நண்பர் வாசு விக்ரமின் பணிரெண்டாம் வகுப்பு படிக்கும் மகளை ரவுடிகளிடம் இருந்து காப்பாற்றுகிறார். கல்யாணமும் இருவருக்கும் நடக்கிறது. . திருமணமான முதல் இரவே அவருக்கு இல்லறத்தில் சோதனை வருகிறது...
